ஃபேஸ்புக் : காதலர்களை சேர்த்து வைக்கும் நண்பன்.!
வழக்கமாக ஃபேஸ்புக் பல காதலையும், சில நட்புகளையும் பிரித்த கதைகள் தானே நமக்கெல்லாம் தெரியும். ஃபேஸ்புக் மீதான அந்த கெட்ட எண்ணத்தை அடியோடு மாற்றும் விதமாக வெளியாகி உள்ளது ஒரு ஆய்வின் முடிவு. அந்த ஆய்வானது, ஃபேஸ்புக் பயன் படுத்தும் 'ஜோடி'கள் நீண்ட நாட்கள் ஒன்றாக இணைத்திருப்பார்கள் என்கிறது..!

அதாவது "ஐ லவ் யூ..!" என்று குறிப்பிட்டு ஸ்டேடஸ் போடுவது தொடங்கி, ஜோடியாக போட்டோ போன்ற போஸ்ட் செய்யும் ஜோடிகள், நிச்சயம் நீண்ட காலம் ஒன்றாக இணைந்து இருப்பார்கள், அவர்களுக்குள் பிரிவு வருவது மிகவும் கடினம் என்கிறது இந்த ஆய்வு..!
15 வருட வலி : பிரிந்து போன தாய் - மகனை சேர்த்த ஃபேஸ்புக் போஸ்ட்..!

அதாவது தாங்கள் இருவரும் காதல் உறவில் இருப்பதாக பொது உலகிற்கு தெரிவிக்கும் வகையில் தான் அந்த போஸ்ட்கள் இருக்கும், அதனால் அது போன்ற ஃபேஸ்புக் போஸ்ட்கள் அவர்களின் காதல் பலத்தை அதிகரிக்குமாம்..!
ஆணும் பெண்ணும் சமம் - "ஆமாம் சாமி" சொன்ன ஃபேஸ்புக்..!

மக்களே.. அதுக்காக உடனே உங்க காதல் ஜோடியுடன் 'சட்டுபுட்டு'னு ஒரு செல்பீயை எடுத்து, ஃபேஸ்புக்ல போட்டு விட்டுறாதீங்க - ஒரு போட்டோ போட்டு புட்டுக்கிட்ட காதல் கதைகள் பற்றிய ஆய்வை நடத்த வச்சிறாதீங்க..! ஓகே வா.. சொல்றது புரியுதா..!? தெளிவா.... செயல் பட்டால் யார் காதலும் உடையாது, அப்புறம் தான் இந்த ஆய்வுலாம்..!


Click it and Unblock the Notifications