எல்லையில் நடந்த பரபரப்பு: சார்.,காதலியை பார்க்கனும் ஒரு எட்டு பாகிஸ்தான் போயிட்டு வரேன்!

|

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலின் காரணமாக தனது காதலியை நேரில் காண இந்திய எல்லையை கடக்க முயன்ற மகாராஷ்டிரா இளைஞர் பாதுகாப்பு படையினரிடம் சிக்கியுள்ளார்.

பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு

பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கே கட்டுபாடுகள் விதிகக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை பார்க்க ஒருவர் நாடு விட்டு நாடு நடந்தே செல்ல முடிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

காதலாக மாறிய பேஸ்புக் நட்பு

காதலாக மாறிய பேஸ்புக் நட்பு

மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத் பகுதியை சேர்ந்தவர் சித்தி முகமது ஜிஷன், 20 வயதான இவர் பொறியியல் படிப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஷா பைசல் நகரில் உள்ள சாம்ரா என்ற பெண்ணுடன் பேஸ்புக்கில் நட்பாகியுள்ளார். காலப்போக்கில் இருவரும் காதலிக்கு ஆரம்பித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் முகமது தனது காதலியை பார்க்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் நாட்டுக்கு தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டுள்ளார்.

ஜிபிஎஸ் உதவியுடன் பயணம்

ஜிபிஎஸ் உதவியுடன் பயணம்

பாகிஸ்தான் நாட்டுக்கு மகாராஷ்டிராவில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மூலம் புறப்பட்ட முகமது ஜிபிஎஸ் உதவியுடன் குஜராத் பகுதியின் ரான் ஆஃப் கட்ச் பகுதியை அடைந்துள்ளார். அங்கு ஒரு பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பாகிஸ்தான் எல்லையை நடந்தே கடந்து செல்ல முயற்சித்துள்ளார்.

மெகா ஹேக்கிங்:ரூ.89 லட்சம் அபேஸ்: 1000 கொடுத்தால் 2000 என ட்வீட்- வாரி வழங்கிய மக்கள்!மெகா ஹேக்கிங்:ரூ.89 லட்சம் அபேஸ்: 1000 கொடுத்தால் 2000 என ட்வீட்- வாரி வழங்கிய மக்கள்!

மயங்கி கீழே விழுந்துள்ளார்

மயங்கி கீழே விழுந்துள்ளார்

முகமது சிறது தூரம் நடந்த சென்ற நிலையில் திடீரென அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை பார்த்த எல்லை பாதுகாப்புப் படையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எல்லையில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன் இளைஞரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது

கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது

அங்கு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கராச்சியில் உள்ள தனது காதலியை காண பாகிஸ்தான் செல்ல முயற்சித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இதுகுறித்து முகமது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முகமது குடும்பத்தினர் அவரை காணவில்லை என போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

file images

source: indiatoday.in

Best Mobiles in India

English summary
facebook love with pakistan girl: maharashtra Boy caught trying to cross border

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X