நான் 4 அடிதான் என்று சொன்ன காதலன்., பெண் சொன்ன பதில் என்ன தெரியுமா? திரைப்படத்தை மிஞ்சிய காதல் கதை

|

புறா தூது மூலம் காதல், கடிதம் மூலம் காதல், லேண்ட் லைன் போன் மூலம் காதல், மொபைல் போன் மூலம் காதல் இதையெல்லாம் கடந்து வந்து தற்போது சமூகவலைதளங்களில் காதல்.

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா

சமூகவலைதள காதலில் முகம் தெரியாத நபர் என்று கூறிவிட முடியாது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா போன்ற பலவற்றில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட காதல் சம்பவம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை

வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவித்ரா என்ற இளம் பெண் பவித்ரா. 23 வயதான இவர் டி.பார்ம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, பேஸ்புக்கில் விக்னேஷ்வரன் என்ற இளைஞரோடு நட்பாகியுள்ளார். இவர் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

பெண்களிடம் பேசுவது, மிரட்டுவது, பணம் பறிப்பது., இதான் தொழிலே- பேஸ்புக் இளைஞனுக்கு நேர்ந்தநிலை இதான்பெண்களிடம் பேசுவது, மிரட்டுவது, பணம் பறிப்பது., இதான் தொழிலே- பேஸ்புக் இளைஞனுக்கு நேர்ந்தநிலை இதான்

இருவருக்கும் உண்டான நட்பு

இருவருக்கும் உண்டான நட்பு

விக்னேஷ்வரன் தனது பொழுதுபோக்கிற்காகவும், தொழிலை விரிவுபடுத்தவும் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தியுள்ளார். அப்போது தான் பவித்ரா என்ற பெண்ணுடன் நட்பு கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்களாக தான் பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால் காலப்போக்கில் அது காதலாக மாறியுள்ளது.

காதல் மலரத் தொடங்கியது

காதல் மலரத் தொடங்கியது

காதல் வளரத் தொடங்கிய அந்த சமயத்தில் தான், விக்னேஷ்வரன் தனது விவரம் குறித்து தெரிவித்துள்ளார். அதில் விக்னேஷ்வரன் சுமார் 4 அடி மட்டுமே உயரம் கொண்டவர் என்பது பவித்ராவுக்கு தெரியவந்துள்ளது.

Jio ப்ரீபெய்ட்: தினமும் 1.5ஜிபி டேட்டா; ரூ.199 முதல் 365 நாட்கள் வரை! சிறப்பான திட்டங்கள் இதுதான்!Jio ப்ரீபெய்ட்: தினமும் 1.5ஜிபி டேட்டா; ரூ.199 முதல் 365 நாட்கள் வரை! சிறப்பான திட்டங்கள் இதுதான்!

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்

இதற்கான பதில் என்னவாக இருக்கும் என்று விக்னேஷ்வரன் எதிர்பார்த்த நேரத்தில், பவித்ரா அது குறித்து சிறிதும் தயக்கம் கொள்ளாமல், நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம் இதற்கு மேல் என்ன இருக்கிறது, நீங்கள் தான் என்னுடைய வாழ்க்கைத் துணை என கூறியுள்ளார்.

திருமணம் செய்து கொள்ள முடிவு

திருமணம் செய்து கொள்ள முடிவு

பவித்ரா தனது உன்னதமான காதலை தெரிவுப்படுத்திய பின், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அப்போது தான் பிரச்சனை ஆரம்பமாக தொடங்கியுள்ளது. பவித்ரா தனது காதல் குறித்து வீட்டில் தெரிவித்துள்ளார்.

வருமா., வராதா இல்ல வருவதற்கு ஏதாவது அறிகுறி இருக்கா., BSNL-ன் அந்த சேவைக்கான தேதி மீண்டும் மாற்றம்!வருமா., வராதா இல்ல வருவதற்கு ஏதாவது அறிகுறி இருக்கா., BSNL-ன் அந்த சேவைக்கான தேதி மீண்டும் மாற்றம்!

உங்கள் காதலை சுத்தமாக ஏற்க முடியாது

உங்கள் காதலை சுத்தமாக ஏற்க முடியாது

அப்போது பவித்ரா காதலிக்கும் காதலனை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து திகைத்துள்ளனர்.
உடனடியாக விக்னேஷ்வரனுக்கு எள்ளளவும் நீ பொருத்தம் இல்லை என்றும் உங்கள் காதலை சுத்தமாக ஏற்க முடியாது என்றும் அவரை மறந்து விடு என வற்புறுத்த தொடங்கியுள்ளார்கள்.

நம்மை எவராலும் பிரிக்க முடியாது

நம்மை எவராலும் பிரிக்க முடியாது

இந்த நிலையில் காதல் ஜோடிகள், மனதால் இணைந்த நம்மை எவராலும் பிரிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார்கள். இதையடுத்து பவித்ரா அதிரடி முடிவெடுத்து தங்களது பெற்றார் மற்றும் உறவினர்களை உதறி தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆசிர்வாதத்துடன் திருமணம்

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆசிர்வாதத்துடன் திருமணம்

அதன்பின் கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்கள் மற்றும் விக்னேஷ்வரனின் உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இது ஒருபுறம் இருக்க பெண்ணின் வீட்டார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அவர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளனர்.

என் மகளே எங்களுக்கு வேண்டாம்

என் மகளே எங்களுக்கு வேண்டாம்

அதன்பின் காதல் ஜோடியின் பெற்றோர்களை வரவழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பவித்ரா காதல் திருமணத்தில் உறுதியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பவித்ரா வீட்டார் இந்த திருமணத்தை ஏற்க மறுத்து என் மகளே எங்களுக்கு வேண்டாம் என கூறி சென்றுள்ளனர்.

Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்

காதல் என்ற வார்த்தையை உயிர்பிக்க செய்த பெண்

காதல் என்ற வார்த்தையை உயிர்பிக்க செய்த பெண்

அதன்பின் விக்னேஷ்வரின் குடும்பம் இந்த காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டு, தங்களது வாழ்க்கையை தொடங்க சென்றுவிட்டனர். கதாநாயகர்கள், கதாநாயகியோடு ஒப்பிட்டு தங்களது காதலை ஆரம்பிக்கும் இந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகளே காதல் என்ற வார்த்தையை உயிர்பிக்கும் விதமாக இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Facebook love succeed after girl stick on her decision: young girl married 4 feet shortman

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X