உஷார்: பேஸ்புக் காதல்: நேரில் வர சொன்ன 20வயது பெண்., இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

|

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலையடுத்து, பெண்ணை நேரில் பார்க்க மாவட்டம் விட்டு மாவட்டம் சென்ற இளைஞருக்கு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பேஸ்புக் மூலம் காதல்

பேஸ்புக் மூலம் காதல்

பேஸ்புக்கின் மூலம் நண்பர்களாகி பேசிப்பழகி காதல் ஏற்பட்டு திருமணமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது. அதேசமயத்தில் பேஸ்புக் மூலம் காதல் வலையில் விழவைத்து பண மோசடி போன்ற குற்றச்சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துக் கொண்டேதான் வருகிறது.

ஒரு வருடத்திற்கு முன்பாகவே பேஸ்புக்கில் பழக்கம்

ஒரு வருடத்திற்கு முன்பாகவே பேஸ்புக்கில் பழக்கம்

அதன்படி தற்போது பேஸ்புக் மூலம் காதல் ஆசை காண்பித்து மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அன்புச் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வினாத்குமார். 31 வயதான இவருக்கு திருச்சி காஜாமல் தெருவைச் சேர்ந்த 20 வயது ரகமத் நிஷா என்ற பெண்ணுடன் ஒரு வருடத்திற்கு முன்பாக பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மொபைல் எண்களை பகிர்ந்துக் கொண்ட நபர்

மொபைல் எண்களை பகிர்ந்துக் கொண்ட நபர்

இருவரும் பேஸ்புக் மூலம் பேசி மொபைல் எண்களை பகிர்ந்துக் கொண்டு வாட்ஸ்ஆப் வழியாகப் பேசத் தொடங்கியுள்ளனர். ஒருகட்டத்தில் வினோத்குமாரிடம் ரகமத் நிஷா தான் உங்களை உண்மையாக காதலிக்கிறேன் எனவும் தங்களை உடனடியாக நேரில் பார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் திருச்சி வந்த இளைஞர்

இருசக்கர வாகனத்தில் திருச்சி வந்த இளைஞர்

வினோத்குமாரை நேரில் பார்க்க வேண்டும் என திருச்சி அழைத்துள்ளார் ரகமத் நிஷா. இதையடுத்து வினோத்குமார் கடந்த ஐந்தாம் தேதி தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை எடுத்து திருச்சி சென்றுள்ளார்.

ஆர்டர் செய்த மொபைல் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா?-ஒரு மனசாட்சி வேண்டாமா?ஆர்டர் செய்த மொபைல் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா?-ஒரு மனசாட்சி வேண்டாமா?

வினோத்குமாரை கடத்தி சென்ற கும்பல்

வினோத்குமாரை கடத்தி சென்ற கும்பல்

திருச்சி மன்னார்புரம் பகுதியில் இருந்து ராணுவ மைதான் அருகில் நின்று ரகமத் நிஷாவை தொடர்பு கொண்டுள்ளார். அந்த சமயத்தில் ஆட்டோவில் வந்த சிலர் தங்களை ரகமத்நிஷாவின் சொந்தக்காரர்கள் என வினோத்குமாரிடம் கூறி, அவரை ஆட்டோவில் ஏற்றி ஒரு வீட்டுக்கு கடத்தி சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்ட கும்பல்

இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்ட கும்பல்

அங்கு வினோத்குமாரிடம் 1 லட்சம் ரூபாய் வேண்டும் எனவும் இல்லையென்றால் உன்னை விடுவிக்கமாட்டோம் என்றும் மிரட்டியுள்ளனர். பணமில்லை என்று வினோத்குமார் கூறியதையடுத்து அவரது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு பணத்தை கொடுத்து வண்டியை வாங்கிக் கொள் என விரட்டியுள்ளனர்.

காவல்நிலையத்தில் வினோத்குமார் புகார்

காவல்நிலையத்தில் வினோத்குமார் புகார்

இதையடுத்து திருச்சி கேகேநகர் காவல்நிலையத்தில் வினோத்குமார் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் கும்பலை மொத்தமாக பிடிக்க போலீஸ் திட்டமிட்டு, ரூ.1.லட்சம் தயாராக இருப்பதாகவும் அதை வந்து வாங்கிக் கொள்ளும்படியும் வினோத்குமார் மூலமாக தெரிவிக்க வைத்துள்ளனர்.

குற்றச் சம்வத்தில் தொடர்புடைய கும்பல்

குற்றச் சம்வத்தில் தொடர்புடைய கும்பல்

பணத்தை வாங்க வந்த கும்பலை மொத்தமாக சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் ரகமத் நிஷா, ஆசிக் 21, முகமது யாசர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ரகமத் நிஷாவுக்கும் அன்சாரி என்பவருக்கும் செப்டம்பர் 2 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது எனவும் அன்சாரியும் இந்த குற்றச் சம்வத்தில் தொடர்புடையவர் என்றும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் அன்சாரி உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மோசடி கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் அறிவுறுத்தல்

மோசடி கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் அறிவுறுத்தல்

இந்த கும்பல் இதுபோல் பேஸ்புக்கில் போலி புகைப்படங்களை பயன்படுத்தி பேசி நேரில் வரவழைத்து பணம், நகை, பொருட்களை தொடர்ச்சியாக பறித்து வந்ததும், இவர்களால் திருச்சி, தஞ்சை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. பேஸ்புக்கில் போலியான நபர்களிடம் பேசி பணம் அனுப்பவது, அவர்களது ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுவது போன்ற மோசடி கும்பல்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook Girl Cheated Man as the name of Love: Gang Arrested

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X