ஃபேஸ்புக் சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை: எதற்கு?

ஆப் டெவலப்பர்கள் பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் ஃபேஸ்தற்சமயம் ஃபேஸ்புகபுக்கிடம் முறையிட்டால் குறிப்பிட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஃபேஸ்புக் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

தற்சமயம் ஃபேஸ்புக் சார்பில் புதிய ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த திட்டம் என்னவென்றால் டேட்டா அப்யூஸ் பவுன்டி என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஆப் டெவலப்பர்கள் பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் ஃபேஸ்புக்கிடம் முறையிட்டால் குறிப்பிட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஃபேஸ்புக் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை: எதற்கு?

மேலும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பக் பவுன்டி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது பேஸ்புக் நிறுவனம். பக் பவுன்டி திட்டத்தில் பாதுகாப்பு, பிழைகள் சரி செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா:

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா:

பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக்பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து பேஸ்புக் மீதான மக்களின் நம்பிக்கை தற்சமயம் மிகவும்அதிகளவில் குறைந்து இருக்கிறது, குறிப்பாக பேஸ்புக் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளது.

 சேனல் 4 தொலைகாட்சி :

சேனல் 4 தொலைகாட்சி :

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி வெளியானதை தொடர்ந்து மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார், குறிப்பாக சேனல் 4 தொலைகாட்சி
நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 50 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அது கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி அடைவதற்கானவழிமுறைகளை தொகுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேட்டா அப்யூஸ் பவுன்டி:

டேட்டா அப்யூஸ் பவுன்டி:

குறிப்பாக ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை சேகரித்து, அவற்றை மற்றவர்களுக்கு வழங்கும் ஆதாரங்களை சேகரிப்போருக்கு, டேட்டா அப்யூஸ் பவுன்டி என்ற திட்டத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் உதவித்தொகை வழங்குகிறது. மேலும் பக் பவுன்டி திட்டம் போன்று இல்லமால், புதிய
திட்டம் ஒவ்வொரு அறிக்கையின் தாக்கத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கும் என ஃபேஸ்புக் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 40,000 டாலர்கள்:

40,000 டாலர்கள்:

இந்த டேட்டா அப்யூஸ் பவுன்டி ஊக்கத்தொகை திட்டத்தில் 40,000 டாலர்கள் வரை வழங்கப்படும் என ஃபேஸ்புக் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும். குறிப்பாக தகவல் திருட்டு உறுதிசெய்யப்பட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
பாதுகாப்பு:

பாதுகாப்பு:

பேஸ்புக் பயன்படுத்தும் அகைவரும் எந்த சிஸ்டத்தில் எல்லாம் நீங்கள் லாக் இன் செய்துள்ளீர்கள் என்ற விஷயம் இருக்கும், அதை செக்செய்து சரியான முறையில் லாக் அவுட் செய்து வைக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Facebook Launches Program to Pay People Who Report Data Abuses; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X