சரியான நேரத்தில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்த பேஸ்புக்.!

|

பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை கொண்டுவருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய அம்சங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

சரியான நேரத்தில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்த பேஸ்புக்.!

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் பயனர்கள் விர்ச்சுவல் முறையில் தீபாவளி பண்டிகை கொண்டாடும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து உள்ளது. இதில் பயனர்கள் தங்களது உறவினர்களுக்கு பிரத்யேக வாழ்த்துகளை ரெடி அவதார்களாக அனுப்பலாம்.

மேலும் இத்துடன் பயனர்கள் தன் வீட்டில் எவ்வாறு தீபாவளியை கொண்டாடினர் என்பதை விளக்கும் புகைப்படம் அல்லது விளக்கேற்றும் வீடியோக்களை படமாக்கி அதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்தகொள்ள முடியும்.

சரியான நேரத்தில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்த பேஸ்புக்.!

அதேபோல் நீங்கள் ஒருவரை டேக் செய்து சவால் விட முடியும். இவ்வாறு செய்பவர்கள் #DiwaliAtHomeChallenge எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பயனர்கள் எதிர்கொள்ளும் சாவல்களை ஏற்று தங்களது நியூஸ் பீடில் பகிர்ந்து கொண்டு மற்றவர்களை அதில் டேக் செய்து அவர்களையும் அவ்வாறு செய்ய வலியுறுத்தலாம்.

அதன்பின்பு தீபாவளி பதிவுகளின் பின்னணியில் தீபாவளி தீம் கொண்ட அவதார்களை இணைத்து கொள்ளலாம். இந்த அம்சம் பேஸ்புக் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலிகளில் பயன்படுத்த முடியும்

பின்பு இந்த ஆண்டு பேஸ்புக் (Facebook) கனெக்ட் நிகழ்வின் போது பேஸ்புக் நிறுவனம் உலகின் மிகப் பெரிய கண் கண்ணாடி பிராண்டான ரே-பான் (Ray-Ban) நிறுவனத்துடன் கூட்டு சேருவதாக அறிவித்திருந்தது.

நிறுவனம், ஏ.ஆர் / வி.ஆர் மாநாட்டின் போது தனது கூட்டாட்சியை உறுதிப்படுத்தி, வரும் 2021ம் ஆண்டில் ரே-பான் பிராண்டட் ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்கி வெளியிடுவதாக அறிவித்தது. இது பேஸ்புக் மற்றும் எசிலோர்லூசோட்டிகா (EssilorLuxottica) ஆகியவற்றின் கூட்டணியின் கீழ் உருவாகும் முதல் தயாரிப்பாகும்.

சரியான நேரத்தில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்த பேஸ்புக்.!

எசிலோர்லூசோட்டிகா என்பது ரே-பான் நிறுவனத்தின் தாய் நிறுவனமாகும். இதுவும் தனியாக ரெய்பான் போன்ற கண் கண்ணாடிகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. பேஸ்புக் கூறுகையில், இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள் நுகர்வோருக்கு AR அனுபவத்தை வழங்கக்கூடியது. ஆனால் இது AR சாதனமாக வகைப்படுத்தப்படாது, இருப்பினும் ஸ்னாப்சாட்டின் ஸ்பெக்டாக்கிள்ஸைப் போல செயல்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

மக்களுக்கு நெருக்கமானவர்களுடன் இணைவதற்குச் சிறந்த வழிகளை வழங்கக்கூடிய சாதனங்களை ஆராய்வதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அணியக்கூடிய சாதனங்கள் அதைச் செய்வதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளன, EsilorLuxottica உடன் கூட்டு சேர்ந்து, அவர்களின் உலகத் தரம் வாய்ந்த பிராண்ட் பட்டியலில் முதல் உண்மையான நாகரீகமான ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட தயாறிக்கொண்டிருக்கிறோம் என்று பேஸ்புக் கூறியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Facebook launches new features this Diwali and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X