Zoom-ஐ விடுங்க மக்களே பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்.! என்ன தெரியுமா?

|

கொரோனா காலத்தில் பல்வேறு மக்கள் வீட்டில் இருந்து வேலை செய்துவருகின்றனர், அவ்வாறு வீட்டில் இருந்து வேலை செய்யும் மக்கள் Zoom வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலியை அதிகமாக பயன்படுத்தி வந்தனர், குறிப்பாக பல மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது இந்த செயலி. அதுமட்டும் இல்லாமல் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு செயலிகளும்
பல புதிய பயனர்களைப் பெற்றுள்ளன.

Google Meet என சிறப்பான

தற்போது இந்த வீடியோ கால் சேவைகளின் தேவையை அறிந்து பல முன்னணி டெக் நிறுவனங்களும் தங்கள் சேவைகளைப் புதிப்பித்தும் பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியும் வருகின்றன. அந்தவகையில் கூகுள் நிறுவனம் தனது Hangouts செயலியை மேம்படுத்தி Google Meet என சிறப்பான வசதிகளுடன் வெளியிட்டுள்ளது.

வீடியோ காலிங்

மேலும் Zoom-செயலிக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனமும் தனது பொழுதுபோக்கு செயலியான Facebook Gaming செயலியைக் கடந்த வாரம்
அறிமுகம் செய்தது. தற்போது பேஸ்புக் மற்றொரு சேவையுடன் களத்தில் இறங்கியுள்ளது. அது என்னவென்றால், பேஸ்புக்தனது சாட்டிங் செயலியான Messenger-ல் வீடியோ காலிங் வசதிக்கான புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது.

வோடபோன் ரூ.299, ரூ.449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் திட்டங்களில் இருமடங்கு டேட்டா அறிவிப்பு.! ஆனால்..வோடபோன் ரூ.299, ரூ.449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் திட்டங்களில் இருமடங்கு டேட்டா அறிவிப்பு.! ஆனால்..

பேஸ்புக் பயனர்களுக்கு

அதன்படி மெசென்ஜரை அப்டேட் செய்த பின் வீடியோ கான்ஃபரன்ஸிங் செய்வதற்கான வசதி செயலியில் இருக்கும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது குறிப்பிட்ட பேஸ்புக் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்க்டாப்

குறிப்பாக இந்தியாவுக்கு இந்த வசதி தரப்பட்டுள்ளதா என சோதனை செய்தபோது, ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப்
இரண்டிலும் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதி தரப்படவில்லை. மேலும் கூடிய விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் இந்த
சேவை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதியில் 50 பேர் வரை ஒரு சாட்டிங் ரூமில் இணைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது பேஸ்புக்.

ஏற்கெனவே பிரைவசி சார்

பேஸ்புக் நிறுவனம் ஏற்கெனவே பிரைவசி சார்ந்த பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது, இந்த நிலையில் Zoom-க்கான மாற்று என பேஸ்புக் இருக்க வேண்டுமென்றால், பேஸ்புக் அளிக்கும் இந்த வசதியில் பிரைவசி சார்ந்த பிரச்னைகள் இருக்கக் கூடாது,இதற்கு ஃபேஸ்புக் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட பதிலில், பயனர்கள் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதியைப் பயன்படுத்தும்போது அவை யாவும் கண்காணிக்கப்படாது எனத் தெரிவித்துள்ளனர்.

இதான் சரியான நேரம்: கிராமப்புறங்களில் 4 ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்த ஏர்டெல் திட்டம்!இதான் சரியான நேரம்: கிராமப்புறங்களில் 4 ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்த ஏர்டெல் திட்டம்!

 மக்களிடம் நல்ல வரவேற்ப்பு இருக்கும்

Zoom-செயலியும் அன்மையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது, எனவே பல்வேறு மக்கள் இந்த செயலியை பயன்படுத்துவதில்லை,எனவே பேஸ்புக் கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதி பாதுகாப்புடன் செயல்படும் என்றால், மக்களிடம் நல்ல வரவேற்ப்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
Facebook launches "Messenger Rooms'' for group video calls: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X