2018: இந்தியாவில் பேஸ்புக் வாட்ச் அறிமுகப்படுத்த திட்டம்.!
பேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் இந்த பேஸ்புக் வாட்ஸ் வீடியோ சேவையை இந்தியாவில் வெளியிடும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் பேஸ்புக் வாட்ச் வீடியோ சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, மேலும் இந்த சேவைப் பொறுத்தவரை தற்சமயம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது, எனவே இந்த பேஸ்புக் வாட்ச் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
பேஸ்புக் நிறுவனம் பொறுத்தவரை தற்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்பின்பு இந்தியாவில் பல மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது இந்த பேஸ்புக், மேலும் இப்போது கொண்டுவரும் இந்த பேஸ்புக் வாட்ச்பொறுத்தவரை அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

2018:
பேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் இந்த பேஸ்புக் வாட்ஸ் வீடியோ சேவையை இந்தியாவில் வெளியிடும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

பேஸ்புக் வாட்ச் ;
பின்வரும் காலங்களில் யூடியூப் போலவே பேஸ்புக் வாட்ச் மிகப் பெரிய வெற்றியைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த சேவைப் பொறுத்தவரை அனைவருக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக் வாட்ச் சிறப்பு:
பேஸ்புக் வாட்ச் பொறுத்தவரை பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன, பொதுவாக பேஸ்புக் ஆப் மற்றும் பேஸ்புக் டெஸ்க்டாப் வெர்ஷன் போன்றவற்றில் இதனைப் பார்க்க முடியும். அதன்பின் லைவ் மற்றும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் இவற்றில் பார்க்க
முடியும்.

கமெண்ட்ஸ்:
இவற்றில் அனைத்துவிதமான வீடியோக்களுக்கும் கமெண்ட்ஸ் மற்றும் ரியாக்ஷன் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளது, பேஸ்புக்கில் இடம்பெற்றுள்ள அனைத்து வசதியும், பேஸ்புக வாட்ச்-இல்இடம்பெற்றுள்ளது.

அமேசான் மற்றும் ஹாட்ஸ்டார்:
அமேசான் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற சேனல்களில் பல்வேறு நிகழ்சிகள் மற்றும் நேரடி ஒளிபரப்பு போன்ற அனைத்தும் இடம்பெற்றுள்ளன, இப்போது அந்த வரிசையில் பேஸ்புக் வாட்ச் நேரடி ஒளிபரப்பு மற்றும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகள்:
புதிய படைப்பாளிகள், கலைஞர்கள் ஆகியோரின் நிகழ்ச்சிகள் தயாரிக்க ஊக்கவிக்கிறது பேஸ்புக் நிறுவனம், மேலும் யூடியூப் வீடியோவை எப்படிபணமாக மாற்றமுடியுமோ அதேபோல் இவற்றில் வீடியோகளை கொண்டு பணமாக மாற்றமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேஸ்புக் விளம்பரம் மூலம் அதிக வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications