ஃபேஸ்புக்கில் 'பேசினால்' போதும்..!

Written By:

ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு வேற லெவலில் இயங்கி வருகின்றது என்று தான் கூற வேண்டும், பேபால் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான டேவிட் மார்கஸ் தலைமையில் இந்த செயலி பண பறிமாற்றம், வாய்ஸ் காலிங் போன்ற அம்சங்களை வழங்கியதோடு இந்த பட்டியலில் புதிய சேவையை இணைக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

ஃபேஸ்புக்கில் 'பேசினால்' போதும்..!

ஃபேஸ்புக் நிறுவனம் தற்சமயம் விர்ச்சுவல் அசிஸ்டன்ட் எனும் புதிய அம்சத்தினை வழங்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் இந்த சேவை மனிபென்னி என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சம் ஆப்பிளின் சிரி, கூகுள் நௌ மற்றும் கார்டனா போன்று செயல்படும் என்றும் அவைகளுக்கு போட்டியாக அமையும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த சேவை வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட தகவல்களை கேட்க அனுமதிக்கின்றது, இதன் மூலம் பயனாளிகள் பொருட்களை வாங்குவது, மற்றும் சேவைகளை பற்றி அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த அம்சம் எவ்வாறான சேவைகளை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது..

 

Read more about:
English summary
Facebook is working on integrating a virtual assistant, internally known as ‘Moneypenny’, into the messaging platform.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot