முதன் முறையாக 'டிஸ்லைக் ஆப்ஷன்'-அறிவித்தது பேஸ்புக்.!

முதன் முறையாக தனது பயனாளர்களுக்காக டிஸ்லைக் ஆப்ஷனை அறிவித்துள்ளது பேஸ்புக்.

By Ilamparidi
|

உலகுவாழ் மக்கள் பெரும்பான்மையோரை தனது பயனாளர்களாகக் கொண்டதும்,முன்னணி சமூக வலைத்தளங்களுக்குள் ஒன்றுமான முகநூல் நிறுவனமானது, மக்களால் அதிகப்படியாகப் பயன்படுத்தக்கூடிய ஒன்றுமாகும்.

இந்த முகநூல் நிறுவனமானது காலச் சூழலிற்கு ஏற்ப தனது வலைத்தளத்தில் தனது பயனாளர்களுக்காக புதிய அம்சங்களையும்,அப்டேட்களையும் சேர்த்த வண்ணமே உள்ளது.

அதிகப்படியான பயனாளர்களைக் கொண்டிருப்பதற்கு இத்தகைய செயல்களும் ஓர் குறிப்பிடத் தகுந்த காரணமாகும்.அத்தகைய முகநூல் நிறுவனம் தனது பயனாளர்களுக்காக இப்போது 'டிஸ்லைக்' ஆப்ஷனை அறிவித்துள்ளது.

அதுகுறித்த தகவல்கள் கீழே.

முகநூல்:

முகநூல்:

பிப்ரவரி 2004 ஆம் துவங்கப்பட்ட முகநூல் நிறுவனமானது,இன்றைய சூழலில் அதிகப்படியான வளர்ச்சியை அடைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.காரணம்,உலகின் முன்னணி காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் ஆகியவைகளும் இப்போது முகநூலில் தமக்கான கணக்கினைத் துவக்கி அதனை வழியே மக்களிடம் செய்திகளைப் பகிர்ந்துகொள்வதே இதற்கு சான்றாகும்.

அனைவருக்குமான பொதுத்தளம்:

அனைவருக்குமான பொதுத்தளம்:

மேலும்,முகநூல் நிறுவனமானது உலகின் எங்கோ ஓர் முலையில் இருப்பவரை உடனடியாகத் தொடர்புகொள்ளவும் மேலும் வேறெந்த கட்டணங்களுமின்றி இணைய வசதி மட்டும் கொண்டு உலகின் மறு மூலையில் உள்ளவரையும் எளிதாக்கத் தொடர்புகொள்ள ஓர் சிறந்த வழியாக விளங்குவதோடு மட்டுமன்றி,சமூகத்தில் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய விடயங்கள் குறித்தும் தமது கருத்துக்களை பிறரிடத்தே பகிர்ந்துகொள்ளவும் ஓர் சிறந்த அடித்தளமாக விளங்குகின்றன.

புதிய அம்சங்கள்:

புதிய அம்சங்கள்:

பொழுபோக்கு அம்சங்கள் மட்டுமன்றி தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தல்,முகநூல் வழியாகவே வேலைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருதல் உள்ளிட்ட பல பயனுள்ள வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.அதுமட்டுமன்றி,'பேஸ்புக் லைவ்' உள்ளிட்ட அம்சங்கள் தொலைவிலுள்ள உறவினர்கள் தம் முகம் பார்த்து அவர்களிடம் பேசிடவும் வழி ஏற்படுத்தித் தந்துள்ளன.

முதன் முறையாக 'டிஸ்லைக்':

முதன் முறையாக 'டிஸ்லைக்':

பேஸ்புக் துவங்கி இத்தனை ஆண்டுகள் அதன் வலைத்தளத்தில் தனது பயனாளர்களின் பதிவுகளுக்கு 'டிஸ்லைக்' செய்கிற வசதியினை அது ஏற்படுத்தித் தரவேயில்லை.அதற்கான காரணம்,பயனாளர்களின் மத்தியில் அது எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்திவிடக்கூடும் என்பன போன்றவற்றால் தான்.பேஸ்புக் நிறுவனர் மார்க்கும் தனது வலைத்தளத்தில் இத்தகைய எதிர்மறைத் தாக்கத்தினை ஏற்படுத்திடக்கூடிய எத்தகைய முயற்சியினையும் எடுத்திட விரும்பவில்லை.டிஸ்லைக் போன்ற வசதிகளைக் கொண்டிறாத சமூக வலைத்தளங்களில் முதன்மையானது பேஸ்புக் ஆகும்.ஆனால் தற்போது தனது பயனர்களுக்காக இம்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதலில் மெஸஞ்சர்:

முதலில் மெஸஞ்சர்:

பேஸ்புக் பயனாளர்களின் பதிவுகளுக்கு டிஸ்லைக் செய்கிற வசதியினை முதலில் தனது மெசஞ்சரில் அறிமுகப்படுத்தியுள்ளது.உலகம் முழுமைக்கும் 100 கோடி அளவிலான பேர் பயன்படுத்துகிற தனது மெஸஞ்சரில் கிடைத்திடும் இதற்கான வரவேற்பினைப் பொறுத்து தனது வலைத்தளத்திலும் அறிமுகப்படுத்த உள்ளது.இதுகுறித்து பேஸ்புக்,"நாங்கள் பயனாளர்கள் மகிழ்வாக பயன்படுத்திட மெஸஞ்சரில் புதுப்புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் தான் உள்ளோம்.அதனில் மற்றுமோர் முயற்சிதான் இதுவுமென" கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

தற்கொலை முயற்சிகளைத் தடுக்க பேஸ்புக்கின் புதிய வழி.!

Best Mobiles in India

English summary
Facebook Is Testing A 'Dislike' Emoji Button For Messenger.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X