அதிவேக இணைய வசதியை வழங்கும் பேஸ்புக் நிறுவனம்.!
பேஸ்புக் கொண்டுவந்துள்ள இந்த டெராகிராஃப் தொழில்நுட்பத்தை குவால்காம் நிறுவனம் தனது சிப்செட்களில் விரைவில் பொருத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி அனைத்து நாடுகளிலும் அதிவேக இன்டர்நெட் வசதியை கொண்டுவர பேஸ்புக் நிறுவனம் பல்வேறு ஆய்வுகள் மறறும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் டெராகிராஃப் எனும் புதிய தொழில்நுட்ப வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் பொறுத்தவரை மில்லிமிட்டர்-வேவ்லென்த் 60ஜிகாஹெர்ட்ஸ் வயர்லெஸ் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இப்போது இருக்கும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தை விட அதிவேக இணைய வசதியை வழங்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
இப்போது பயன்பட்டு வரும் இணையவேகத்தை விட, அதிவேக இணைய வேகத்தை கொடுக்கும் தன்மை கொண்டுள்ளது இந்த டெராகிராஃப் வசதி. மேலும் இந்த புதிய தொழில்நுட்பம் உலகம் முழுவதும அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் கொண்டுவந்துள்ள இந்த டெராகிராஃப் தொழில்நுட்பத்தை குவால்காம் நிறுவனம் தனது சிப்செட்களில் விரைவில் பொருத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேஸ்பக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்திற்கான சோதனைகளை வரும் 2019-ஆம் ஆண்டில் துவங்கும் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக டெராகிராஃப் தொழில்நுட்பத்தின் மூலம் 60 ஜிகாஹெர்ட்ஸ் பிராட்காஸ்ட் உபகரணங்களை உற்பத்தியாளர்கள் உருவாக்க முடியும், பின்பு இவற்றின் அதிர்வலையை பயன்படுத்தி அதிகபட்சம் 300 மீட்டர் முதல் 500 மீட்டர் தூரம் வரை நொடிக்கு 20 முதல் 40 ஜிபி வரையிலான வேகத்தை வழங்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் இடையூறு இல்லாமல் இணைய வசதியை குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது இந்த புதிய தொழிலநுட்பம்.

டெராகிராஃப் சோதனை செய்யப்பட்ட இருக்கும் இடம் குறித்து பேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஆனாலும் விரைவில் இந்த புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications