Jio மூலம் இந்தியாவிற்குள் நுழைய Facebook செலவளித்தது இத்தனை ஆயிரம் கோடியா?

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது நிறுவனத்தின் 10 சதவீத பங்கை பேஸ்புக் அல்லது கூகிள் நிறுவனத்திற்கு விற்கக்கூடும் என்று கடந்த மாதம் தகவல்கள் வெளியானது. அந்த தகவல் தற்பொழுது உண்மையாகியுள்ளது, உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்கை சுமார் 43,574 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் பங்கை வாங்கியது

பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் பங்கை வாங்கியது

ஜியோவின் இந்த விற்பனை நடவடிக்கைகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் (RIL) இன் கடன் சுமையைக் கண்டிப்பாகக் குறைக்க உதவும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோல், பேஸ்புக் நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய இந்தியச் சந்தையில் கால்பதித்து ஒரு உறுதியான இடத்தை பிடிக்க இந்த ஒப்பந்தம் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.

எத்தனை ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது ஜியோவின் பங்கு

எத்தனை ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது ஜியோவின் பங்கு

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்கிலிருந்து சுமார் 5.7 பில்லியன் டாலருக்கு மதிப்பிலான 9.9 சதவீத பங்கை பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது, இந்திய மதிப்பின் படி இந்த ஒப்பந்தத்தின் விலை சரியாக 43,574 கோடி ரூபாய் ஆகும். இந்த ஒப்பந்தத்தால் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு 65.95 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel மலிவான விலையில் 28 நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டங்கள்!Airtel மலிவான விலையில் 28 நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டங்கள்!

மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு

மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு

இந்தியத் தொழில்நுட்ப துறையில் நடைபெறும் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு இந்த ஒப்பந்தம் என்று ஜியோ கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து பேஸ்புக் நிறுவனம் கூறுகையில், "இந்த முதலீடு இந்தியா மீதான எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மேலும் இந்த ஒப்பந்தம் இந்தியாவில் ஜியோவால் தூண்டப்பட்ட வியத்தகு மாற்றத்தால் ஏற்பட்ட எங்கள் உற்சாகத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

60 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களுக்கு வாய்ப்பு

60 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களுக்கு வாய்ப்பு

புதிய வழிகளில் மக்களை இணையும் ஜியோவுடன் இணைய நாங்கள் விரும்பி இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளோம். பேஸ்புக் உதவி இந்தியாவில் அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியா முழுவதும் சுமார் 60 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது எங்கள் இலக்கு" என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்!Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்!

இந்த ஒப்பந்தம் வெறும் முதலீட்டு ஒப்பந்தம் இல்லை

இந்த ஒப்பந்தம் வெறும் முதலீட்டு ஒப்பந்தம் இல்லை

இந்த ஒப்பந்தம் வெறும் முதலீட்டு ஒப்பந்தமாக மட்டுமின்றி, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பேஸ்புக்கின் வாட்ஸ்அப் சேவை ஆகிய சேவைகளை இணைத்து, வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஜியோமார்ட் வலைத்தளம் மூலம் புதிய அளவில் வணிகத்தை விரிவுபடுத்தி, சிறு வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சேர்த்து இந்த ஒப்பந்தம் கையெழுதிடப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது.

மிக குறுகிய காலத்தில் அதிவேகமாக வளர்ச்சி

மிக குறுகிய காலத்தில் அதிவேகமாக வளர்ச்சி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முகேஷ் அம்பானியால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக மிக குறுகிய காலத்தில் அதிவேகமாக வளர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி இந்தியாவில் இதுவரை கண்டிடாத பெரும் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிவேக வளர்ச்சிக்கு காரணம்

அதிவேக வளர்ச்சிக்கு காரணம்

ஜியோவின் அதிவேக வளர்ச்சிக்குகாரணம் மக்களுக்கு இந்நிறுவனம் வழங்கிய இலவச வாய்ஸ கால் அழைப்பு, அளவில்லா இலவச டேட்டா, திரைப்படங்கள், விளையாட்டுகள் மற்றும் இசை உள்ளிட்ட பல புதுமையான முயற்சிகள் மூலம் ஜியோ நிறுவனம் சுமார் 340 மில்லியன் வாடிக்கையாளர்களை தன வட்டத்திற்குள் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facebook Is Entering Into India By Buying 10 Percentage Stake From Reliance Jio Platforms : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X