பேஸ்புக்: ரூ.29 ஆயிரத்திற்கு அக்யூலஸ் க்யூஸ்ட் VR ஹெட்செட் அறிமுகம்.!

அக்யூலஸ் கோ-வில் அளிக்கப்பட்ட அம்சங்களில் பெரும்பாலானவை, இந்த புதிய VR ஹெட்செட்டிலும் பேஸ்புக் நிறுவனம் அளித்துள்ளது.

|

அக்யூலஸ் க்யூஸ்ட் சாதனத்தில், ஒரு கண்ணிற்கு 1600 x 1440 பிக்சல்ஸ் என்ற ஒத்த டிஸ்ப்ளே பகுப்பாய்வு காணப்படுகிறது.

சமீபத்தில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட்டை, பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சமூக வலைத்தள ஜாம்பவான் நிறுவனமான பேஸ்புக் அறிமுகம் செய்த இந்த அக்யூலஸ் க்யூஸ்ட் VR ஹெட்செட்டிற்கு $399 (ஏறக்குறைய ரூ. 29 ஆயிரம்) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்: ரூ.29 ஆயிரத்திற்கு அக்யூலஸ் க்யூஸ்ட் VR ஹெட்செட் அறிமுகம்.!

இந்த அக்யூலஸ் க்யூஸ்ட் VR ஹெட்செட்டின் அறிமுகம் குறித்து, பேஸ்புக் நிறுவனம் கூறுகையில், "உலகில் சர்வ சாதாரணமாக எந்தொரு திசையிலும் நடமாடும் வகையில், சுதந்திரமாக ஆறு கோணங்களிலும் சுற்றி பார்க்க கூடிய விதத்தில் அனைத்தும் ஒன்றில் அமைந்த VR அமைப்பை கொண்டதாக இது உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்யூலஸ் கோ-வில் அளிக்கப்பட்ட அம்சங்களில் பெரும்பாலானவை, இந்த புதிய VR ஹெட்செட்டிலும் பேஸ்புக் நிறுவனம் அளித்துள்ளது. அக்யூலஸ் க்யூஸ்ட் சாதனத்தில், ஒரு கண்ணிற்கு 1600 x 1440 பிக்சல்ஸ் என்ற ஒத்த டிஸ்ப்ளே பகுப்பாய்வு காணப்படுவதோடு, ஒரு மிஞ்சிய காட்சி இதத்தை அளிக்கும் இடைவெளி மாற்றி அமைக்க கூடிய ஒரு லென்ஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்தர பகுப்பாய்வு கொண்ட டிஸ்ப்ளே மூலம் காட்சி தரம் மற்றும் எதார்த்தமான காட்சி அனுபவத்தையும் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த VR காட்சிப்படுத்து அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், உயர்தரத்திலான உள்ளக ஆடியோவை மேம்படுத்தி, ஆழமான பாஸ் உடன் கவர்ச்சிகரமான ஒலியை அளித்துள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்யூலஸ் கூறுகையில், அக்யூலஸ் க்யூஸ்ட்-டை அறிமுகம் செய்துள்ளதன் மூலம் தரமான முதல் தலைமுறைச் சேர்ந்த VR ஹெட்செட் தயாரித்துள்ளோம். VR-யை பெறுவதற்கு, அக்யூலஸ் கோ எளிமையான மற்றும் மிகவும் மலிவான தயாரிப்பாக தொடர்கிறது. அதே நேரத்தில் அக்யூலஸ் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கக் கூடிய எல்லைகளை கடக்க உதவுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் VR ஹெட்செட் மூலம் காட்சிப்படுத்தலில் மட்டும் மேம்பாடு காட்டப்படாமல், பயனரின் அனுபவத்தை ஒட்டுமொத்தமாக மேம்பாட்டை காட்டுகிறது.

ஆல் -இன் -ஒன் VR சாதனத்தில் டச் கன்ட்ரோலர்கள் இருப்பதால், மக்களுடன் தொடர்பு கொள்வது பயனர்களுக்கு எளிதாவதோடு, இயற்கை முறையாக உள்ளது. மேலும் பேஸ்புக் அளிக்கும் 50-க்கும் மேற்பட்ட கேம்களை பெற்று, அக்யூலஸ் க்யூஸ்ட்டுக்கான இன் ஸ்டோர் அனுபவத்தை பெற முடிகிறது.

இது குறித்து அந்நிறுவனம் மேலும் கூறுகையில், "தற்போது சிறந்த இவ்விரு அனுபவங்களையும் ஒன்றிணைக்க முடிந்துள்ளதோடு, இன்னும் அதிக மக்களை VR சமூகத்திற்குள் அழைத்து வர எங்களுக்கு அக்யூலஸ் க்யூஸ்ட் உதவி உள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.


இந்தியாவிற்கு எப்போது இந்த புதிய அக்யூலஸ் க்யூஸ்ட்-டை, பேஸ்புக் நிறுவனம் கொண்டு வர போகிறது என்பது இப்போதுக்கு தெரியவில்லை. அதே நேரத்தில் வரும் 2019 ஆண்டு VR ஹெட்செட் சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளது என்ற ஊகம் நிலவுகிறது. இது குறித்து செய்திகளை தொடர்ந்து தெரிந்து கொள்ள எங்கள் இணையதளத்தை தொடர்ந்து வாசியுங்கள்.

Best Mobiles in India

English summary
Facebook introduces Oculus Quest VR headset for Rs 29,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X