மறவாமல் வாக்குச் செலுத்துங்கள்' விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது பேஸ்புக்.!

Written By:

தற்போது இந்தியாவினுள் உத்திர பிரதேசம்,உத்திரகாண்ட்,பஞ்சாப்,மணிப்பூர் போன்ற மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான கோவா விற்கும் மாநில அளவிலான தேர்தல் நடைபெற உள்ளது.

அதையொட்டி முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் நடைபெறவிருக்கிற தேர்தல்களில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும் வாக்கு செலுத்துவதின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்திடவும் தமது வலைத்தளத்தில் புதிய வசதிகளை ஏற்படுத்தவிருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
செய்திப்பகுதியில்:

செய்திப்பகுதியில்:

தேர்தல் நாள் அன்று வாக்கு செலுத்துவதனை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் நினைவுபடுத்தும் விதமாக அவர்களின் நியூஸ் பீட் பகுதியில் தேர்தல் நாள் இன்று என்ற செய்தி இடம்பெறும் விதமாக செய்திப்பகுதியானது மாற்றியமைக்கப்படும்.இது போதுமான வரை எல்லோரிடமும் தேர்தல் நாளன்று வாக்கு செலுத்தவேண்டுமென்ற நினைவை ஏற்படுத்தும்.

வாக்கு செலுத்தியதனையும் பகிரலாம்:

வாக்கு செலுத்தியதனையும் பகிரலாம்:

மேலும் தேர்தலில் வாக்கு செலுத்தியவர்கள் தாம் வாக்கு செலுத்தியதனையும் பகிர்ந்து கொள்கிற வசதியும் ஏற்படுத்தப்படும்.இதன் வாயிலாக பிறருக்கும் தாங்களும் வாக்களிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும்.மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் லின்க் வழங்கப்பட்டு இருப்பதால் வாக்காளர்கள் தாம் வாக்கு செலுத்தவேண்டிய வாக்குச் சாவடி உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.இதுவும் பயனளிக்கக்கூடிய ஒன்றே.

இதுகுறித்து பேஸ்புக்:

இதுகுறித்து பேஸ்புக்:

இதுகுறித்து இந்தியாவிற்கான பேஸ்புக்கின் பப்ளிக் பாலிசி இயக்குனர் அன்கிதாஸ் கூறுகையில்"தேர்தலில் அனைவரும் பங்கேற்று வாக்களிப்பதனை நாங்கள் விரும்புகிறோம் வாக்களிப்பதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவே புதிய கருவிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் எனக்கூறினார்.

அரசியலாளர்களும்:

அரசியலாளர்களும்:

தேர்தலும் தேர்தலில் அனைவரும் பங்கேற்று வாக்களிக்க வேண்டியதின் அவசியத்தை சமூகத்திலுள்ள அரசியல்வாதிகளும் தேர்தலில் பங்கேற்று போட்டியிடுகின்ற வேட்பாளர்களும் தமது கருத்துக்களை சற்று விரிவாகவும் பகிர்ந்து கொள்கிற வகையில் புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக்.

சமூகவலைத்தளங்களின் பங்கு:

சமூகவலைத்தளங்களின் பங்கு:

தேர்தல் உள்ளிட்ட சமூகத்தினைப்பற்றிய தங்களது கருத்துக்கள் அனைத்தையும் மக்கள் இன்றைக்கு பெரும்பாலும் சமூக வலைதளங்கள் வழியாகவே பகிர்ந்து கொள்கின்றனர் அந்த வகையில் சமூகத்தில் நடைபெறுகிற எந்த ஒரு முக்கிய நிகழ்விலும் இவற்றின் ஆதிக்கம் உண்டு.அத்தகைய வலைதளங்கள் இவை போன்றவற்றை முன்னெடுப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இனி உங்கள் பேஸ்புக் பாஸ்வேர்ட் இன்னும் பலமானதாகும்.! எப்படி.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Facebook introduces new tools to encourage voting in India.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot