புதிய இயக்குனர் பொறுப்பேற்பு- வேற லெவல் அனுபவம்., அதீத நம்பிக்கையுடன் பேஸ்புக் இந்தியா!

|

சமூகவலைதளமான பேஸ்புக் இந்தியாவின் பொது கொள்கை இயக்குனராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் அகர்வால் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பேஸ்புக் அறிக்கையில் பயனர் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை உள்ளிட்ட இந்திய பேஸ்புக்கிற்கான முக்கிய கொள்கை மேம்பாட்டு முயற்சிகளை பொது கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகர்வால் 26 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாகவும், உத்தரபிரதேசம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக பணியாற்றியுள்ளார் என பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

பேஸ்புக் இந்தியா பொதுக்கொள்கை

பேஸ்புக் இந்தியா பொதுக்கொள்கை

பேஸ்புக் நிறுவனம் தனது பேஸ்புக் இந்தியா பொதுக்கொள்கை இயக்குனராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் அகர்வாலை நியமித்துள்ளது. பேஸ்புக் பயனர்களின் பாதுகாப்பு, டேட்டா பாதுகாப்பு, தனிநபர் உரிமை மற்றும் இன்டர்நெட் நிர்வாகம் குறித்த கொள்கைகளை அவர் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 26 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இவர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய போது அறிவுசார் சொத்து உரிமை காப்பு குறித்து இந்தியாவின் முதலாவது தேசிய கொள்கை கொண்டு வந்திருக்கிறார்.

பாதுகாப்பான இணையம்

பாதுகாப்பான இணையம்

இந்தியாவின் கட்டமைப்பில் ஆழமாக மூழ்கியுள்ளோம் என்பதை உணர்கிறோம் எனவும் நாட்டில் உள்ள அனைவருக்கும்ம் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான இணையத்தை உருகாக்க தங்களுக்கு உதவ வாய்ப்பிருப்பதாகவும் ராஜீவ் அகர்வால் தனது அனுபவத்தின் மூலம் பேஸ்புக்கில் வெளிப்படை தன்மை, உத்தரவாதம் உள்ளிட்டவைகளை அதிகரிக்க உதவுவார் என பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது கொள்கை குழு

பொது கொள்கை குழு

பொது கொள்கை குழுவை வழிநடத்த ராஜீவ் அகர்வால் தங்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சியடைவதாகவும், நிபுணத்துவம், அனுபவத்துடன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல், அதிகாரம் மற்றும் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவதற்கான தங்களது பணிக்கு மேலும் உதவுவார் எனவும் நம்புவதாக பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் இந்தியா கொள்கை

பேஸ்புக் இந்தியா கொள்கை

கடந்தாண்டு அக்டோபர் மாதம் இறுதியில் பேஸ்புக் இந்தியா கொள்கையின் முன்னாள் தலைவர் அங்கி தாஸ் தனது பதவியில் இருந்து விலகிய சில மாதங்களுக்கு பிறகு ராஜீவ் அகர்வால் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இந்திய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. இதை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் மே 25 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது. மத்திய அரசு குறிப்பிட்ட பெரும்பாலான விஷயங்களை சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை.

குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள்

குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள்

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டது. கூ என்ற இந்திய சமூகவலைதளம் தவிர வேறு எந்த முன்னணி சமூகவலைதளம் நிறுவனத்தின் குறைகளை கேட்கும் அதிகாரி போன்ற எதையும் நியமிக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இடையீட்டாளர்கள் என்ற நிலை

இடையீட்டாளர்கள் என்ற நிலை

இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இடையீட்டாளர்கள் என்ற நிலை சமூகவலைதளம் இழக்க நேரிடும். மேலும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகும். தனிநபர் கணக்குகள் தனிச்சையாக முடக்குதல், மத ரீதியான அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கை, பாலியல் புகார்கள் போன்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மாதத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன அவற்றில் எத்தனை தீர்க்கப்பட்டன போன்ற அறிக்கையும் சமூகவலைதளம் தரவில்லை. சில சமூகவலைதளங்கள் கால அவகாசம் கோரின.

புதிய சமூக ஊடக விதிகள்

புதிய சமூக ஊடக விதிகள்

புதிய சமூக ஊடக விதிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு, அரசின் பாதுகாப்பு விவகாரம், பாலியன் புகார் போன்ற சர்ச்சை பதிவுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற சமூகவலைதள புதிய திருத்தம் வழிவகுக்கும். மேலும் இந்த விவகாரத்தை தீர்க்க நாட்டில் ஒரு அதிகாரி நியமித்து புகார்களை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் (இந்தியாவில் வசிக்கும் ஊழியர்கள்) ஆகியோரை நியமிக்க அனைத்து சமூகவலைதளத்திற்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது.

Best Mobiles in India

English summary
Facebook India Appoints Former IAS Rajiv Aggarwal as Head of public Policy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X