ஜியோவின் 10 சதவீத பங்கை பேஸ்புக் வாங்கப் போகிறதா? அம்பானியின் அடுத்த திட்டம் என்ன?

|

இந்திய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் 10% பங்கை வாங்க, உலக பிரபல முன்னணி சமூக ஊடக தளமான பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 10 சதவீத பங்கின் மதிப்பு சுமார் பில்லியன் டாலர் மதிப்பிற்கும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு

இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இந்திய மதிப்பு சுமார் ரூ.5,000 கோடி முதல் ரூ.5,350 கோடி வரை இருக்கக்கூடும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இந்த பங்கு மதிப்பிலிருந்து 10 சதவீதத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடமிருந்து பேஸ்புக் வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத பங்கை விற்க ஜியோ முடிவு

10 சதவீத பங்கை விற்க ஜியோ முடிவு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற செய்தி பரவிக்கொண்டிருக்கும் வேளையில், மறுகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடனும் ஏதோ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜியோவின் 10 சதவீத பங்கை வாங்க இரண்டு நிறுவனங்களுடன் ஜியோ பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று உறுதியாகத் தெரியவில்லை.

அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 98-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்.!அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 98-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்.!

இரண்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை

இரண்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, உலகளாவிய பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று தகவல் வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறிய ஜியோ

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறிய ஜியோ

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 372 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டராக ஜியோ மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus 8 ப்ரோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பெஞ்ச்மார்க்கிங் மதிப்பெண் இது தான்!OnePlus 8 ப்ரோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பெஞ்ச்மார்க்கிங் மதிப்பெண் இது தான்!

பேஸ்புக் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பு

பேஸ்புக் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பு

பேஸ்புக் போன்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை, இந்தியாவுக்குள் நுழைவதில் இருக்கும் சிக்கல்களையும், சவால்களையும் ஜியோ போன்றதொரு நிறுவனத்தால் மிக எளிதாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

அம்பானியின் திட்டம் என்ன?

அம்பானியின் திட்டம் என்ன?

இந்த பேச்சுவார்த்தை பேஸ்புக் நிறுவனத்திற்குச் சாதகமாக அமையுமா இல்லை கூகிள் நிறுவனத்திற்குக் கைசேருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கு பின்னால் அம்பானியின் திட்டம் என்ன என்பதும் இன்னும் யாருக்கும் சரியாக தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
Facebook In Talks To Buy 10 Percentage Stake From Reliance Jio : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X