இந்தியாவில் பல மில்லியன் மக்கள் பேஸ்புக் அதிகமாக பயன்படுத்துகின்றனர், இப்போது இந்தியாவில் இரத்த தானம் செய்வதை எளிதாக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சியை கொண்டுவந்துள்ளது. இந்தப் பயன்பாடு அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.
இந்தியாவில் இரத்த தானத்தை ஊக்குவிக்கும் விதமாக புதிய அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம், மேலும் சில தன்னார்வ அமைப்புகள், ரத்த வங்கிகள் மற்றும் கொடையாளர்களுடன் ஒருங்கிணைந்து ரத்த தானத்தை எளிதாக்கும் புதிய முயற்சியை உருவாக்கியுள்ளது
பேஸ்புக் நிறுவனம்.
ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் அவசரமான சூழ்நிலையில் இந்த சேவை கண்டிப்பாக உதவும் என பேஸ்புக நிறுவனர் மர்க் ஸக்கர்பெர்க்
தகவல் தெரிவித்தார்.
இரத்த கொடையாளர்கள் பேஸ்புக் மூலம் இதில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும், அதன்பின் இரத்தம் தேவைப்படும் சூழ்நிலையில் அருகிலுள்ள கொடையாளருக்கு தகவல் அனுப்பப்படும் அவர்கள் மூலம் இரத்த தானத்தைப் பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.
English summary
Facebook helps blood donation go viral ; Read more about this in Tamil GizBot
Story first published: Sunday, October 1, 2017, 4:02 [IST]