இந்தியாவில் கற்றதை பிற நாடுகளில் அமல்படுத்துவோம் - கூகிள் மற்றும் பேஸ்புக் உறுதி!

|

அமெரிக்காவைச் சேர்ந்த கூகிள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் தங்களின் முதலீட்டை அண்மையில் முதலீடு செய்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது சுந்தர் பிச்சை மற்றும் மார்க் ஜூக்கர்பெர்க் இந்தியாவை உயர்த்தி வாழ்த்தியுள்ளனர்.

தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், சுந்தர் பிச்சை

சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் ஆகிய இருவரும், இந்தியாவில் துவங்கிய வணிக மாதிரி போன்ற சேவையைப் பிற நாடுகளிலும் துவங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இப்பொழுது நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

மார்க் ஜூக்கர்பெர்க்

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் கூறியதாவது, ''இந்தியாவில் ஆயிரக்கணக்கான சிறு கடைகள் மற்றும் சிறு வணிகங்கள் இருக்கிறது, இவற்றுடன் 'வாட்ஸ் ஆப்' மூலம் இணைந்து வர்த்தகம் செய்வதற்காகக் கிடைத்த வாய்ப்பு உற்சாகமளிக்கிறது. ஜியோவுடன் சேர்ந்து இதை நாங்கள் செய்துள்ளோம், இந்தியாவில் கற்றதைப் பிற நாடுகளிலும் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்'' என்று கூறியுள்ளார்.

65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

 வாட்ஸ் ஆப்

இந்தியாவில் ஏராளமானோர், வாட்ஸ் ஆப் பயன்பாட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் ஜியோவுடன் வாட்ஸ்அப் கூட்டுச் சேர்ந்து அங்குள்ள சிறு வணிகர்கள் மற்றும் தனிநபர்களை ஒன்றிணைக்கும் புதிய மார்க்கெட்டிங் சேவையைத் துவங்கியுள்ளோம். இதன்படி பயனர்கள் வாட்ஸ் ஆப் மூலம் பொருட்களை வாங்கவும்; விற்கவும் இப்பொழுது அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த சேவை மிக வேகமாக வளரக்கூடிய ஒரு வணிக வாய்ப்பாகும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார்.

75,000 கோடிக்கு மேல் முதலீடு

கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியதாவது, ''வளர்ந்து வரும் இந்தியாவின், 'டிஜிட்டல்' பொருளாதாரத்தை அதிகரிக்கும் வகையில், அடுத்து வரவிற்கும் ஆண்டுகளில் சுமார் 75,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யக் கூகிள் திட்டமிட்டுள்ளது'' என்று அவர் கூறியுள்ளார்.

ஒன்பிளஸ் சீன நிறுவனமா? உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா?ஒன்பிளஸ் சீன நிறுவனமா? உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா?

ஜியோ நிறுவனத்துடன் கூட்டு

ஜியோ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவில் அனைவரும் ஸ்மார்ட்போன் சாதன பயன்பாட்டிற்கு மாறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளோம் என்றும், இதை இப்பொழுது முதற்கட்டமாகத் துவங்கியுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Facebook, Google Bet On Jio Pact To Tap Into Opportunities In India To Take It Global : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X