60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்ட பேஸ்புக்.!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு பயனர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்.

|

பேஸ்புக் பொறுத்தவரை உலக நாடுகள் முழுவதும் அதிகள மக்கள் பயன்படுத்துகின்றார்கள், குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக்பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து பேஸ்புக் மீதான மக்களின் நம்பிக்கை தற்சமயம் மிகவும்அதிகளவில் குறைந்து இருக்கிறது, குறிப்பாக பேஸ்புக் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கின.

60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்ட பேஸ்புக்

இந்நிலையில் 60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம். மேலும் இந்த சர்ச்சை குறித்து தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது. அது என்னவென்றால் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு பயனர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்.

60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்ட பேஸ்புக்

பேஸ்புக் பொறுத்தவரை உலக நாடுகளில் பிரபலமாவதற்கு முன்பே ஆப்பிள், சாம்சங் போன்ற 60 செல்போன் நிறுவங்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மேலும் பேஸ்புக் செயலியை பயன்படுத்தும் அலைபேசி நிறுவன தயாரிப்பு போன்களில் பயன்படுத்தும் பயனாளர்கள் மற்றும் அவரது நன்பர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் பேஸ்புக் நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன்
பகிர்ந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்ட பேஸ்புக்

மேலும் பிளாக்பெரி ஹெச்டிசி, மைக்ரோசாஃப்ட்,அமேசான், சாம்சங் போன்ற 60 நிறுவனங்கள் பேஸ்புக் தகவல்களை பயன்படுத்தி வந்ததாக அந்நிறுவனத்தின் சேவை பிரிவு துணை தலைவர் ஐம் ஆர்கிபாங் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் டெராகிராஃப் எனும் புதிய தொழில்நுட்ப வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் பொறுத்தவரை மில்லிமிட்டர்-வேவ்லென்த் 60ஜிகாஹெர்ட்ஸ் வயர்லெஸ் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இப்போது இருக்கும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தை விட அதிவேக இணைய வசதியை வழங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பேஸ்புக் கொண்டுவந்தாலும் மக்கள் பேஸ்புக் மீதான நம்பிக்கை குறைந்து இருக்கிறது.

60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்ட பேஸ்புக்

இப்போது பயன்பட்டு வரும் இணையவேகத்தை விட, அதிவேக இணைய வேகத்தை கொடுக்கும் தன்மை கொண்டுள்ளது இந்த டெராகிராஃப் வசதி. மேலும் இந்த புதிய தொழில்நுட்பம் உலகம் முழுவதும அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் கொண்டுவந்துள்ள இந்த டெராகிராஃப் தொழில்நுட்பத்தை குவால்காம் நிறுவனம் தனது சிப்செட்களில் விரைவில் பொருத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்திற்கான சோதனைகளை வரும் 2019-ஆம் ஆண்டில் துவங்கும் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Best Mobiles in India

English summary
Facebook gave over 60 phone companies deep access to data on users and friends : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X