Home
News

பேஸ்புக்கில் பழகிய மாணவியைக் கடத்தி பாலியல் தொந்தரவு செய்த இளைஞர்கள்.!

பேஸ்புக் மூலம் நண்பர்களாகப் பேசி பழகி, நேரில் வரச்சொல்லி இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் தொந்தரவு செய்த பேஸ்புக் நண்பன் மற்றும் அவர்களின் நண்பர்கள் மூன்று பேரை காருடன் காவல்துறை கைது செய்துள்ளது.

பொள்ளாச்சி: பேஸ்புக் மூலம் நண்பர்களாகப் பேசி பழகி, நேரில் வரச்சொல்லி இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் தொந்தரவு செய்த பேஸ்புக் நண்பன் மற்றும் அவர்களின் நண்பர்கள் மூன்று பேரை காருடன் காவல்துறை கைது செய்துள்ளது.

பொள்ளாச்சியில் உள்ள ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்த சபரி என்கிற ரிஷ்வந்த் தனியார் கல்லூரியில் சிவில் எஞ்சினீரிங் படித்து வருகிறான், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக் இல் நண்பராகப் பழகி வந்துள்ளான்.

போனில் தொடர்பு

போனில் தொடர்பு

சபரி சென்ற வாரம் அந்த பெண்ணை போனில் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளான் சபரி. கடந்த 12 ஆம் தேதி அப்பெண்ணை ஊஞ்சவேலாம்பட்டியில் தனக்காகக் காத்திருக்குமாறு அவன் தெரிவித்துள்ளான்.

காரில் பெண்ணை கடத்திய நண்பர்கள்

காரில் பெண்ணை கடத்திய நண்பர்கள்

வசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28), திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் ஊஞ்சவேலாம்பட்டி வந்த சபரி, மாணவியை தாராபுரம் சாலையில் காரில் அழைத்துச் சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை மிரட்டி வற்புறுத்தி ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

பாலியல் தொந்தரவு

பாலியல் தொந்தரவு

மொபைல் போனில் எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களைக் காட்டி மனைவியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகைப்படத்தை மாணவியிடம் காட்டி பாலியல் உறவுக்கு இணங்குமாறும் அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

மாணவியின் நகை பறிப்பு

மாணவியின் நகை பறிப்பு

காரில் கூச்சலிடத் துவங்கிய மாணவியை பெரியாக்கவுண்டனூர் அருகே உள்ள சாலையில் இறக்கி விட்டு, அவரிடமிருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும், அழைக்கும் இடத்திற்கு நேரில் வரவேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர்.

காவல்நிலையத்தில் புகார்

காவல்நிலையத்தில் புகார்

தாங்கள் சொல்வதைச் செய்ய மறுத்தால் மாணவியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்அப்லோடு செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து இவர்களின் மிரட்டலைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காருடன் கைது

காருடன் கைது

இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கிய காவல்துறை, மூவரையும் ஒன்றாகப் பிடிக்கத் திட்டமிட்டுக் காத்திருந்து, சபரி, வசந்த்குமார், சதீஸ்குமார் ஆகிய மூவரையும் ஜோதிநகர் பகுதியில் காவல்துறையினர் கருடன் கைது செய்துள்ளனர், தப்பித்து ஓடிய திருநாவுக்கரசைத் தேடி வருகின்றனர்.

புதிய டிராய் விதியின் கீழ் டாடா ஸ்கை சேனல்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

புதிய டிராய் விதியின் கீழ் டாடா ஸ்கை சேனல்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

டிராய் புதிய விதியின் கீழ் சேனல்களை பயனர்கள் தேர்ந்தெடுக்க மார்ச் 31 வரை கால அவகாசத்தை நீடித்துள்ளது. புதிய நிபந்தனையின் கீழ் அடிப்படை தொகையாக ரூ.130 உடன் ஜிஎஸ்டி சேர்த்து நடைமுறைக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் பல பயனர்களுக்கு சேனல்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

டாடா ஸ்கை

டாடா ஸ்கை

டாடா ஸ்கை பயனர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் டாடா ஸ்கையின் பிரத்தியேக மொபைல் செயலியைப் பயன்படுத்தி சேனல்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி டாடா ஸ்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா ஸ்கை வலைத்தளம் பயன்படுத்தி எப்படி சேனல்களை தேர்வு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

செயல்முறை:

செயல்முறை:

1.டாடா ஸ்கை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

2. அல்லது இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் https://packselection.tatasky.com/PRRedirect/PRWebMQ?_ga=2.153809009.853175044.1550505957-1668817277.1550505957%E2%80%99%20link.

சந்தாதாரர் ஐடி

சந்தாதாரர் ஐடி

3. சந்தாதாரர் ஐடி அலல்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை என்டர் செய்யுங்கள்.

4. உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓ.தி.பி எண்ணை என்டர் செய்யுங்கள்.

மூன்று சேனல் விருப்பங்கள்

மூன்று சேனல் விருப்பங்கள்

5.இப்போது நீங்கள் தேர்ந்தெடுக்க மூன்று விருப்பங்கள் காட்டப்படும்.

6. பரிந்துரைக்கப்பட்ட சேனல்கள், டாடாஸ்கை சேனல்கள் மற்றும் எல்லா சேனல்களும் என்று விருப்பம் தரப்படும்.

சேனல்ஸ்

சேனல்ஸ்

7. பரிந்துரைக்கப்பட்ட சேனல்கள் மற்றும் டாடாஸ்கை சேனல்கள் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேனல் பேக்கள்.

8. உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்ய ஆள் சேனல்ஸ் கிளிக் செய்யுங்கள்.

சப்மிட்

சப்மிட்

9. பிடித்தமான சேனல்களை தேர்வு செய்தபின் மேல் மூலையில் உள்ள விலை பட்டியலை சரி பார்த்து கொள்ளுங்கள்.

10. இப்பொழுது சப்மிட் கிளிக் செய்யுங்கள். தற்பொழுது உங்கள் தேர்வுக்கான விலையை செலுத்த ஆப்ஷன்கள் கொடுக்கப்படும், உங்களின் பேங்கிங் விபரங்களை எனத் செய்து உங்களுக்கான டாடா ஸ்கை சேனல் பேக்கை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Facebook Friendship Sexual harassment Three arrested : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X