பேஸ்புக்கில் அடுத்தவர்களின் Profile-ஐ பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்கு நற்செய்தி
பேஸ்புக்கில் (Facebook) யாரோ ஒருவருடைய ப்ரொபைலை (Profile) நீங்கள் தேடிப் பார்ப்பவராக இருந்தால், மெட்டா (Meta) நிறுவனம் உங்களுக்கான நற்செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த பழக்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது. இதனால் அண்மையில் எழுந்த சர்ச்சைக்கு பிறகு, இப்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது எல்லாம், உங்களுக்கு வங்கியில் அக்கவுண்ட் இல்லை என்றாலும், யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லை என்று சொல்லி பாருங்களேன், உங்களை மேலும் கீழும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். அந்த அளவுக்கு, பேஸ்புக் பயன்பாடு நம்மிடையே பரவலாகிவிட்டது. சொல்லப்போனால், பேஸ்புக் வைத்திருப்பவர்கள், ஒரு நாளைக்கு குறைந்தது 1 மணி நேரமாவது அதை பயன்படுத்திவிடுவார்கள்.

பேஸ்புக்கில், ஸ்டோரிஸ் பார்ப்பது, வீடியோ பார்ப்பது, மீம்ஸ்கள் படிப்பது மட்டுமல்லாமல், பலருக்கு வேறொருவருடைய ப்ரொபைலை பார்ப்பது ஒரு பழக்கமாக இருக்கும். நீங்களும் கூட புதிதாக யாரையாவது நேரில் சந்தித்தாலோ அல்லது பிரபலங்கள் யாரையாவது உங்களுக்கு பிடித்துப்போனாலோ அவர்கள் பேஸ்புக்கில் இருக்கிறார்களா? என்று தேடி பார்த்திருப்பீர்கள்.
அப்போது, அவர்களின் பெயர்களில் இருக்கும் யாரோ ஒருவருடைய ப்ரொபைலையும் பார்க்க வேண்டியிருக்கும். இப்படி செய்துவருவோர்களுக்கு, அண்மைகாலமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, நீங்கள் யாருடை ப்ரொபைலை பார்க்கிறீர்களோ அவர்களுக்கு உங்களிடம் இருந்து ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் (Friend Requests) சென்றால் எப்படி இருக்கும்?. அப்படித்தான் உலகம் முழுவதும் வேறொருவரின் ப்ரொபைலை பார்த்த அனைவரிடம் இருந்தும், அந்த ப்ரொபைல் அக்கவுண்ட்டுக்கு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் சென்றுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பேஸ்புக் யூசர்கள், இதுகுறித்து மெட்டா நிறுவனத்திடம் புகார் கொடுத்துவந்தனர். இதனால், மெட்டா நிறுவனமும் அதனுடைய தொழில்நுட்ப குழுவினரை வைத்து ஆய்வு செய்ததில், பேஸ்புக்கில் தொழில்நுட்ப பிழை (Bug) இருப்பது கண்டறியப்பட்டது. இது பேஸ்புக் யூசர்களின் தனியுரிமை கொள்கைக்கு எதிராக இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் அந்த பிழையை சரிசெய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டது.
அதன்பின் அந்த பிழையை சரிசெய்து விட்டதாக அறிவித்தது. இதுகுறித்து மெட்டா தரப்பில், பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக பேஸ்புக் ஆப்-பை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறோம். இதனால், சில பிழைகள் ஏற்பட்டு, தனிச்சையாக பேஸ்புக் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் சென்றுள்ளதை அறிகிறோம். இதை எங்களது தொழில்நுட்ப குழு உடனடியாக சரிசெய்துவிட்டது.
யூசர்களின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பேஸ்புக்கில் தன்னிச்சையாக ஆபாச விளம்பரங்கள் வருவதாக பல யூசர்கள் புகார்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதை சரிசெய்யும் பணியிலும் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதுதொடர்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








