விசாரணைப்பிடிக்குள் சிக்கிய பேஸ்புக்; தப்பிக்குமா நமது பேஸ்புக் அக்கவுண்ட்கள்.?

50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட மற்றும் இதர டேட்டா திருட்டு சார்ந்த குற்றச்சாட்டின்கீழ், பேஸ்புக் நிறுவனமான மீதான அதிகாரப்பூரவமான விசாரணையை அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன் உறுதிப்படுத்தியுள்ளது.

|

50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட மற்றும் இதர டேட்டா திருட்டு சார்ந்த குற்றச்சாட்டின்கீழ், பேஸ்புக் நிறுவனம் மீதான அதிகாரப்பூரவமான விசாரணையை அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன் உறுதிப்படுத்தியுள்ளது.

விசாரணைப்பிடிக்குள் சிக்கிய பேஸ்புக்; தப்பிக்குமா Fb அக்கவுண்ட்கள்.?

நேற்று (திங்களன்று) வெளியான அறிக்கையில் "பேஸ்புக் டேட்டா திருட்டு சார்ந்த கவலைகள் அதிகரித்து வருவதால், இதை மிக தீவீரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக" அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன் கூறியிருந்த நிலைப்பாட்டில், இன்று பேஸ்புக் மீதான ஒரு திறந்த பொது விசாரணை நிகழவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

"தனியுரிமை ஷீல்ட்" உடன்படிக்கைக்கு இணங்காத நிறுவனம்.!

இந்த தகவலை அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷனின் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குனரான, டாம் பஹ்ல் நோட்டிங் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் விளைவாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான தரவு பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தும் "தனியுரிமை ஷீல்ட்" உடன்படிக்கைக்கு இணங்காத நிறுவனம், நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷனின் சட்டத்தை மீறுகின்ற "நியாயமற்ற செயல்களை" மேற்கொள்ளும் நிறுவனம் போன்றே பல கோணங்களில் பேஸ்புக் நிறுவனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பதில் அளிக்க தயார்.!

பதில் அளிக்க தயார்.!

பேஸ்புக் நிறுவனத்தின் துணை தனியுரிமை தலைமை அதிகாரியான ராப் ஷெர்மன், கடந்த வாரம் ஒரு செய்தியில் கூறியதாவது, "மக்களின் தகவலைப் பாதுகாப்பதில் சமூக வலைத்தளங்கள் உறுதியுடன் உள்ளது", "அதில் அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷனுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், அதற்கு பதில் அளிக்க நாங்கள் ஆவலுடன் உள்ளோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இசைவு ஒப்பந்தத்தை பேஸ்புக் மீறியதாக குற்றச்சாட்டு.!

இசைவு ஒப்பந்தத்தை பேஸ்புக் மீறியதாக குற்றச்சாட்டு.!

ஒரு வாரத்திற்கு முன்பு, மில்லியன் கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் விளைவாக 2011-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இசைவு ஒப்பந்தத்தை பேஸ்புக் மீறியதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. அதன் அடிப்படையில் கடந்த 2014 -ஆம் ஆண்டில், பேஸ்புக் நிறுவனம் கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவிற்கு தரவுகளை வழங்கியது உண்மையா என்ற கோணத்தில் விசாரணை நடக்கவுள்ளது. பேஸ்புக்கின் தலை தப்பிக்குமா.? அல்லது துண்டிக்க படுமா என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும்.

2011ஆம் ஆண்டு இசைவு ஒப்பந்தம்.?

2011ஆம் ஆண்டு இசைவு ஒப்பந்தம்.?

கடந்த 2011-ல், பேஸ்புக் வழியாக மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு பயனர்களின் டேட்டா அதிக அளவில் பகிரப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன. அதன் ஒரு பகுதியாக பேஸ்புக்கில் நிகழ்த்தப்பட்ட சில தனியுரிமை மாற்றங்கள் சார்ந்த வாக்குறுதிகள் தான் 2011ஆம் ஆண்டு இசைவு ஒப்பந்தம் எனப்படுகிறது.

How to check PF Balance in online (TAMIL)
சுமார் 50 பில்லியன் டாலர்கள் வரையிலான இழப்பு.!

சுமார் 50 பில்லியன் டாலர்கள் வரையிலான இழப்பு.!

கடந்த மார்ச் 21-ஆம் தேதியன்று, பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியாக மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கின் இந்த டேட்டா கசிவு குற்றசாட்டை ஒப்புக் கொண்டார் என்பதும், அந்த அறிவிப்பின்ற்கு பின்னர், பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 6 சதவிகிதம் குறைந்தும், அதன் விளைவாக சுமார் 50 பில்லியன் டாலர்கள் வரையிலான இழப்புகள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facebook faces formal probe for Cambridge Analytica data leak in US. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X