மார்க் செயல் சுத்தப்படாது: கோபமடைந்த பேஸ்புக் ஊழியர்கள் வெளிநடப்பு- என்ன நடக்கிறது?

|

கடந்த வாரம் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் எடுத்த முடிவை எதிர்த்து சில பேஸ்புக் ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள்

பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள்

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ப்ளாய்ட் காவல்துறை கைது நடவடிக்கையின்போது கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொடூர கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருப்பின அடக்குமுறைக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறி நடக்கும் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.

அரசுக்கு எதிராக கண்டித்து முழக்கம்

அரசுக்கு எதிராக கண்டித்து முழக்கம்

மினபொலிஸ் நகரில் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து, அரசுக்கு எதிராக கண்டித்து முழக்கமிட்டனர். நியூயார்க் நகரில் லட்சக்கணக்கானோர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு பேரணியாக சென்றனர். கொரோனா பரவல் நேரத்தில் போராட்டம் நடந்தது.

இந்தியருக்கு 1லட்சம் டாலர்கள் சன்மானம் வழங்கிய ஆப்பிள் நிறுவனம்.! காரணம் இதுதான்.!இந்தியருக்கு 1லட்சம் டாலர்கள் சன்மானம் வழங்கிய ஆப்பிள் நிறுவனம்.! காரணம் இதுதான்.!

போராட்டம் நடத்தியவர்கள் கைது

போராட்டம் நடத்தியவர்கள் கைது

போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர். அதேபோல் புரூக்ளின் பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி, போலீசார் விரட்டியடித்தனர். அந்த பகுதியில் வன்முறை வெடித்தது.

வெள்ளைமாளிகை முன்பாக திரண்டு போராட்டம்

வெள்ளைமாளிகை முன்பாக திரண்டு போராட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன், வெள்ளைமாளிகை முன்பாக திரண்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு கருதி வெள்ளை மாளிகையிலுள்ள சுரங்க அறைக்கு அதிபர் ட்ரம்ப் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டார் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு சுரங்க அறையில் சுமார் ஒரு மணி நேரம் ட்ரம்ப் தங்கவைக்கப்பட்டார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்

அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக தனது டுவிட்டர், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நேரத்தில் சர்ச்சை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் பதிவு பெரும் விவாதத்துக்கு உள்ளானது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்படும்

துப்பாக்கிச்சூடு நடத்தப்படும்

டிரம்ப் பதிவிட்ட பதிவானது., போராட்டம் என்ற பெயரில் கருப்பின மக்கள் கடைகளை சூறையாடினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என அவர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு வன்முறையானது என டுவிட்டர் பக்கம் அமெரிக்க அதிபர் டுவிட்டை நீக்கியது.
இருப்பினும் பேஸ்புக் இந்த பதிவை நீக்காமல் இருந்தது.

மார்க் சக்கர்பெர்க் மீது கடும் விமர்சனங்கள்

மார்க் சக்கர்பெர்க் மீது கடும் விமர்சனங்கள்

பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மீது கடும் விமர்சனங்களை குவித்தது. பேஸ்புக் எதற்காக பதிவை நீக்கவில்லை என மார்க் சக்கர்பெர்க் பதிலளித்தார்., அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் பதிவு அரசு அறிவிப்பாகவே உள்ளது எனவும் இந்த பதிவு பேஸ்புக் சட்டத்திட்டங்களுக்கு புறம்பானதாக இருக்கிறது என தான் கருதவில்லை எனவும் மார்க் தெரிவித்திருந்தார்.

பேஸ்புக் ஊழியர்கள் வெளிநடப்பு

பேஸ்புக் ஊழியர்கள் வெளிநடப்பு

மார்க் இந்த கருத்து பேஸ்புக் ஊழியர்களை திருப்தி படுத்தவில்லை. இதையடுத்து டிரம்ப்-ன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேஸ்புக் ஊழியர்கள் மார்க் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் பேஸ்புக் ஊழியர்கள் தங்கள் முடிவை வெளிகாட்டும் விதமாக வெளிநடப்பு செய்துள்ளனர்.

சுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள்! நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்?சுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள்! நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்?

வெளிநடப்பு செய்த ஊழியர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை

வெளிநடப்பு செய்த ஊழியர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை

வெளிநடப்பு செய்வதன் ஒரு பகுதியாக, ஊழியர்கள் ஒருநாள் வேலையை விட்டு வெளியேறினர். இருப்பினும் ஊழியர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சம்பளத்தை குறைப்பது, நேரத்தை குறைப்பது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லலை என்பது குறிப்பிடத்தக்கது.

source: cnn.com

Best Mobiles in India

English summary
Facebook employees staged a virtual walkout on Mark Zuckerberg's decision

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X