Facebook-ல் அதை இலவசமாக வெளியிட பேச்சுவார்த்தை: மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பு

|

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் முக்கிய செயல்பாடு குறித்து உலக சுகாதார நிறுவனம், அமெரிக்க நோய் கட்டுப்பாடு தடுப்பு மையங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவிதத்துள்ளார்.

இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழப்பு

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா, அதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி பிரிட்டன், ஸ்விட்சர்லாந்தில் முதல் முறையாக கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 160 பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் 160 பேருக்கு கொரோனா

மேலும் ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, எகிப்து போன்ற நாடுகளிலும் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்க அரசு இந்திய மதிப்பில் 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல்: தி பெஸ்ட் பிளான்-தினசரி 2ஜிபி டேட்டா.!பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல்: தி பெஸ்ட் பிளான்-தினசரி 2ஜிபி டேட்டா.!

3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு

3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு

இதில் ஈரானில் மட்டும் 3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. மேலும் அங்கு 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக 13 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது, 30 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

31 மாகாணங்களுக்கும் வேகமாக பரவியது

31 மாகாணங்களுக்கும் வேகமாக பரவியது

சீனாவில் கொரோனா வைரஸ் 31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது. இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 3119 ஆக உயர்ந்துள்ளது.

புதியரக ஹெல்மெட்

புதியரக ஹெல்மெட்

புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஜனவரி மாதத்திற்கு பிறகு நேற்று மிகக்குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி புதிதாக 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா நோயாளிகளை கண்டறியும் வகையில் சீனாவில் புதிய ரக ஹெல்மெட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவாமல் இருக்க உச்சக்கட்ட நடவடிக்கை

கொரோனா பரவாமல் இருக்க உச்சக்கட்ட நடவடிக்கை

இந்த நிலையில் கொரோனா பரவாமல் இருக்க அனைத்து நாட்டு அரசாலும் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தொலைபேசி காலர்டியூன் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம்

ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம்

ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம் கேட்கிறதா ஒருவருக்கு போன் செய்ததும் ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம் கேட்டால் அச்சம் கொள்ள வேண்டாம். பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைப்புகளில் மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த செயல்படுத்தப்பட்டிருக்கும் நடவடிக்கையாகும்.

அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!

பேஸ்புக் இலவச விளம்பரம் குறித்த பேச்சுவார்த்தைகள்

பேஸ்புக் இலவச விளம்பரம் குறித்த பேச்சுவார்த்தைகள்

கொரானா வைரஸ் மற்றும் அதன் பரவுவது குறித்து துல்லியமான தகவல்களை பேஸ்புக்கில் இலவச விளம்பரமாக பதிவு செய்ய பேச்சுவார்த்தைகள் உலக சுகாதார நிறுவனம், அமெரிக்க நோய் கட்டுப்பாடு- தடுப்பு மையங்கள் ஆகியவற்றுடன் நடந்து வருவதாக, தமது பேஸ்புக் பக்கத்தில் மார்க் ஜூக்கர்பர்க் பதிவு செய்துள்ளார்.

Best Mobiles in India

English summary
FB discussing to WHO about free advertisement for corona awareness

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X