தலிபான்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது..! பேஸ்புக் நிறுவனம்.!

|

வாட்ஸ்அப், பேஸ்புக் தளங்களை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் தலிபான்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது சார்ந்த விவரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆப்கானிஸ்தானை அண்மையில்

அதாவது ஆப்கானிஸ்தானை அண்மையில் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு விரைவில் தலிபான்கள் ஆட்சி அமைக்க
உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து அங்கிருந்த பொதுமக்கள் வெளிநாட்டிற்கு செல்லபல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் தலிபான்களின் பேஸ்புக்

மேலும் சமீபத்தில் தலிபான்களின் பேஸ்புக் கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. அதாவது அமெரிக்காவின் சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்தியர்களுக்கான பிரத்தியேக அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்.. இனி பேமெண்ட்டில் கூட 'இதை' செய்யலாம்..இந்தியர்களுக்கான பிரத்தியேக அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்.. இனி பேமெண்ட்டில் கூட 'இதை' செய்யலாம்..

தலிபான்களுக்கு ஆதரவாக

அதேபோல் தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவோரின் பேஸ்புக் கணக்குகளும், பதிவுகளும் நீக்கும் பணியை துவங்கி இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் தலிபான்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலி பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டிவிஸ்ட நாமளே எதிர்பார்க்கல.! இவ்வளவு குறைவான மலிவு விலையில் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா?இந்த டிவிஸ்ட நாமளே எதிர்பார்க்கல.! இவ்வளவு குறைவான மலிவு விலையில் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா?

 ஆப்கானிஸ்தானில் இருந்து

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது வந்தது. அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடடா, பார்க்கவே அப்படி இருக்கு: அடுத்த மாதம் வெளியாகும் ஐபோன் 13 விலை இதுவா?- ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!அடடா, பார்க்கவே அப்படி இருக்கு: அடுத்த மாதம் வெளியாகும் ஐபோன் 13 விலை இதுவா?- ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

போது தலிபான்கள் ஆப்கனைத்

மேலும் இப்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பின்பு இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. ஆனால் தலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். பின்பு உங்களது வழக்கமான வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள். அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் போன்ற சூழலில் வாழ ஆசையா? நாசா செய்த பிரமாண்ட ஏற்பாடு.! செவ்வாய் போன்ற சூழலில் வாழ ஆசையா? நாசா செய்த பிரமாண்ட ஏற்பாடு.! "இவர்கள்" மட்டும் விண்ணப்பிக்கலாம்.!

 உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும்

இருந்தபோதிலும் உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளைதொடங்கின. பின்பு ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒருவித அசாதாரண சூழல் நிலவி வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facebook disables Taliban WhatsApp accounts: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X