கோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.!
பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இணைய உலகில் போலி செய்திகளின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது, இதனை குறைக்கும் முயற்சியில்
பல்வேறு நிறுவனங்களுட் தனியார் அமைப்புகளும் மும்முரம் காட்டி வருகின்றன.

பேஸ்புக் நிறுவனம்
குறிப்பாக பேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 320கோடி அளவிலாக போலி அக்கவுண்ட்களை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கியருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 240 கோடி அக்கவுண்ட்கள்
மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் பயனர்களாக மாறும் போது இத்தனை போலி அக்கவுண்ட்கள் கண்டறியப்பட்டது,
பின்பு ஆக்டிவ் பயனராகும் முன் கண்டறியப்பட்டதால் இவை பேஸ்புக்கின் வாடிக்கையாளர் கணக்கில் சேராது. தற்போதைய
நிலவரப்படி ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் ஐந்து சதவிகிதம் சுமார் 240 கோடி அக்கவுண்ட்கள் போலி என ஃபேஸ்புக் கணித்திருக்கிறது.

இதே காலக்கட்டத்தில் போலி அக்கவுண்ட் தவிர குழந்தைகள் ஆபாசம் மற்றும் பாலியல் அச்சுறுத்தல் சார்ந்து சுமார் 1.85கோடி தரவுகள் நீக்கப்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது,முந்தைய ஆறு மாதங்களுடன் ஒப்பிடும் போது 13 சதவிகிதம் வரை அதிகம் ஆகும்.

ஆபாச தரவுகளை கண்டறியும் வழிமுறையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றங்களே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனுடன் மற்றவர்களை துன்புறுத்தும் வகையில் பதிவிடப்பட்ட சுமார் 1.14 கோடி தரவுகள் நீக்கப்பட்ருக்கிறது. பயனர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் பகிரப்படும் தரவுகளை நீக்கும் பணிகளில் பேஸ்புக் அதிக மும்முரம் காட்டி வருகிறது.

பண பரிவர்த்தனை சேவை
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் சேவையில் புதிதாக வாட்ஸ் ஆப் பே என்ற பண பரிவர்த்தனை சேவையில்இந்தியாவில் அறிமுகம் செய்ய போராடி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது புதிய பண பரிவர்த்தனை சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மெஸ்சேன்ஜ்ர் செயலி
பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம்,வாட்ஸ்ஆப் போன்ற அனைத்து தளங்களிலும் தனது பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக முன்பே தெரிவித்திருந்தது. அதேபோல் பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது புதிய பண பரிவர்த்தனை சேவையை தனது மெஸ்சேன்ஜ்ர் செயலி மூலம் அறிமுகம் செய்யவுள்ளது.


Click it and Unblock the Notifications