3 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வெளிப்படுத்திய பர்ஸ்னாலிட்டி க்விஸ் ஆப்.!

இந்த மை பர்ஸ்னாலிட்டி செயலியின் மூலம் சுமார் 6 மில்லியன் மக்கள் பரிசோதனைகளை முடித்துள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களின் பேஸ்புக் தகவல்களை இந்த ப்ராஜெக்டுக்கு பகிர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

|

பர்ஸ்னாலிட்டி க்விஸ் ஆப் மூலம் சேகரிக்கப்பட்ட 3 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் கடந்த 4 வருடங்களாக இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வகையில் இருந்த தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் "mypersonality" என்னும் பர்ஸ்னாலிட்டி க்விஸ் ஆப் மூலம் இந்த தகவல்களை சேகரிக்கப்பட்டுள்ளன.

உஷார்.! உங்கள் பேஸ்புக் பேஜில் இருந்து உடனே நீக்க வேண்டிய 9 மேட்டர்கள்.!உஷார்.! உங்கள் பேஸ்புக் பேஜில் இருந்து உடனே நீக்க வேண்டிய 9 மேட்டர்கள்.!

3 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வெளிப்படுத்திய ஆப்.!

உளவியில் பரிசோதனை முடிவுகள் போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த தனிநபர் அந்தரங்க தகவல்களும் இதில் அடக்கம். எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இல்லாமல் அநாமதேயமாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு பகிரப்பட்டதே காரணம் என அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த தகவல் தொகுப்பானது கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத தின் டேவிட் ஸ்டில்வெல் மற்றும் மைக்கேல் கொசின்ஸ்கி என்பவர்களால் கையாளப்பட்டது.

3 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வெளிப்படுத்திய ஆப்.!

இந்த மை பர்ஸ்னாலிட்டி செயலியின் மூலம் சுமார் 6 மில்லியன் மக்கள் பரிசோதனைகளை முடித்துள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களின் பேஸ்புக் தகவல்களை இந்த ப்ராஜெக்டுக்கு பகிர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஸ் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா நிறுவனத்தில் பணியாற்றும் அலக்சாண்டர் கோகன், முன்னதாக இந்த ப்ராஜெட்டில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

3 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வெளிப்படுத்திய ஆப்.!

மேலும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மைபர்ஸ்னாலிட்டி க்விஸ் ஆப் குழுவை 2013ல் அணுகி இந்த தகவல் தொகுப்பை பெற முயன்றதாகவும், ஆனால் இதில் அரசியல் பின்புலம் இருந்ததால் கைவிடப்பட்டது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மைபர்ஸ்னாலிட்டி ஆப் விதிமுறைக்கு எதிராக செயல்படுவதால், பேஸ்புக் தளத்திலிருந்து கடந்த மாதம் நீக்கப்பட்டது. சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் , தனது தளத்தில் உள்ள ஒவ்வொரு செயலியையும் தணிக்கை செய்து வருவதாகவும், விதிமுறைகளை பின்பற்றாத 200 செயலிகளை இதுவரை நீக்கியுள்ளதாகவும் கடந்த திங்களன்று கூறியுள்ளது.

3 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வெளிப்படுத்திய ஆப்.!

பேஸ்புக் தனது தளத்தின் விதிமுறைகளை 2014ல் மாற்றுவதற்கு முன்பாக அனுமதி பெற்ற செயலிகளை கடும் தணிக்கை மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார் அதன் சி.ஈ.ஓ மார்க் சக்கர்பெர்க்.

பேஸ்புக் தளத்தில் ஆயிரக்கணக்கான செயலிகளை தணிக்கை செய்து வருவதாகவும், விதிமுறைகளை பின்பற்றாத 200 செயலிகளை இதுவரை நீக்கியுள்ளதாகவும், அவை தகவல்களில் முறைகேடு செய்துள்ளனவா என விசாரணை தொடர்கிறது எனவும் கூறியுள்ளது பேஸ்புக்.

ஏதேனும் செயலிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் அவற்றை நிரந்தரமாக தடை செய்வதுடன், அந்த தகவலை பேஸ்புக் உதவி மையம் மூலம் பயனர்களுக்கு தெரிவிக்கப்படும்.

கடந்த ஏப்ரலில் அமெரிக்க சட்டமன்றம் முன்பு ஆஜரான மார்க் சக்கர்பார்க், தனது தனிப்பட்ட தகவல் உள்பட 87மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனெலிட்டிகா நிறுவனத்துடன் முறைகேடாக பகிரப்பட்டதாக ஒப்புக்கொண்டார்.

Best Mobiles in India

English summary
Facebook Data of Over 3 Million Users Said to Have Been Exposed by Personality Quiz App

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X