பேஸ்புக்கு ஆப்பு!!!

Written By:

இன்றைய மாடர்ன் உலகத்தில் சமூக வலைதளங்கள் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக மாறி வருகிறது. பெரியவர்கள் மூதல் இளைஞர்கள் வரை எல்லோரும் இதை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

இளைஞர்கள் மத்தியில் பேஸ்புக் மிகவும் பிரபலமாக உள்ளது. நண்பர்களிடையே தகவல் மற்றும் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ள சாட் செய்ய என பல பயன்பாடுகள் இதில் உள்ளன.

உலக அளவில் உள்ள பிரபலங்கள் பற்றி தெரிந்துகொள்ளவும் அன்றாட நிகழ்ச்சிகளை பற்றி அறியவும் இது உதவுகிறது. இத்தனை சிறப்புகள் உடைய பேஸ்புக் பாதுகாப்பு அற்றதாக உள்ளது என்பதே உண்மை.

பேஸ்புக்கு ஆப்பு!!!

ஆம், கடந்த ஆண்டு வரை பேஸ்புக் தனுது 6 மில்லியன் பயனீட்டாளர்களின் போன் நம்பர் மற்றும் இ-மெயில் களை அதிகாரமற்ற பார்வையைளர்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை பேஸ்புக் நிறுவனமே நேற்று வெளியிட்டது. இதற்க்கு காரணம் டேட்டா லீக்கேஜ் தான் என்றும் இந்த பிரச்சனை 2012 முதலே உள்ளதாகவும் உலக அளவில் உள்ள தனது 1.1 பில்லியின் பயனீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் இதை தெரிவிப்பதாகவும் கூறியது.

பேஸ்புக் பயனீட்டாளர்கள் தங்களுக்கு தேவையானவர்களை பற்றிய தகவல்களை டவுன்லோடு செய்யும் பொழுது தேவையற்ற மற்றவர்களின் பற்றிய தகவல்களும் வருவதாக கூறியள்ளனர்.

இதை பற்றி அறிந்த பேஸ்புக் நிறுவனம் கடந்த வாரம் தனது பாதுகாப்பு குழுமத்திடம் 24 மணி நேரத்தில் இந்த பிரச்சனையை சரி செய்யும்மாறு கட்டளையிட்டுள்ளது. ஆனால் தனது பயனீட்டாளர்களுக்கு இதை பற்றிய தகவலை நேற்று தான் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சனை பூதாகாரமாக இருப்பதற்க்கான ஆதாரம் இல்லை என்றும் ஆனால் இது போன்ற பிரச்சனைகள் திரும்பவும் வராமல் இருக்க நாங்கள் இரு மடங்காக உழைப்போம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தனது பிளாகில் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்,கூகுள்,யாஹூ,மைக்கிரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தங்கள் டேட்டாகளை பாதுகாப்பிற்காக யு.எஸ் இணடலிஜன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஆரம்பித்துள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot