லோகோவை காப்பி அடித்ததாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு! கிளம்பியது புதிய சர்ச்சை!
இந்த வார தொடக்கத்தில், பேஸ்புக் தனது சொந்த உலகளாவிய டிஜிட்டல் க்ரிப்டோகரன்ஸி முறையை அறிமுகம் செய்தது. இதற்கு லிப்ரா என்று பெயரிட்டு, லிப்ரா அஸோஸியேஷன் என்ற தனி ஆளும் குழுவால் நிர்வகிக்கப்படும் என்று பேஸ்புக் அறிவித்திருந்தது.

தற்பொழுது இந்த லிப்ரா டிஜிட்டல் க்ரிப்டோகரன்ஸி சேவைத்துறைக்கு பேஸ்புக் பயன்படுத்தியுள்ள லோகோ மற்ற ஒரு நிறுவனத்துடையது என்று புகார் எழுந்துள்ளது.

`கரண்ட்`நிறுவனம் கொடுத்த ஷாக்
`கரண்ட்` என்ற ஆன்லைன் வங்கி நிறுவனத்தின் லோகோவைப் போலவே, பேஸ்புக்கின் புதிய லிப்ரா கிரிப்டோகரன்சி சேவை லோகோ டிசைன் செய்யப்பட்டுள்ளது என்று கரண்ட் ஆன்லைன் வங்கி நிறுவனம் புகாரளித்துள்ளது.

லிப்ரா vs காலிப்ரா
பேஸ்புக்கின் புதிய லிப்ரா கிரிப்டோகரன்சி சேவை நிறுவனமான காலிப்ரா லோகோ, கரண்ட் ஆன்லைன் வங்கியின் லோகோ போலவே தான் அச்சு அசலாக உள்ளது என்று அமெரிக்கா ஊடகமான CNET தெரிவித்துள்ளது. தற்பொழுது இந்த சர்ச்சை பேஸ்புக் நிறுவனத்தின் தலையைப் பந்தாட வைத்துள்ளது.

பேஸ்புக் மீது குற்றச்சாட்டு
கரண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டூவர்ட் சோப் கூறுகையில், ஆறு மாத கடின உழைப்பின் அடையாளமாக எங்கள் நிறுவனத்தின் லோகோவை டிசைன் செய்தோம். ஆனால் பேஸ்புக் நிறுவனம் மிக எளிமையாக எங்கள் நிறுவனத்தின் லோகோவை போலவே வடிவமைத்துள்ளது வருத்தத்திற்குரியது என்று தெரிவித்திருக்கிறார்.

காப்பி அடித்தாலும் ஒரு நியாயம் வேணாமா?
பேஸ்புக் மற்றும் கரண்ட் நிறுவனத்தின் இரண்டு லோகோக்களும், சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட ஒரே வடிவமைப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இரண்டு லோகோவிலும் ஒரு வட்டத்திற்குள் ஒரு அலை போன்ற சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டூவர்ட் சோப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு கிரேயான் ஒரு டிசைன்
ஆன்லைன் வங்கி நிறுவனமான கரண்ட் நிறுவனம், இரண்டு சின்னங்களின் புகைப்படத்தையும் தந்து டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறது. அந்த பதிவில் "உங்களிடம் ஒரே ஒரு கிரேயான் மட்டுமே இருந்தால் இதுதான் நடக்கும்." என்று குறிப்பிட்டிருக்கிறது. தற்பொழுது இந்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications