வாட்ஸ்ஆப் - பேஸ்புக் மோதல்: ஓவர்நைட்டில் குறைந்தது மார்க்கின் சொத்து மதிப்பு.!

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா குறிப்பிட்டுள்ள அறிக்கையில் 50 மல்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து இருக்கிறது.

|

பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக் பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து பேஸ்புக் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பேஸ்புக் செயலியை ஸ்மார்ட்போனில் இருந்து டெலிட் செய்யும்படி வாட்ஸ்ஆப் துணை நிறுவனர் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பேஸ்புக் பிரச்சனை தற்சமயம் அனைத்து இடங்களிலும் பூதாகரமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூக்கபெர்க்கின் சொத்து மதிப்பு சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

வாட்ஸ்ஆப்:

வாட்ஸ்ஆப்:

கடந்த 2014-ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்பை 16 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. பல்வேறு நாட்டு மக்கள் வாட்ஸ்ஆப்
மற்றும் பேஸ்புக் செயலிகளை தான் அதிகம் பயன்படுத்தினர். இந்நிலையில் ஸ்மார்ட்போனில் இருந்து டெலிட் செய்யும்படி வாட்ஸ்ஆப் துணை நிறுவனர் மக்களுக்கு அறிவித்ததை அடுத்து பெரிய புயலை கிளப்பி இருக்கிறது.

 துணை நிறுவனர்:

துணை நிறுவனர்:

பிரைன் ஆக்டன் என்பவர் முன்பு வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் துணை நிறுவனராக இருந்தார், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பிரைன்ஆக்டான் சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப்பில் இருந்து விலகனர்.

பிரைன் ஆக்டன் :

பிரைன் ஆக்டன் :

பிரைன் ஆக்டன் ஆப்பிள், யாஹூ போன்ற நிறுவனங்களிலும் வேலை பார்த்து இருக்கிறார். தொழில்நுட்ப துறையில் சிறந்து செயல்பட்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிரைன் ஆக்டன்.

50 மல்லியன்:

50 மல்லியன்:

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா குறிப்பிட்டுள்ள அறிக்கையில் 50 மல்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து இருக்கிறது. இதனால் பேஸ்புக் மீது பல்வேறு குற்ச்சாட்டுகள் எழுந்துள்ளது.

6.7 பில்லியன்:

6.7 பில்லியன்:

மேலும் மார்க் ஜூக்கபெர்க் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு கடந்த இரண்டு நாட்களில் 6.7பில்லியன் டாலர் வரை சரிந்துள்ளது, கடந்த திங்கள்கிழமை மட்டும் சுமார் 40 பில்லியன் டாலர் வரை சரிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
அரசியல் :

அரசியல் :

அரசியல் ஆதாயத்துக்காக 50 மில்லியன் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஊடுருவப்பட்டதைப் பற்றி பேஸ்புக் நிறுவனம் எந்த அளவிற்கு அறிந்துள்ளது என்று தலைவர் மார்க் ஜூக்கபெர்க் விளக்கம் அளிக்க வேண்டுமென, அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் Amy Klobuchar கோரிக்கை விடுத்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Facebook CEO Mark Zuckerberg lost almost 5 billion in wealth in one day; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X