Home
News

267 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட டேட்டா கசிந்து வலைத்தளத்தில் அம்பலமானது!

பேஸ்புக் நிறுவனம் மீண்டும் மிகப் பெரிய சிக்கலில் சிக்கியுள்ளது. வழக்கம் போல் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மீண்டும் வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இம்முறை எத்தனை மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளிப்படையாக அம்பலாகியுள்ளது என்று தெரியுமா?

மீண்டும் சிக்கலில் சிக்கிய பேஸ்புக்

மீண்டும் சிக்கலில் சிக்கிய பேஸ்புக்

பில்லியன் கணக்கான டாலர்களை அபராதமாகச் செலுத்திய போதிலும், பல தடவைகளுக்கு மேல் மன்னிப்பு கேட்டாலும், பயனர் தரவுகளில் கவனமாக இருப்பேன் என்று பேஸ்புக் நிறுவனம் உறுதியளித்த போதிலும், மீண்டும் பல மில்லியன் பயனர்களின் தகவல்கள் வெளிப்படையாக கசிந்துள்ளது.

எத்தனை மில்லியன் பயனர்களின் தகவல் கசிந்தது தெரியுமா?

எத்தனை மில்லியன் பயனர்களின் தகவல் கசிந்தது தெரியுமா?

தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, சுமார் 267 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் வலைத்தளத்தில் வெளிப்படையாக அம்பலமாகி, கசிந்துள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 267 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எப்படிக் கசிந்தது என்ற கேள்விக்கு பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சட்டவிரோத ஸ்கிராபிங்

சட்டவிரோத ஸ்கிராபிங்

பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக் ஏபிஐ தளத்தில் ஏற்பட்ட சட்டவிரோத ஸ்கிராபிங்(Scraping) என்று அழைக்கப்படும் துஷ்பிரயோக சிக்கலால் தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதென்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்பொழுது வலைத்தளத்தில் கசிந்துள்ள இந்த 267 மில்லியன் பயனர்களின் தரவுகளில் பெரும்பாலும் அமெரிக்காவிலிருக்கும் பயனர்களின் தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் நிறுவனம் அளித்த பதில்

பேஸ்புக் நிறுவனம் அளித்த பதில்

தற்பொழுது கசிந்துள்ள தகவல்களைப் போல், இன்னும் பல மில்லியன் பயனர்களின் தகவல்கள் வெளிப்படையாக அம்பலப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பேஸ்புக் தளத்தில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு சிறந்த பாதுகாப்பு சேவை வழங்கப்படும் என்று மீண்டும் பேஸ்புக் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

எஸ்.எம்.எஸ் ஸ்பேம் மற்றும் பிஷ்ஷிங் தாக்குதல்

எஸ்.எம்.எஸ் ஸ்பேம் மற்றும் பிஷ்ஷிங் தாக்குதல்

தற்பொழுது கசிந்துள்ள பயனர்களின் தகவல்கள் பெரும்பாலும் எஸ்.எம்.எஸ் ஸ்பேம் மற்றும் பிஷ்ஷிங் போன்ற ஆன்லைன் தாக்குதலுக்கு ஆளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது இந்த பிரச்சனைக்கான தீர்வை சரி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பெரிய போராட்டத்திற்கு மத்தியில் பயனர்களின் தகவல்கள்

பெரிய போராட்டத்திற்கு மத்தியில் பயனர்களின் தகவல்கள்

இதற்கு முன்பு இதேபோல் நிகழ்ந்த அசம்பாவிதத்திற்குப் பின் பயனர்களின் பாதுகாப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 100 மூன்றாம் நிலை பயன்பாட்டு செயலிகள் மூலம் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் கசிவதாகவும், அவற்றை தடுக்க பல நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தில் உள்ள 419 மில்லியன் பயனர்களின் போன் நம்பர்

ஆபத்தில் உள்ள 419 மில்லியன் பயனர்களின் போன் நம்பர்

இந்த ஆண்டின் துவக்கத்தில் பல மில்லியன் பயனர்களின் போன் நம்பர்கள் வலைத்தளத்தில் கசிந்தது. இருப்பினும் இன்னும் சுமார் 419 மில்லியன் பயனர்களின் போன் நம்பர்கள் பாஸ்வோர்டு இல்லாத சர்வரில், பாதுகாப்பில்லாமல் இருக்கிறதென்று புகாரளிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் தகவல்களை பாதுகாக்க பேஸ்புக் போராடி வருவதாக தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook Breach: Personal Data of 267 Million Facebook Users Exposed On The Website : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X