தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை எதிர்க்க தயார்: மார்க் ஸூக்கர்பேர்க்

கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் சமூக இணையதளங்களின் மூலம் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளின் போது, பேஸ்புக் சரியான முறையில் தயாராகி இருக்கவில்லை என்பதை மார்க் மீண்டும் சுட்டி காட்டினார்.

|

தேர்தலை பாதிக்கக் கூடிய வகையில் தளத்தை மாற்றி அமைப்பதை எதிர்த்து போராட பேஸ்புக் தயாராக உள்ளது. பல நாடுகளை குறிவைத்த வெளிநாட்டு பிரச்சாரங்கள் சமீபத்தில் முறியடிக்கப்பட்டன என்று பேஸ்புக்கின் தலைமை நிர்வாகி மார்க் ஸூக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை எதிர்க்க தயார்: மார்க்.!

மார்க் ஸூக்கர்பேர்க் வெளியிட்டுள்ள தனது பேஸ்புக் பக்கத்தில், தேர்தலில் குறுக்கிடும் வகையிலான தவறான கருத்துக்கள் மற்றும் நடத்தப்படும் பிரச்சாரங்கள் ஆகியவற்றை தடுக்க, முன்னணி சமூக இணையதளமான பேஸ்புக் எடுத்த நடவடிக்கைகளை குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "பிரான்ஸ், ஜெர்மனி, அலபாமா, மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் தேர்தலுக்கு முன்னதாகவே, போலியான பேஸ்புக் கணக்குகளை கண்டறிந்து, அவற்றை நாங்கள் நீக்கி உள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மற்ற நாடுகளின் மீது ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் வெளிநாட்டு செல்வாக்கு கொண்ட பிரச்சாரங்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்து உள்ளோம். மேலும் மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உள்நாட்டிலேயே சில குழுக்கள் இயங்கி வருகின்றன" என்று கூறியுள்ளார்.

தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை எதிர்க்க தயார்: மார்க்.!

கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் சமூக இணையதளங்களின் மூலம் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளின் போது, பேஸ்புக் சரியான முறையில் தயாராகி இருக்கவில்லை என்பதை மார்க் மீண்டும் சுட்டி காட்டினார். இது குறித்து அவர், "ஆனால் இன்று, இது போன்ற தாக்குதல்களுக்கு பேஸ்புக் சரியான முறையில் தயாராகி உள்ளது" என்றார்.

ஆனால் இந்த பணியை மேற்கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல என்று கூறிய அவர், "அதிநவீனமான மற்றும் அதிக நிதியுதவி பெற்ற முயற்சிகளை நாங்கள் எதிர்கொள்கிறோம். அவை அவ்வளவு சீக்கிரத்தில் பின்வாங்குவது இல்லை. தொடர்ந்து அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டே இருப்பார்கள்" என்றார்.

பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவுனரான மார்க் கூறுகையில், போலியான கணக்குகளை உருவாக்கி, அதன்மூலம் பொய்யான தகவல்களை பரப்பும் நடவடிக்கைக்கு எதிராக பேஸ்புக் தொடர்ந்து போராடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு பில்லியன் கணக்குகள் பிளாக் செய்யப்பட்டுள்ளன, என்றார்.

தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை எதிர்க்க தயார்: மார்க்.!

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் தினமும் மில்லியன் கணக்கில் போலி கணக்குகளை பிளாக் செய்யும் முறையை இப்போது நாங்கள் வடிவமைத்து உள்ளோம்.

ஒட்டு மொத்தமாக, ஒரு பில்லியனுக்கும் அதிகமான போலி கணக்குகளை நாங்கள் நீக்கி உள்ளோம். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான 6 மாதங்களில், பெரும்பாலானவை உருவாக்கிய சில நிமிடங்களில், அவை எந்த தீமையும் செய்யும் முன் நீக்கப்பட்டுள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டெனால்டு டிராம்ப்பிற்காக அரசியல் ஆலோசனை பணியில் ஈடுபட்டவர்களால் பல மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டது உள்ளிட்ட பேஸ்புக் நிறுவனத்தின் சறுக்கல்களால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பதில் மும்மரமாக செயல்பட்டு வருவதை, மார்க் ஸூக்கர்பேர்க்கின் சமீபகால இடுகை விளக்குகிறது.

தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை எதிர்க்க தயார்: மார்க்.!

இது தவிர, பேஸ்புக்கில் வெளியிடப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் வரும் தகவல்களை சோதிக்கும் பணிகளை 17 நாடுகளைச் சேர்ந்த 27 கூட்டாளி நிறுவனங்கள் மூலம் விரிவுப்படுத்தப் போவதாக, பேஸ்புக் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தாண்டின் துவக்கத்தில் 14 நாடுகளில் இந்த நடவடிக்கை நடைபெற்று வந்தது.

இது குறித்து பேஸ்புக் தயாரிப்பு நிர்வாகி அன்டோனியா வூட்ஃபோர்டு கூறுகையில், "கட்டுரைகளுக்காக நாங்கள் பணியாற்றுவதை போல, பேஸ்புக் மக்களிடம் இருந்து வரும் கருத்து, பொய்யான கட்டுரையை கண்டறியும் திறன் உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகளுக்கான சிக்னல்களை பயன்படுத்தும் ஒரு இயந்திர படிப்பினை மாடலை, நாங்கள் வடிவமைத்து உள்ளோம். அதன்பிறகு அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, கருத்து சோதிப்பவர்களுக்கு அனுப்பி மதிப்புரை வழங்க கூறினோம். இல்லாவிட்டால் கருத்து சோதிப்பவர்களால் அவற்றை சொந்த நடைக்கு மாற்றி அமைக்கலாம்" என்றார்.

Best Mobiles in India

English summary
Facebook Better Prepared for Election Meddling Zuckerberg Says: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X