செல்பி வீடியோ!முகநூல் கணக்கை சரிபார்க்க புதிய முறை.!

|

பேஸ்புக் நிறுவனம் புதிய முகநூல் கணக்கு சரிபார்ப்பு முறையை ரகசியமாக பரிசோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய முறையில் பயனர்கள் தாங்கள் உண்மையான நபர் என்பதை நிரூபிக்க ஒரு வீடியோ செல்பி எடுக்கும்படி கேட்கிறது.

பரிசோதனை

பரிசோதனை

தற்போது வரையறுக்கப்பட்ட பரிசோதனையில் உள்ள இந்த புதிய அமைப்பு, பயனர்கள் கேமராவை இயக்கி தங்கள் தொலைபேசியை கண் மட்டத்தில் பிடித்து, பின்னர் அவர்களின் முகம் திரையில் தோன்றும் வட்ட சட்டத்தில் பொருந்துமாறு இருக்க கேட்கிறது.

வீடியோ செல்பி

வீடியோ செல்பி

பயனர்கள் பின்னர் வீடியோ செல்பியை பதிவுசெய்யும்போது, நேராக முன்னோக்கி பார்க்குமாறு, வலதுபுறமாக, இடதுபுறமாக, பின்னர் மீண்டும் நேராக முன்னோக்கி பார்க்கும்படியும் இந்த புதிய அமைப்பு கேட்கிறது.

அதிக டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்கும் டாப் பிளான்கள்.!அதிக டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்கும் டாப் பிளான்கள்.!

‘வேறு யாரும்' இந்த வீடியோவைப் பார்க்க மாட்டார்கள் எ

‘வேறு யாரும்' இந்த வீடியோவைப் பார்க்க மாட்டார்கள் எ

"இது உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், நீங்கள் ஒரு உண்மையான மனிதர் என்பதை சரிபார்க்கவும் எங்களுக்கு உதவுகிறது" என்று பேஸ்புக் செயலியில் தோன்றும் செய்தி, இச்செயல்முறையின் தொடக்கத்தில் கூறுகிறது.


‘வேறு யாரும்' இந்த வீடியோவைப் பார்க்க மாட்டார்கள் என்று செயலி உறுதியளிக்கிறது. ஆனால் உண்மையில் அதைப் பார்க்க யாரெல்லாம் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அது குறிப்பிடவில்லை.

ஹாங்காங்கைச் சேர்ந்த டெவலப்பர்

ஹாங்காங்கைச் சேர்ந்த டெவலப்பர்

பயனரின் அடையாளம் உறுதிசெய்யப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு வீடியோ நீக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.


புதிய அம்சத்தை ஹாங்காங்கைச் சேர்ந்த டெவலப்பர் ஜேன் மஞ்சுன் வோங் கண்டறிந்தார். செயலிகள் மூலக் குறியீட்டில் புதைந்துள்ள புதிய அம்சங்களைக் கண்டறிய செயலியில் ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்து பிரபலமானவர் இவர்.

2017 ஆம் ஆண்டில்

2017 ஆம் ஆண்டில்

பேஸ்புக் நிறுவனம் இந்த பரிசோதனை திட்டத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை மற்றும் இந்ந அம்சத்தை பரந்த வெளியீட்டிற்கு நகர்த்துவதற்கான திட்டங்களை பற்றியும் ஒப்புக் கொள்ளவில்லை.

2017 ஆம் ஆண்டில், பேஸ்புக் இதேபோன்ற ஒரு அம்சத்தை பயன்படுத்தத் தொடங்கியது. அதில் பயனர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றுவதன் மூலம் தங்கள் கணக்குகளைச் சரிபார்க்கும்படி கேட்டுக்கொண்டனர்.

 முக அங்கீகார அமைப்புகள்

முக அங்கீகார அமைப்புகள்

கடந்த காலத்தில் இந்நிறுவனம் அதன் முக அங்கீகார அமைப்புகள் தொடர்பான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. அப்போது பேஸ்புக்கில் பதிவேற்றிய புகைப்படங்களை தானாகவே ஸ்கேன் செய்து, புகைப்படங்களில் இருப்பதாக யூகித்த பயனர்களை பரிந்துரைத்தது சர்ச்சையானது.

நவம்பர் 20: அசத்தலான ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!நவம்பர் 20: அசத்தலான ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

இல்லினாய்ஸ் சட்டம்

இல்லினாய்ஸ் சட்டம்

அந்த அம்சம் 2015 ஆம் ஆண்டில் ஒரு வர்க்க நடவடிக்கை வழக்குக்கு உட்பட்டது. அதில் இந்த சமூக ஊடக நிறுவனம் ஃபேஸ் ஸ்கேன் தரவை பிற பயோமெட்ரிக் தகவல்களுடன் பயனர் அனுமதியின்றி சேமித்து வைத்தது இல்லினாய்ஸ் பயோமெட்ரிக் தகவல் தனியுரிமை சட்டத்தினை மீறிய செயல் என்று குற்றம் சாட்டப்பட்டது. இல்லினாய்ஸ் சட்டம் ஒரு பயனருக்கு $ 1,000 முதல் $ 5,000 வரை சட்டத்தை மீறுவதற்கான வரம்பைக் குறிப்பிடுகிறது.


அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ஏப்ரல் 2018ல் இந்த பிரிவிக்கு சான்றிதழ் அளித்ததுடன், வாதியின் புகாருக்கு சரியான மற்றும் பொதுவான அடிப்படை காரணங்கள் உள்ளதாக தீர்ப்பளித்தனர்.

போதுமான அளவு நிரூபிக்கவில்லை

போதுமான அளவு நிரூபிக்கவில்லை

பேஸ்புக் இந்த முடிவை மேல்முறையீடு செய்ததுடன், முக அங்கீகாரத் அமைப்பால் ஏற்பட்ட தீங்குகளை வாதிகள் போதுமான அளவு நிரூபிக்கவில்லை என்பதால்லும், சேதங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதால் அவர்கள் இந்த பிரிவு சான்றிதழ் பெற்றிருக்கக்கூடாது எனவும் வாதிட்டது.


ஆகஸ்டில் 9 வது அமெரிக்க சுற்று மேல்முறையீட்டு நீதிமன்றம், 3-0 என்ற கணக்கில் பேஸ்புக்கின் முறையீட்டை நிராகரித்ததுடன், இந்த வழக்கை தொடர அனுமதித்தது

Most Read Articles
Best Mobiles in India

English summary
Facebook ask users for video selfies to verify new account: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X