Home
News

இனி லைக்ஸ், கமெண்ட் செய்வதில் கூட கட்டுப்பாடுகள்; பேஸ்புக் அதிரடி.!

அப்படியாக அறிவிக்கப்பட்டுள்ள பேஸ்புக் அப்டேட்ஸ்கள் என்ன.? அதாவது தகவல்களை சேகரிக்கும் ஆப்ஸ்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் என்ன.

By Muthuraj

பேஸ்புக் வழியாக தகவல்களை சேகரிக்கும் (அல்லது திருடும்) ஆப்ஸ் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று பேஸ்புக் வாக்குறுதி அளித்திருந்தது அதனை தொடர்ந்து, ஒரு பயனரின் பேஸ்புக் தகவல்களை பாதுகாக்க உதவும், சக்திவாய்ந்த பேஸ்புக் அப்டேட்ஸ்கள் அறிவிக்கப்பட்டன. அந்த புதிய அம்சங்கள் இன்று முதல் இந்தியர்கள் உருட்டப்பட்டுள்ன.

இனி லைக்ஸ், கமெண்ட் செய்வதில் கூட கட்டுப்பாடுகள்; பேஸ்புக் அதிரடி.!

அப்படியாக அறிவிக்கப்பட்டுள்ள பேஸ்புக் அப்டேட்ஸ்கள் என்ன.? அதாவது தகவல்களை சேகரிக்கும் ஆப்ஸ்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் என்ன.? இதுநாள் வரை எப்படியெல்லாம் நமது பேஸ்புக் தகவல்கள் கசிந்தது.? இனி அது எப்படி தடுக்கப்படும்.?

பேஸ்புக் லாக்-இன் கட்டுப்பாடுகள்:

பேஸ்புக் லாக்-இன் கட்டுப்பாடுகள்:

இனிசெக்-இன்ஸ், லைக்ஸ், போஸ்ட்கள், போட்டோக்கள், வீடியோக்கள், ஈவென்ட்ஸ் மற்றும் க்ரூப்ஸ் போன்ற தகவல்களை அணுகும் அனைத்து பயன்பாடுககளுக்கும், பேஸ்புக் ஒப்புதல் கிடைத்த பின்னரே அனுமதி திறந்து விடப்படும்.

இனி இறுக்கமான கண்காணிப்புகள் நிகழும்.!

இனி இறுக்கமான கண்காணிப்புகள் நிகழும்.!

கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்தே அங்கீகரிக்கப்படும் இம்மாதிரியான அனுமதிகள், இனி அதிக அளவிலான மதிப்பாய்வு செயல்முறைக்குள் செலுத்தப்பட்டு, மிகவும் இறுக்கமான கண்காணிப்புகளை பெறவுள்ளது. முக்கியமாக குறிப்பிட்ட தகவல்களை அணுகுவதற்கு என்ன தேவைகள் உள்ளது என்பது ஆராயப்படும்.

எதெல்லாம் இனி கண்காணிக்கப்பட்டது.?

எதெல்லாம் இனி கண்காணிக்கப்பட்டது.?

மதம் மற்றும் அரசியல் பார்வைகள், ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் நிலை மற்றும் விவரங்கள், கஸ்டம் பிரென்ட் லிஸ்ட், கல்வி மற்றும் பணி வரலாறு, உடற்பயிற்சி செயல்பாடு, புத்தக வாசிப்பு செயல்பாடு, இசை கேட்கும் செயல்பாடு, செய்தி வாசிப்பு, வீடியோ போன்ற தனிப்பட்ட தகவலுக்கான அணுகல்கள் இனி வழங்கப்படமாட்டாது.

தேடல் கட்டுப்பாடுகள் :

தேடல் கட்டுப்பாடுகள் :

ஒரு நபரின் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை பேஸ்புக் தேடலில் டைப் செய்வதின் மூலமாக குறிப்பிட்ட நபரை மிக எளிமையாக கண்டுபிடிக்கும் வசதி இருந்து வருகிறது. இது ஒருவரின் முழு பெயரை அல்லது சரியான பேஸ்புக் ப்ரொபைல் பெயரை டைப் செய்யும் வேலையை குறைக்கிறது. சில நேரங்களில் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதால், தற்போது இந்த அம்சம் முடக்கப்பட்டுள்ளது.

பேஜஸ் ஏபிஐ கட்டுப்பாடுகள் :

பேஜஸ் ஏபிஐ கட்டுப்பாடுகள் :

பேஜஸ் ஏபிஐ (Pages API) என்பது எந்தவொரு பேஸ்புக் பக்கத்தையும் அணுகி, அதில் லைக்ஸ் மற்றும் கம்மெண்ட்களை பதிவிட உதவும் ஒரு அப்ளிகேஷன் இன்டர்பேஸ் புரோகிராமிங் ஆகும். இதன் வழியாகத்தான் டெவலப்பர்கள், பேஸ்புக் பேஜ் ஓனர்களுக்களுக்கும் கமெண்ட் அல்லது மெசேஜ் ரிப்ளை செய்வதற்கான டூல்களை உருவாக்குகிறார்கள்.

ஏப்.9 முதல் அமல்.!

ஏப்.9 முதல் அமல்.!

இந்த செயல்பாட்டின் வழியாக எதிர்பார்ப்பதை விட மிக அதிகமான தனிப்பட்ட தகவல்கள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளது. ஆக, பயனுள்ள சேவைகளை வழங்கும் ஆப்ஸ்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட பேஜ் சார்ந்த தகவல்கள் கிடைக்கும்படி கட்டுப்பாடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதாவது இனி, பேஜஸ் ஏபிஐ சார்ந்த அனைத்து அணுகல்களையும் பேஸ்புக் அங்கீகரிக்கும்.

க்ரூப் ஏபிஐ மீதான கட்டுப்பாடுகள் :

க்ரூப் ஏபிஐ மீதான கட்டுப்பாடுகள் :

தற்போது வரையிலாக, க்ளோஸ்டு க்ரூப்களின் உள்ளடக்கத்தை அணுக, க்ரூப் மெம்பர்ஸ் அல்லது க்ரூப் அட்மினிடம் ஆப்ஸ்கள் அனுமதி கேட்கும். இந்த அனுமதியானது, க்ரூப்களில் எளிமையாக போஸ்ட் செய்ய அல்லது ரிப்ளை செய்ய க்ரூப் அட்மின்களுக்கு உதவுகின்றன. இருப்பினும் கூட, க்ரூப் சாட்களின் பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யும் நோக்கத்தின்கீழ் க்ரூப் ஏபிஐ பயன்படுத்தி அனைத்து மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களும் இனி பேஸ்புக்கின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ப்ரொபைல் விவரங்களை அணுக முடியாது.!

ப்ரொபைல் விவரங்களை அணுக முடியாது.!

அதாவது ஒரு க்ரூப்பின், மெம்பர்ஸ் பட்டியலை இனி ஆப்ஸ்களால் அணுக முடியாது என்று அர்த்தம். மறுகையில் உள்ள, பேஸ்புக்கின் ஒப்புதல் பெற்ற ஆப்ஸ்களால், பயனரின் ப்ரொபைல் உடன் இணைக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் புகைப்படங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை அணுக முடியாத வண்ணமும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பிளாட்பார்ம் ஏபிஐ.!

இன்ஸ்டாகிராம் பிளாட்பார்ம் ஏபிஐ.!

இது தவிர ஈவென்ட்ஸ் ஏபிஐ, இன்ஸ்டாகிராம் பிளாட்பார்ம் ஏபிஐ, அழைப்பு மற்றும் மெஸேஜ் ஹிஸ்டரி, டேட்டா ப்ரொவைடர்ஸ் மற்றும் பார்ட்னர் கேட்டகிரிஸ் போன்ற பல பேஸ்புக் அமைப்புகள் மீதான கட்டுப்பாடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facebook announces the changes that protect our Facebook information. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X