Home
News

Ray-Ban உடன் கூட்டு சேர்ந்து பேஸ்புக் உருவாக்கும் ஸ்மார்ட் கிளாஸ் எப்பொழுது வெளிவரும்!

இந்த ஆண்டு பேஸ்புக் (Facebook) கனெக்ட் நிகழ்வின் போது பேஸ்புக் நிறுவனம் உலகின் மிகப் பெரிய கண் கண்ணாடி பிராண்டான ரே-பான் (Ray-Ban) நிறுவனத்துடன் கூட்டு சேருவதாக அறிவித்திருந்தது.

 ரே-பான் பிராண்டட் ஸ்மார்ட் கண்ணாடி

சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் நிறுவனம், ஏ.ஆர் / வி.ஆர் மாநாட்டின் போது தனது கூட்டாட்சியை உறுதிப்படுத்தி, வரும் 2021ம் ஆண்டில் ரே-பான் பிராண்டட் ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்கி வெளியிடுவதாக அறிவித்தது. இது பேஸ்புக் மற்றும் எசிலோர்லூசோட்டிகா (EssilorLuxottica) ஆகியவற்றின் கூட்டணியின் கீழ் உருவாகும் முதல் தயாரிப்பாகும்.

பேஸ்புக்

எசிலோர்லூசோட்டிகா என்பது ரே-பான் நிறுவனத்தின் தாய் நிறுவனமாகும். இதுவும் தனியாக ரெய்பான் போன்ற கண் கண்ணாடிகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. பேஸ்புக் கூறுகையில், இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள் நுகர்வோருக்கு AR அனுபவத்தை வழங்கக்கூடியது. ஆனால் இது AR சாதனமாக வகைப்படுத்தப்படாது, இருப்பினும் ஸ்னாப்சாட்டின் ஸ்பெக்டாக்கிள்ஸைப் போல செயல்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

நெருக்கமானவர்களுடன்

மக்களுக்கு நெருக்கமானவர்களுடன் இணைவதற்குச் சிறந்த வழிகளை வழங்கக்கூடிய சாதனங்களை ஆராய்வதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அணியக்கூடிய சாதனங்கள் அதைச் செய்வதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளன, EsilorLuxottica உடன் கூட்டு சேர்ந்து, அவர்களின் உலகத் தரம் வாய்ந்த பிராண்ட் பட்டியலில் முதல் உண்மையான நாகரீகமான ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட தயாறிக்கொண்டிருக்கிறோம் என்று பேஸ்புக் கூறியுள்ளது.

ரே-பான்

பேஸ்புக் உடனான எங்கள் ஒத்துழைப்பைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், என்று ரே-பான் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள் சமூக எதிர்காலத்தில் மேம்படுத்த உதவும் என்றும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நுகர்வோர் விரும்பும் மற்றும் அணியக்கூடிய சாதனமாக இது மாறும் என்று கூறியுள்ளனர். 2021ம் ஆண்டின் துவக்கத்தில் இதன் விவரக்குறிப்பு, விலை நிர்ணயம், கண்ணாடிகள் கிடைப்பது பகிரப்படும் என்று பேஸ்புக் உறுதிப்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook and Ray-Ban join hands for smart glasses : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X