பேஸ்புக் ஊழியர்களை வீட்டிலே இருக்க சொல்லி அதிரடி அறிவிப்பு: ஏன் தெரியுமா?

|

கொடிய கொரோனா வைரஸ் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருவதால், பேஸ்புக் இன்க். நிறுவனம் சீனாவுக்கான ஊழியர்களின் பயணத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது. அதேபோல் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு அத்தியாவசியமற்ற பயணத்தைத் தடுக்குமாறு பேஸ்புக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பயணத்தைத் நிறுத்தவும்

அத்தியாவசியமற்ற பயணத்தைத் நிறுத்தவும்

சீனாவுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தைத் தள்ளி வைக்குமாறு பேஸ்புக் ஊழியர்களை பேஸ்புக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்த அறிவிப்பை பேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சீனாவுக்குச் சென்ற ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படியும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கை

மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கை

"மிகுந்த எச்சரிக்கையுடன், எங்கள் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப், பாதுகாக்க நாங்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்று பேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா வைரஸ் சீனாவில் 100-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்டது மற்றும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் போரே நடக்கும்: கொரோனா வைரஸ் குறித்து ஒரு ஆண்டு முன்பே கணித்த பில் கேட்ஸ்!உலகப் போரே நடக்கும்: கொரோனா வைரஸ் குறித்து ஒரு ஆண்டு முன்பே கணித்த பில் கேட்ஸ்!

சீனாவின் வேலையை வியட்நாமில் முடிக்க முடிவு

சீனாவின் வேலையை வியட்நாமில் முடிக்க முடிவு

பேஸ்புக்கின் இந்த அறிவிப்பினால் தற்போதைய தயாரிப்புகள் பாதிக்கப்படாது, ஆனால் இந்த நடவடிக்கை எதிர்கால சாதனங்களில் பொறியியல் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. சீனாவில் செய்ய முடியாத அனைத்து வேலையையும், பேஸ்புக் நிறுவனம் வியட்நாமில் உள்ள பிற வசதி நிறுவனத்தைக் கொண்டு முடிக்கத் திட்டமிட்டுள்ளது.

பெரும்பாலான நிறுவனங்கள் சீனாவில் உள்ளது

பெரும்பாலான நிறுவனங்கள் சீனாவில் உள்ளது

ஆப்பிள் நிறுவனமும் தனது விநியோகச் சங்கிலியின் பெரும்பகுதியைச் சீனா மற்றும் அதன் சுற்று பகுதியைத் தான் வைத்துள்ளது. இன்னும் மிக முக்கிய நிறுவனங்களான அமேசான்.காம் இன்க்., ஆல்பாபெட் இன்க்., கூகிள் நிறுவனம் ஆகியவை தங்கள் சாதனங்களைச் சீனா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் உருவாக்குகின்றன.

அறிய வாய்ப்பு., அலைமோதும் கூட்டம்: பிப்.,4 க்குள் 10 வினாடி வீடியோ அனுப்பினால் Free jio recharge!அறிய வாய்ப்பு., அலைமோதும் கூட்டம்: பிப்.,4 க்குள் 10 வினாடி வீடியோ அனுப்பினால் Free jio recharge!

வீட்டில் இருந்தே வேலை செய்தால் போதும்

வீட்டில் இருந்தே வேலை செய்தால் போதும்

இந்த நிறுவனங்களும் பேஸ்புக் அறிவித்தது போல தங்களின் ஊழியர்களுக்கு விரைவில் அறிவிப்பை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்அத்தியாவசியமற்ற பயணத்தைத் தள்ளி வைக்குமாறு பேஸ்புக் ஊழியர்களை பேஸ்புக் நிறுவனம் கேட்டுக்கொண்டு, பல ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook Action Announcement Telling It's Employees To Stay At Home Do You Know Why : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X