பேஸ்புக் மீது தருமாறாக குற்றம் சாட்டிய பிரிட்டன்.! மறுபடியும் மாட்டிய மார்க்.!

எந்த தொழில் தோல்வி அடைய வேண்டும் என்று பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்கிறதா என்பதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

தற்சமயம் வந்த செய்தி என்னவென்றால் பிரிட்டன் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி நடைமுறை உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் சட்ட விதிமுறைகளை பேஸ்புக் நிறுவனம் மீறிவிட்டதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பேஸ்புக் மீது தருமாறாக குற்றம் சாட்டிய பிரிட்டன்.!

குறிப்பாக 108 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் 2017-ம் ஆண்டு முதல் பேஸபுக் நிறுவனத்தின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும், உண்மைக்கு புறம்பான பல தகவல்கள் பரவுவது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சட்ட விதிமுறைகள்

கடுமையான சட்ட விதிமுறைகள்

மேலும் பிரிட்டனின் சட்ட விதிமுறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு தெரிந்திருந்தும், வேண்டுமென்றெ மீறியுள்ளதாகவும், அதனை தடுக்க பிரிட்டன் தரப்பில் புதிய, கடுமையான சட்ட விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மாஃபியா

டிஜிட்டல் மாஃபியா

பின்பு பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இணைய உலகின் டிஜிட்டல் மாஃபியா போல் செயல்பட அனுமதிக்க கூடாது எனவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 விசாரணை

விசாரணை

குறிப்பாக இணைய உலகில் முன்னணியில் இருப்பதை பயன்படுத்தி, பிரிட்டனில் எந்த தொழில் வெற்றி பெற வேண்டும், அதேபோல் எந்த தொழில் தோல்வி அடைய வேண்டும் என்று பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தலைவர் மார்க் ஜுக்கர்பர்க்

தலைவர் மார்க் ஜுக்கர்பர்க்

அதன்பின்பு நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக பல முறை அழைப்பு விடுத்தும், ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பர்க் ஆஜராகாதது, நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 மார்ச் மாதம்

மார்ச் மாதம்

அடுத்து இந்திய நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், இந்திய மக்களின் தகவல் பாதுகாப்பு உரிமை குறித்து விளக்கமளிக்க, வாடஸ்ஆப் மற்றும் பேஸ்புக் நிறுவன தலைவர்கள் வரும் மார்ச் மாதம் நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக உத்திரவிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook Acted Like ‘Digital Gangsters,’ British Parliament Says: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X