மற்றொரு வசதியை காப்பியடித்த சர்ச்சையில் பேஸ்புக்: இம்முறை ஸ்னாப்சாட் இல்லை.!

இந்த வசதியை நாங்கள் தான் முதல் உருவாக்கினோம் ,தற்போது பேஸ்புக் அதை பயன்படுத்திக்கொண்டது எனக் கூறுகிறது வோக்ஸ்வெப்.

|

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சமூக வலைதள நிறுவனமான வோக்ஸ்வெப், தனது ஆடியோ மட்டும் பதிவிடும் வசதியை பேஸ்புக் காப்பியடித்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் "ஆடியோ மட்டுமுள்ள பதிவுகள்" வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் பேஸ்புக் தளத்தின் மூலம் ஆடியோக்களை பதிவு செய்து , வாய்ஸ் மெசேஜாக பகிர அனுமதிக்கப்படுகின்றனர்.

மற்றொரு வசதியை காப்பியடித்த சர்ச்சையில் பேஸ்புக்!

இந்த வசதியை நாங்கள் தான் முதல் உருவாக்கினோம் ,தற்போது பேஸ்புக் அதை பயன்படுத்திக்கொண்டது எனக் கூறுகிறது வோக்ஸ்வெப். இந்நிறுவனம் தனது செயலியை 2016 ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. 2.5 மில்லியன் பயனர்களை கொண்டு இயங்கி வரும் இந்த தளமானது, உலகம் முழுவதும் 1.3பில்லியன் பயனர்களுடன் இயங்கும் பேஸ்புக்குடன் ஒப்பிடும்போது சிறியது தான். கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த வோக்ஸ்வெப் செயலி 1,00,000முறை இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

வோக்ஸ்வெப்

வோக்ஸ்வெப்

இந்த வோக்ஸ்வெப் தளத்தின் முக்கிய அம்சமாக கூறப்படுவது 'வாய்ஸ்-அக்குமென்டேட் போட்டோஸ்' எனப்படும் பேசும் புகைப்படங்கள் தான். பெயருக்கேற்றாற் போல், பயனர்கள் தங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை போனில் இருந்து தேர்ந்தெடுத்து அதனுடன் வாய்ஸை பதிவு செய்ய முடியும். மேலும் அந்த புகைப்படத்தை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எமோஜிக்கள், டூடுல்ஸ் அல்லது எழுத்துக்கள் மூலம் வடிவமைக்கலாம். இதே அம்சங்கள் தான் பேஸ்புக்கின் புதிய வாய்ஸ் போஸ்ட் வசதியிலும் உள்ளது.

ஆடியோ ஒன்லி

ஆடியோ ஒன்லி

மேலும் பேஸ்புக் 'ஆடியோ ஒன்லி' ஸ்டோரீஸ் வசதியில், பின்புல நிறத்தை மாற்றுவது, புதிய இமேஜ் அல்லது ஸ்டிக்கர் சேர்ப்பது போன்ற அம்சங்களும் உள்ளன.பேஸ்புக்கில், பயனர்கள் 20நொடிகள் வரையிலான ஆடியோ போஸ்ட்களை பதிவு செய்து, ஸ்டோரி அல்லது நியூஸ் பீடில் பகிரலாம்.

பதிலளிக்காத பேஸ்புக்

பதிலளிக்காத பேஸ்புக்

வோக்ஸ்வெப் நிறுவனம் கூறுகையில், பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்க திட்டமிடவில்லை. ஆனால் இந்த வசதிகளுக்காக அமெரிக்காவில் காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளது.

யாஷ் மிஸ்ரா

யாஷ் மிஸ்ரா

வோக்ஸ்வெப் நிறுவனம் அடுத்த 48 மாதங்களில் பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கம் பணியில் ஈடுபடவுள்ளதாக அந்நிறுவனத்தின் சி.ஈ.ஓ மற்றும் நிறுவனரான யாஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

ஆசியா

ஆசியா

வோக்ஸ்வெப்-ன் பெரும்பாலான பயனர்கள் ஆசியாவை சேர்ந்தவர்கள் எனினும், இந்தியாவில் இருந்து என குறிப்பிட்டு எண்ணிக்கையை கூற முடியாது. ஏனினும் இந்தியா ஒரு பெரும் நிலப்பரப்பு என்பதால், பேஸ்புக் இந்த புதிய வசதியை முதலில் இங்கு அறிமுகப்படுத்தியுள்ளது என இந்நிறுவனம் நம்புகிறது.

பேஸ்புக்கின் பிற காப்பிடித்த சர்ச்சைகள்

பேஸ்புக்கின் பிற காப்பிடித்த சர்ச்சைகள்

பிற சமூக வலைதளங்களில் இருந்து சிறந்த அம்சங்களை காப்பியடிப்பது இது முதல்முறை அல்ல. சில வாரங்களுக்கு முன்பு தான், பல்வேறு ஸ்னாப்சாட் வசதிகள் பேஸ்புக்கில் அறிமுகபடுத்தப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்கது, ஸ்டோரீஸ் வசதி. இவ்வசதி பேஸ்புக்கில் மட்டுமில்லாது அதன் பிற செயலிகளான வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் உள்ளது. ஸ்னாப்சாட்-ஐ விட அதிகமாக,வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டும் சேர்த்து 450மில்லியன் ஆக்டிவ் பயனர்கள் தினமும் பயன்படுத்துகின்றனர். மேலும் இதில் ஸ்டோரீஸ் இடத்தை மாற்றுவது, இன்ஸ்டாகிராமில் இருந்து பேஸ்புக்கிற்கு மாற்றுவது போன்று பல புதிய அப்டேட்களை வெளியிட்டுகொண்டே உள்ளது பேஸ்புக்.

Best Mobiles in India

English summary
Facebook accused of copying feature from another social network and it’s not Snapchat : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X