உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

|

உலகளவில் பல பில்லியினுக்கும் அதிகமான பயனர்களுடன், மெட்டாவுக்கு சொந்தமான பேஸ்புக் ஆப்ஸ் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைவதற்குப் பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி, பேஸ்புக், உலகளவில் உள்ள தொழில்முனைவோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் தங்கள் சமூகம் மற்றும் வணிகப் பக்கங்களை உருவாக்கவும் இந்த ஆப்ஸ் அனுமதிக்கிறது. இது தொழில்முனைவோருக்கான முக்கிய ஹப்பாக செயல்படுகிறது.

பேஸ்புக்கில் அதிகரிக்கும் ஆபத்தான சாத்தியங்கள்

பேஸ்புக்கில் அதிகரிக்கும் ஆபத்தான சாத்தியங்கள்

இது தொழில் முயற்சிக்கு உதவும் பல டிஜிட்டல் கருவிகளுக்கான அணுகலையும் கொண்டுள்ளது என்பதே உண்மை. பேஸ்புக் இயங்குதளம் பயன்படுத்த இலவசமாக மற்றும் பரவலாகக் கிடைப்பதால், சில மோசமான நபர்களால் மற்ற கணக்குகளை ஹேக் செய்து கட்டுப்பாட்டை எடுக்கக்கூடிய ஆபத்தான சாத்தியங்களும் இங்கு நிறைந்துள்ளது. பேஸ்புக் பயனர்களின் கணக்கு பாதுகாப்பான முறையில் பாதுகாக்கப்படுகிறது என்றாலும் கூட, ஹேக்கர்களின் தாக்குதல்கள் குறைந்ததாகத் தெரியவில்லை.

பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்வது?

பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்வது?

இத்தகைய சூழ்நிலையில், ஒரு பயனரின் கணக்கு ஹேக் செய்யப்பட்டால், நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி ஹேக் செய்யப்பட்ட கணக்கை மீட்டெடுக்க வேண்டும்? இதற்காக Facebook என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? உங்கள் ஹேக் செய்யப்பட்ட கணக்கை எப்படி பேஸ்புக்கின் சில பயனுள்ள கருவிகளைக் கொண்டு மீட்டெடுப்பது, அதை எப்படிச் சரியான முறையில் செய்வது என்ற வழிகாட்டுதலை இந்த பதிவில் தெளிவாகப் பார்க்கலாம். பேஸ்புக் பயன்படுத்தும் அனைவரும் இதை தெரிந்துகொள்வது சிறப்பானது.

WhatsApp இல் லொகேஷன் பகிர்வது எப்படி? லைவ் மற்றும் கரண்ட் லொகேஷன் ஷேரிங் என்றால் என்ன?WhatsApp இல் லொகேஷன் பகிர்வது எப்படி? லைவ் மற்றும் கரண்ட் லொகேஷன் ஷேரிங் என்றால் என்ன?

Facebook கணக்கின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டீர்களா?

Facebook கணக்கின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டீர்களா?

பேஸ்புக் பயனர்கள், சில பல காரணங்களால் அவர்களின் Facebook கணக்கின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். உதாரணமாக, ஒருவர் தனது Facebook கணக்கின் கடவுச்சொல்லை மறந்துவிடலாம் அல்லது Facebook இல் கணக்கை உருவாக்க அவர்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் ஐடிக்கான அணுகலை இழந்திருக்கலாம். இரண்டாவதாக, சமூக ஊடக மேடையில் தேவையற்ற செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் வேறு சில சாதனங்களில் ஒருவர் தனது கணக்கில் உள்நுழைந்திருக்கலாம்.

உங்கள் Facebook கணக்கை எவ்வாறு மீட்டெடுப்பது?

உங்கள் Facebook கணக்கை எவ்வாறு மீட்டெடுப்பது?

கடைசியாக மற்றும் மோசமான சூழ்நிலையில் ஒரு மோசமான நபர் அல்லது ஹேக்கரால் பேஸ்புக் கணக்கு உங்கள் கட்டுப்பாட்டில் இருந்து, அடுத்த நபர் கட்டுப்பாட்டிற்குச் சென்றிருக்கலாம். பேஸ்புக் கணக்கின் கடவுச்சொல்லை யூகித்து அதை ஹேக் செய்வது இப்போது சுலபமாகிவிட்டது. ஹேக்கர்களின் ஹேக்கிங் முறைகளும் கூட இப்போது வலுவடைந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கும், அளிப்பதற்கும் பேஸ்புக் ஹெல்ப்லைன் எண் என்று எதுவும் இல்லை. இருப்பினும், உங்கள் Facebook கணக்கை மீட்டெடுப்பதற்கு நிறுவனம் சில வழிகளை வழங்கியுள்ளது.

இந்த 10 தப்பான சார்ஜிங் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா? நிலைமை மோசமாவதற்குள் உடனே மாற்றுங்கள்..இந்த 10 தப்பான சார்ஜிங் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா? நிலைமை மோசமாவதற்குள் உடனே மாற்றுங்கள்..

பயனர் கடவுச்சொல்லை நினைவில் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?

பயனர் கடவுச்சொல்லை நினைவில் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?

ஒரு பயனர், அவருடைய கடவுச்சொல்லை மறந்துவிட்டால், பேஸ்புக் கணக்கை மீட்டெடுப்பது உண்மையில் எளிதான செயலாகும். பேஸ்புக் உள்நுழைவு பக்கத்தில், பயனர் தனது மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு, கடவுச்சொல் மறந்துவிட்டதைக் (forgot password) கிளிக் செய்யவும். அதன்பிறகு, பயனரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படும். இது அவர்களின் கணக்கிற்கான புதிய கடவுச்சொல்லை உருவாக்கி உள்நுழைய உதவும்.

பயனர் மின்னஞ்சல் முகவரியை மறந்துவிட்டால் என்ன செய்வது?

பயனர் மின்னஞ்சல் முகவரியை மறந்துவிட்டால் என்ன செய்வது?

பேஸ்புக்கில் கணக்கை உருவாக்கப் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியைப் பயனர் மறந்துவிட்டாலும், மாற்று மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி அவர்கள் கணக்கை மீட்டெடுக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், ஒரு பயனர் முதலில் தனது கணக்கைப் பின்வரும் முகவரிக்குச் சென்று அடையாளம் காண வேண்டும். https://www.facebook.com/login/identify என்ற முகவரிக்குச் சென்று பின்வரும் செயல்முறையைப் பின்பற்றுங்கள். பேஸ்புக் அதன் பயனரைக் கண்டறிந்ததும், கணக்கை மீட்டெடுப்பதற்கான படிகளைக் காண்பிக்கும். அதை அப்படியே பின்தொடருங்கள்.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

பயனரின் பேஸ்புக் கணக்கில் தேவையற்ற செயல்பாட்டைக் கண்டறிந்தால் என்ன செய்ய வேண்டும்?

பயனரின் பேஸ்புக் கணக்கில் தேவையற்ற செயல்பாட்டைக் கண்டறிந்தால் என்ன செய்ய வேண்டும்?

பயனர் ஏதேனும் தேவையற்ற செயல்பாட்டைக் கண்டறிந்தால், அது அவர்கள் முன்பு உள்நுழைந்துள்ள கணினி அல்லது சாதனத்திலிருந்து செய்திருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், பேஸ்புக் பயனர்கள் அமைப்புகள் மற்றும் தனியுரிமையில் காணப்படும் செயல்பாட்டுப் பதிவிற்குச் செல்ல வேண்டும். அதில், பயனர்கள் தாங்கள் உள்நுழைந்த இடத்தைச் சரிபார்த்து, அந்தச் சாதனத்தில் அமர்வை முடிக்க வெளியேற மூன்று-புள்ளி மெனுவைக் கிளிக் செய்யலாம். கடவுச்சொல்லை மீட்டமைப்பது மற்றும் எல்லா சாதனங்களிலிருந்தும் வெளியேறுவதும் சாத்தியமான விருப்பமாகும்.

ஹேக் செய்யப்பட்ட பயனர் கணக்கை எப்படி புகாரளித்து மீட்டெடுப்பது?

ஹேக் செய்யப்பட்ட பயனர் கணக்கை எப்படி புகாரளித்து மீட்டெடுப்பது?

ஒரு பயனர் தனது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக நினைத்தால், அவர்கள் அதை Facebook இல் https://www.facebook.com/hacked என்ற இணைய முகவரிக்குச் சென்று ஹேக் செய்யப்பட்டது தொடர்பாகப் புகாரளிக்கலாம். அதன் பிறகு, ஒரு பயனர் "My Account Is Compromised" என்பதைக் கிளிக் செய்து, Facebook கேட்கும் மற்ற விவரங்களை உள்ளிட வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், பேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு உங்களின் கணக்கு எடுத்துச்செல்லப்படும். உண்மையில் அது ஹேக் செய்யப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உங்கள் கணக்கு மீண்டும் மீட்டெடுக்கப்பட்டும்.

'ஓ மை காட்' சந்திர மண்ணில் வளர்ந்த தாவரங்கள்.. இது என்ன செடி தெரியுமா? வியந்து போன விஞ்ஞானிகள்..'ஓ மை காட்' சந்திர மண்ணில் வளர்ந்த தாவரங்கள்.. இது என்ன செடி தெரியுமா? வியந்து போன விஞ்ஞானிகள்..

Best Mobiles in India

English summary
Facebook Account Hacked How To Recover Facebook Account Follow These Helping Tips and Steps : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X