ஆதார் பயன்படுத்த முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.!

ஆதார் ஆணையம் தற்பொழுது புதிய ஆணையைப் பிறப்பித்துள்ளது. இனிமேல் ஆதார் அடையாள அட்டைப் பயன்படுத்தும் பொது முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

By Sharath
|

ஆதார் பாதுகாப்பானது இல்லை என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் பல பதிவுகளைப் பதிவிட தொடங்கியதிலிருந்து ஆதார் ஆணையத்திற்குச் சிக்கல் கூடிக்கொண்டே போய்க்கொண்டுள்ளது. ஆதார் ஆணையம், ஆதார் அடையாளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆதார் பயன்படுத்த முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.!

அதன்படி ஆதார் ஆணையம் தற்பொழுது புதிய ஆணையைப் பிறப்பித்துள்ளது. இனிமேல் ஆதார் அடையாள அட்டைப் பயன்படுத்தும் பொது முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் கட்டாயம் சரிவரப் பின்பற்ற வேண்டுமென்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

கை ரேகை பதிவு

கை ரேகை பதிவு

இதற்கு முன்பு ஆதார் விவரங்களைச் சரிபார்க்க விரல் ரேகை பதிவு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கை ரேகை பதிவுகளை குளோனிங் முறையில் தயார் செய்து பலர் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலைமையைச் சரி செய்வதற்கு ஆதார் ஆணையம் தற்பொழுது முக அங்கீகார முறையை கட்டாயமாக்கியுள்ளது.

தனித்துவ அடையாள ஆணையம்

தனித்துவ அடையாள ஆணையம்

ஆதார் அடையாள அட்டை பயன்படுத்தி சிம் கார்டு வாங்க வரும் பயனரின் முகத்தை ஆதார் அட்டையில் உள்ள முகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து அடையாளம் காணும் முறை தற்பொழுது அமலுக்கு வந்துள்ளது. ஆதார் தவிர்த்த பிற அடையாள அட்டைகளை வழங்கி சிம் கார்டு வாங்குபவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

இருக்கும் இடத்தில் நேரடி படங்கள் எடுக்கும் முறை

இருக்கும் இடத்தில் நேரடி படங்கள் எடுக்கும் முறை

இருக்கும் இடத்தில் நேரடி படங்கள் எடுக்கும் முறைப்படி முகத்தைப் படம் பிடித்து அடையாளம் காணும் திட்டத்தை வங்கி, பொது விநியோக அமைப்பு மற்றும் அரசாங்க அலுவலகங்களில் அலுவலக வருகை என அணைத்து இடங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர்

ஆதார் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர்

தேவையற்ற முறைகேடுகளைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்த முகப்பதிவு முறை அமல்படுத்தப்படுவதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை சட்டத்தை பின்பற்றாதவர்கள் ஆதார் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Face recognition to be must for all Aadhaar authentications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X