எப்.21 போர் விமானத்தை இந்தியா வாங்க ஐஸ் வைக்கும் அமெரிக்கா.!

|

அமெரிக்கா புதிதாக தயாரித்துள்ள புதிய எப்.21 போர் விமானங்களை இந்தியா வாங்கினால் நாங்கள் வேறு எந்த நாட்டிற்கும் இந்த விமானத்தின் தொழில்நுட்பதையோ இல்லை.

விமானத்தையோ விற்கமாட்டோம் என்று அமெரிக்கா உறுதி கூறியுள்ளது.

எப்.21 போர் விமானத்தை இந்தியா வாங்க ஐஸ் வைக்கும் அமெரிக்கா.!

ஏன் திடீரென இந்தியா வாங்க வேண்டும் என்று இப்படி ஐஸ் வைக்கின்றது அமெரிக்கா. எல்லாம் காசு பணம், துட்டு, மணி மணி தான் காரணம்.

மேலும் விமானத்தின் சிறப்புகளையும் காணலாம்.

114 போர் விமானம் வாங்க முனைப்பு:

114 போர் விமானம் வாங்க முனைப்பு:

இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 927 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெற அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகின்றன.

போட்டி போடும் நிறுவனங்கள்:

போட்டி போடும் நிறுவனங்கள்:

இந்த போட்டியில் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் எப் 21 விமானங்கள், போயிங் நிறுவனத்தின் F/A-18 விமானங்கள், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்தின் ரபேல், யூரோபைட்டர் டைப்யூன், ரஷியாவின் மிக் 35 மற்றும் சுவீடனின் சாப் 35 கிரிப்பன் விமானங்கள் முன்னணியில் உள்ளன.

புதிய போர் விமானம் வடிவமைப்பு:

புதிய போர் விமானம் வடிவமைப்பு:

இந்நிலையில் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் ஒப்பந்தத்தை பெற புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் வியாபார வியூக மற்றும் அபிவிருத்தி துறையின் துணைத் தலைவர் விவேக் லால் கூறுகையில், இந்தியாவின் சூழலுக்கு ஏற்ப செயல்படும் வகையில் புதிய போர் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மற்ற நாடுகளுக்கு விற்கமாட்டோம்:

மற்ற நாடுகளுக்கு விற்கமாட்டோம்:

இந்த விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தால் விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உலகின் எந்த நாட்டுக்கும் வழங்கமாட்டோம் என்று அவர் உறுதி அளித்தார். மேலும் டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே தயாரிப்பதால், விலையும் குறைவாக கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ரேடாருக்கு சிக்காமல் செல்லும்:

ரேடாருக்கு சிக்காமல் செல்லும்:

ஒற்றை விமானி மட்டுமே பயணிக்கும் எப் -21 ரக விமானம், எதிரி நாட்டு ரேடார்களுக்கு சிக்காமல் செல்லும் திறன் கொண்டது. சின்ன ஓடுதளத்தில் கூட இறங்கி,ஏறும் திறன் கொண்டது என்பதால், விமானந்தாங்கி கப்பல்களில் செயல்பட ஏற்றது.

துல்லியமாக தாக்கும்:

துல்லியமாக தாக்கும்:

குறைந்த பராமரிப்பு செலவு, எரிபொருள் சிக்கனம், தாக்கும் இலக்கை துல்லியமாக கணித்து காட்டும் வசதி, விமானிக்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பை விரைந்து உருவாக்கி, தொடர்ந்து காக்கும் திறன், தானியங்கி கருவி மூலம் இயங்குவதால் குறைந்த மனித ஆற்றல் மட்டுமே தேவை என பல சிறப்பு அம்சங்கள் கொண்டது இந்த விமானம்.

தாக்கும் திறன்:

தாக்கும் திறன்:

ஒரே நேரத்தில் 910 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகள், 450 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகளை தாங்கிச் சென்று வீசுவதோடு, விமானங்களை வீழ்த்தும் நான்கு ஏவுகணைகளையும் வீசும் வல்லமை எப்-21 ரக விமானங்களுக்கு உண்டு.

Most Read Articles
Best Mobiles in India

English summary
f21 jets will not sold any other country if won iaf : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X