பாகிஸ்தான் எப்16 வச்சு அங்கிட்டு போய் விளையாடு-தில்லான இந்தியா.!

ஒரு வேளை இந்தியா புதிய எப் 21 ரக விமானத்தை வாங்கினால், வேறு எந்த நாட்டிற்கும் இந்த விமானத்தையோ இல்லை. இதுதொடர்பான தொழில்நுட்பத்தையோ விற்க மாட்டோம் என்று உறுதி கூறியுள்ளது. பாகிஸ்தான் இனி என்கிட்ட எ

|

பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை பார்த்து நான் அமெரிக்காவின் அதிநவீன எப்.16 ரக போர் விமானத்தை வைத்துள்ளேன் என்று அட்டகாசம் செய்து வந்தது. போருக்கு வந்தாலும் நீங்கள் அவ்வளவு தான் என்று கொக்கரித்தது.

இந்நிலையில், புதிய எப் 21 ரக விமானத்தை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்கவும் முனைப்பு காட்டுவதாக கூறப்படுகின்றது.

பாகிஸ்தான் எப்16 வச்சு அங்கிட்டு போய் விளையாடு-தில்லான இந்தியா.!

ஒரு வேளை இந்தியா புதிய எப் 21 ரக விமானத்தை வாங்கினால், வேறு எந்த நாட்டிற்கும் இந்த விமானத்தையோ இல்லை. இதுதொடர்பான தொழில்நுட்பத்தையோ விற்க மாட்டோம் என்று உறுதி கூறியுள்ளது.

பாகிஸ்தான் இனி என்கிட்ட எப்.16 ரக விமானம் இருக்கின்றது என்று வாய் பேச்சில் மிரட்டினாலும், இந்தியாவின் பதில் டேய் பாகிஸ்தான் யார் கிட்ட விளையாட்டு காட்டுற என் கிட்ட புதிய எப்.21 விமானமே இருக்குது போடா அங்கிட்டுனு பிளிஸ் காமெடி போல சொல்லிவிடும்.

 பாகிஸ்தானிடம் எப் 16 விமானம்:

பாகிஸ்தானிடம் எப் 16 விமானம்:

அமெரிக்காவின் எப் 16 விமானங்களை பாகிஸ்தான் வைத்துள்ளது. இது 4ம் தலைமுறைக்காக போர் விமானங்களாகும். தற்போது பாகிஸ்தானிடம் எப் 16 விமானங்கள் 68 செயல்பாட்டில் உள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால், எப்.16 விமானம் மற்றும் தொழில்நுட்பங்களை அடியோடு விற்பனை நிறுத்தி விட்டது.

114 விமானங்களுக்கு ஒப்பந்த புள்ளி:

114 விமானங்களுக்கு ஒப்பந்த புள்ளி:

இந்நிலையில், இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 927 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெற அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகின்றன.

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் அறிவிப்பு:

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் அறிவிப்பு:

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் ஒப்பந்தத்தை பெற புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் வியாபார வியூக மற்றும் அபிவிருத்தி துறையின் துணைத் தலைவர் விவேக் லால் கூறுகையில், இந்தியாவின் சூழலுக்கு ஏற்ப செயல்படும் வகையில் புதிய போர் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தியாவில் எப்.21 விமானம்:

இந்தியாவில் எப்.21 விமானம்:

மற்ற நாடுகளுக்கு விற்கமாட்டோம்: இந்த விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தால் விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உலகின் எந்த நாட்டுக்கும் வழங்கமாட்டோம் என்று அவர் உறுதி அளித்தார். மேலும் டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே தயாரிப்பதால், விலையும் குறைவாக கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

குறுகிய ஓடுதலத்தில் செல்லும்:

குறுகிய ஓடுதலத்தில் செல்லும்:

ஒற்றை விமானி மட்டுமே பயணிக்கும் எப் -21 ரக விமானம், எதிரி நாட்டு ரேடார்களுக்கு சிக்காமல் செல்லும் திறன் கொண்டது. சின்ன ஓடுதளத்தில் கூட இறங்கி,ஏறும் திறன் கொண்டது என்பதால், விமானந்தாங்கி கப்பல்களில் செயல்பட ஏற்றது.

துல்லியமாக தாக்கும்:

துல்லியமாக தாக்கும்:

குறைந்த பராமரிப்பு செலவு, எரிபொருள் சிக்கனம், தாக்கும் இலக்கை துல்லியமாக கணித்து காட்டும் வசதி, விமானிக்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பை விரைந்து உருவாக்கி, தொடர்ந்து காக்கும் திறன், தானியங்கி கருவி மூலம் இயங்குவதால் குறைந்த மனித ஆற்றல் மட்டுமே தேவை என பல சிறப்பு அம்சங்கள் கொண்டது இந்த விமானம்.

தாக்கும் திறன்:

தாக்கும் திறன்:

ஒரே நேரத்தில் 910 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகள், 450 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகளை தாங்கிச் சென்று வீசுவதோடு, விமானங்களை வீழ்த்தும் நான்கு ஏவுகணைகளையும் வீசும் வல்லமை எப்-21 ரக விமானங்களுக்கு உண்டு.

இந்தியா வாங்கி விட்டால்:

இந்தியா வாங்கி விட்டால்:

இந்த விமானங்களை இந்தியா வாங்கி விட்டால், பாகிஸ்தான் என் கிட்ட எப்.16 போர் விமானங்கள் இருக்கின்றது என்று கூறினால். டேய் பாகிஸ்தான் அங்கிட்டு போய் விளையாடு. அது பழசு டா பிளிப்ஸ் என் கிட்ட இதை விட தொழில்நுட்பத்தில் வலிமையான எப்.21 விமானங்கள் இருக்கின்றது என்று காமெடியாகவும் கூறிவிடும்.

Best Mobiles in India

English summary
F-21 aircraft purchased by India and F-16 aircraft with Pakistan: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X