பட்ஜெட் பத்மநாபனாக வாழும் பணக்கார தொழிலதிபர்கள்
பணம் வந்ததும் தலை கால் புரியாமல் ஆடும் பலருக்கு மத்தியில் கோடீஸ்வரர்களாக இருந்தும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நட்த்தும் சில தொழில் அதிபர்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.
அடுத்து வரும் ஸ்லைடர்களில் உலக பிரபலமாக இருக்கும் பணக்கார தொழில்அதிபர்களாக இருந்தும், பட்ஜெட் வாழ்க்கையை வாழ்பவர்களின் பட்டியலை பாருங்கள்..

டேவிட் செரிடன்
ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தின் ஆசிரியரும், அரிஸ்டா நெட்வர்க் நிறுவனத்தின் நிறுவனருமான செரிட்டன் $2.9 பில்லியனுக்கு சொத்து மதிப்புகளை வைத்துள்ளார்.

சார்லி எர்கன்
டிஷ் நெட்வர்க் நிறுவனத்தை நிறுவிய சார்லி $17.8 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளை வைத்திருந்தும் ஏழ்மையாக வாழ்ந்து வருகின்றார்.

ஜாக் மா
அலிபாபா நிறுவத்தின் நிறுவனரும், தலைவருமான ஜாக் சீன பணக்காரர்களில் ஒருவராக இருக்கின்றார். வாழ்க்கையில் பல தோல்விகளை கடந்த ஜாக் இன்று வெற்றியாளராக இருக்கின்றார்.

பியரீ ஒம்டியார்
ஈபே நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான பியரீ $8.2 பில்லியன் மதிப்பிலான சொத்துகளை வைத்திருக்கின்றார்.

டேவிட் கார்ப்
டம்ப்ளர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் $200 மில்லியன் சொத்துகளை வைத்திருந்தாலும் அதிகளவிலான உடைகளையும் வைத்திருக்கவில்லை என சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அசிம் ப்ரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் $16.1 பில்லியன் மதிப்பிலான சொத்துகளை வைத்திருந்தும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார்.

பிஸ் ஸ்டோன்
டுவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரான பிஸ் $200 மில்லியன் மதிப்பிலான சொத்துகளை வைத்திருந்தும் இன்றும் பழைய காரையே பயன்படுத்தி வருகின்றார்.

ஜான் கௌம்
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் நிறுவனரான ஜான் $6.8 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்தும் எளிமையாகவே வாழ்கிறார்.

டிம் குக்
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் $400 மில்லியனுக்கு அதிபதியானாலும் எளிமையாகவே வாழ்கின்றார்.

டோனி சை
சப்போஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டோனி $1 பில்லியன் சொத்துகளுக்கு உரிமையாளராக இருந்தும் அதிகம் செலவு செய்ய மாட்டார்.


Click it and Unblock the Notifications