Home
News

இப்பயாவது பண்ணுங்க சார்: பான், ஆதார் இணைக்க கடைசி தேதி இதுதான்- செக் செய்வது எப்படி?

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வருகிற மாதம் 30 ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. பான் எண்ணை ஆதார் எண் உடன் இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டம் என்பதால் இணைப்புக்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க காலக்கெடு

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க காலக்கெடு

கொரோனா பரவல் காரணமாக பலதரப்பினரும் பல்வேறு சிக்கலை சந்தித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டும், கோரிக்கையின் அடிப்படையிலும் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பான் ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31 ஆம் தேதி, 2022 வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்

பான் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்

முன்னதாக மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. தற்போது இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இணைக்கப்படாத நபர்கள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உட்பட நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைக்கப்படாதவர்கள் பான் அட்டை இல்லாதவர்களாகவே கருதப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பான், ஆதார் அட்டையை இணைத்து விட்டீர்களா

உங்களது பான் எண்ணை ஆதார் அட்டையும் உடன் இணைத்து விட்டீர்களா? இந்த செயல்முறை முடித்தவர்கள் தப்பித்தார்கள் என்றுதான் கூறவேண்டும். இணைக்கபடாதவர்கள் எப்படி இணைக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். உங்கள் பான் எண்ணை பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பரை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவானது 2019-ம் ஆண்டின் டிசம்பர் 31-ம் தேதிக்குள் அவரவர் ஆதார் எண்ணுடன் அவரவர் பான் எண் இணைக்காவிட்டால் குறிப்பிட்ட பான் கார்டுகள் முடக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

வருமான வரித்துறை வலியுறுத்தல்

வருமான வரித்துறை வலியுறுத்தல்

நீங்கள் பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைக்கவில்லை என்றால், அவைகளை இணைப்பதற்கு இரண்டு அருமையான வழிகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, அதார்-பான் இணைப்பை வருமான வரித்துறையின் Income Tax e-filing வலைத்தளம் மூலம் இணைக்கலாம். இரண்டாவது வழி 567678 (அ) 56161 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதின் மூலமாகவும் இணைக்கலாம். இதை எப்படி செய்வது என்று விரிவாக பார்ப்போம் வாங்க...

இணைப்பது எப்படி?

இணைப்பது எப்படி?

வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்

வழிமுறை-1: முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துரையில் அதிகாரபூர்வமான இ-ஃபில்லிங் வலைத்தளத்திற்குள் ஆதார் பான் இணைப்பு இந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

வழிமுறை-2 அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3 அதன்பின்பு உங்களிக் பான் மற்றும் ஆதார் விவரங்களை கேட்குமொரு பக்கத்திற்குள் நுழைவீர்கள். அங்கே பான், ஆதார் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிட்டுள்ளதை போன்ற பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

இணைக்க எளிய வழிமுறைகள்

இணைக்க எளிய வழிமுறைகள்

வழிமுறை-4 பின்னர் I have only year of birth in Aadhaar card என்ற விருப்பமும், அதன் அருகில் ஒரு டிக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இது உங்களின் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பின் அந்த டிக் பாக்ஸை கிளிக் செய்தல் வேண்டும்.

வழிமுறை-5 அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code-ஐ நிரப்பவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி ஒன்றை அனுப்பச் சொல்லியும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். கடைசியாக எல்லாம் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.

Best Mobiles in India

English summary
Extended Deadline for PAN and Aadhaar Link: How to Link?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X