பொசுக்குன்னு வார்த்தைய விட்டிங்கிளே: இத இந்தியாவுக்கு கொடுக்குறதுல சுத்தமா விருப்பமில்ல- பில் கேட்ஸ்!

|

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சமீபத்திய நேர்காணலுக்கு பிறகு பல்வேறு விமர்சனங்களை பெற்றார். அதில், கோவிட்-19 தடுப்பூசி தொழில்நுட்பங்களை இந்தியா போன்ற வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் தனக்கு தயக்கம் இருப்பதாக குறிப்பிட்டார். பாதுகாப்பு பிரச்சனைகளை மேற்கோள் காட்டி தடுப்பூசி காப்புரிமையை பகிர்ந்து கொள்வதில் விருப்பமில்லை என குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் ஆராய்ச்சி, தடுப்பூசி தயாரிப்பு

கொரோனா வைரஸ் ஆராய்ச்சி, தடுப்பூசி தயாரிப்பு

கொரோனா பரவல் காலத்தில் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி, தடுப்பூசி தயாரிப்புக்கு பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை சார்பில் பெரும் முதலீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது தடுப்பூசி பேட்டன் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில், இந்தியா போன்ற வளர்ந்த வளரும் நாடுகளுக்கு தடுப்பூசி பேட்டனை பகிர்ந்து கொள்வதில் விருப்பமில்லை என கூறினார்.

வளரும் நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்

வளரும் நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்

பில்கேட்ஸ் இந்த பதில், உலகம் முழுவதும் உள்ள வளரும் நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். மேலும் இதற்கு பில்கேட்ஸ் கூறிய காரணங்கள் குறித்து பார்க்கையில், வளரும் நாடுகளில் நிபுணத்துவம், தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படை கட்டமைப்பு மற்றும் டெக்னாலஜி ஆகிய பற்றாக்குறை இருக்கிறது எனவே தடுப்பூசி பேட்டர்ன் பகிர்ந்து கொள்வது தேவையற்றது என குறிப்பிட்டார்.

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள்

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள்

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள் குறித்து பார்க்கையில் இதுவரை இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும். இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக், மே மாத தொடக்கம் முதல் கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது. ஒரு டோஸ் விலை இந்திய மதிப்புப்படி ரூ.750 என கூறப்படுகிறது.

பில்கேட்ஸ் பதிலுக்கு பல எதிர்கருத்துகள்

பில்கேட்ஸ் பதிலுக்கு பல எதிர்கருத்துகள்

பில்கேட்ஸ்ஸின் பதிலுக்கு பல எதிர்கருத்துகள் வருகின்றன. மேலும் இந்திய போன்ற வளரும் நாடுகள்தான் தடுப்பூசி டெக்னாலஜியை தயாரித்து அதிக தடுப்பூசிகளை உருவாக்கி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன எனவும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர். பில்கேட்ஸ் சில தினத்திற்கு முன்பு தெரிவித்த கருத்து இங்கே கவனிக்கத்தக்கதாகும்.

பல பிரதான கண்டுபிடிப்புகள்

பல பிரதான கண்டுபிடிப்புகள்

இந்தியாவில் பல பிரதான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன எனவும் இந்திய மருந்தியல் துறை இந்தியாவுக்கு மட்டுமின்றி மொத்த உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை வழங்க முடியும் என தான் எதிர்பார்ப்பதாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தின்போது மைக்ரோசாப்ட் இணை இயக்குனர் பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ்

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ்

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் வீடியோ கான்பரன்ஷ் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அதில் இந்தியாவில் பல பிரதான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன எனவும் இந்திய மருந்தியல் துறையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான உதவிகள் சிறப்பாக செய்து வருகின்றன எனவும் கூறினார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Expensive to Share Covid19 Vaccine patents with India: Microsoft Billgates Gets Criticism

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X