Just In
- 10 hrs ago
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- 10 hrs ago
அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?
- 10 hrs ago
தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!
- 11 hrs ago
ஓஹோ! இப்படி செஞ்சா 12 மாதத்திற்கு YouTube Premium இலவசமா? இது தெரியாம போச்சே!
Don't Miss
- News
ராசியில்லாத ராஜா.. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து உருட்டி விட்ட கண்டச்சனி,அஷ்டம குரு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஹர்திக் நியமனம்
- Movies
அஜித் சார்.. டேட் கூட தெரியாதா?.. ரசிகருக்கு எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- Automobiles
ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?
- Finance
அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!
- Lifestyle
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஐபோன் 14 தொடர் எப்போது அறிமுகம்?- விலை, சிறப்பம்சங்கள் இதுதானா?
ஐபோன் 14 தொடரானது பழைய வடிவமைப்பு மற்றும் சிப்செட்டைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ப்ரோ மாடல் பெரும்பாலான பகுதிகளில் சிறந்த மேம்படுத்தலை கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஐபோன் 14 தொடர் சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் விலை, வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவலை விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் 14 தொடர் அறிமுகம்
ஐபோன் 14 தொடரின் அறிமுகத்தின் மூலம் ஆப்பிள் நிறுவனம் அதன் உக்தியை சற்று மாற்றி ஆண்ட்ராய்டு ஓஇஎம்-கள் என்ன செய்கிறதோ அதை பின்பற்றலாம் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த தொடரின் கீழ் வரும் மேம்பட்ட மாடல்கள் சமீபத்திய மேம்பாட்டைக் கொண்டிருக்கும். நீங்கள் இந்த சாதனத்தை வாங்க விரும்பினால் கூடுதலாக செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 14 மாடல் பழைய வடிவமைப்பு மற்றும் சிப்செட்டைத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் ப்ரோ மாடல்கள் பெரிய மேம்படுத்தலை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 14 குறித்து இதுவரை வெளியான தகவலை பார்க்கலாம்.

ஐபோன் 14 தொடர்: வெளியீட்டு தேதி
ஆப்பிள் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட நான்கு மாடல்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன்கள் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டாலும் முந்தைய வெளியீடுகள் உடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்த சாதனம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்துக்கு முன்னதாக வரவிருக்கும் ஐபோன் விலை குறித்து வெளியான தகவலை பார்க்கையில், ஐபோன் 14 ப்ரோ சாதனமானது $1,099 என வரலாம், இது ஐபோன் 13 ப்ரோவை விட $100 அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 14 தொடர்: சிறப்பம்சங்கள்
ஐபோன் 14 தொடர் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ஐபோன் 14 சாதனமானது பழைய ஐபோன் 13 போன்றே சில வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த சாதனத்தின் முன்புறத்தில் சில மாற்றங்கள் இருக்கும். ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ ஆகிய இரண்டு சாதனங்களும் ஆண்ட்ராய்டு போன்களை போன்றே பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சாதனத்தின் பெரிய பின்புற கேமரா கொண்டிருக்கும் எனவும் இது புடைப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. புதிய சாதனம் 48 மெகாபிக்சலை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மினி மாடல் இடம்பெறாது
இந்த தொடரில் மினி மாடல் இடம்பெறாது என கூறப்படுகிறது. ஆப்பிள் தொடரில் புதிய மாடல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது ஐபோன் 14 மேக்ஸ் சாதனமாக இருக்கலாம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது பெரிய காட்சி வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 14 தொடரின் ப்ரோ மாடல்கள் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற இரண்டு மாடல்கள் நிலையான 60 ஹெர்ட்ஸ் பேனல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மாடல்கள்
அதேபோல் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மாடல்களானது 1170 x 2532 தெளிவுத்திறனில் இயங்கும் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் புதிய ஐபோன் மேக்ஸ் மாடல் மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது 1284 x 2778 தெளிவுத்திறன் உடன் கூடிய 6.7 இன்ச் பெரிய டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அனைத்து ஐபோன் 14 தொடர் சாதனங்களும் புதிய சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்காது என கூறப்படுகிறது. ஐபோன் 14 மாறுபாடானது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பயோனிக் ஏ15 சிப் வசதியைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் சாதனமானது பயோனிக் ஏ16 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. நிறுவனத்தின் மேம்பட்ட சாதனங்களில் நீடித்த பேட்டரி ஆயுள் அம்சம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா
ஐபோன் 13 சாதனத்தை விட பெரிய கேமரா அம்சத்தைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ஐபோன் 14 மேக்ஸ் மாடலில் 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் பிரதான கேமரா அமைப்பு உட்பட இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கும் எனவும் முன்புறத்தில் 12 எம்பி செல்பி கேமரா இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086