6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போன்.!

|

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் இந்த கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,08 0x2,408 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் பதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன்இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Vi இன் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது? இதை மட்டும் செய்தால் இனி இம்சையே இல்லை..Vi இன் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது? இதை மட்டும் செய்தால் இனி இம்சையே இல்லை..

ஆண்ட்ராய்டு 11

சாம்சங் கேலக்ஸி எப்52 சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த பிராசஸர் வசதி கேமிங் உட்பட பல ஆப் வசதிகளை வேகமாக இயக்க உதவுகிறது என்றே கூறலாம். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 64எம்பி பிரைமரி சென்சார்

புதிய சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த மனசுதான் சார்: உயிரையும் காப்பாற்றிக் கொடுத்து பரிசுத் தொகையையும் கொடுத்த இளைஞர்- பரவும் வீடியோஇந்த மனசுதான் சார்: உயிரையும் காப்பாற்றிக் கொடுத்து பரிசுத் தொகையையும் கொடுத்த இளைஞர்- பரவும் வீடியோ

மார்ட்போன் மாடல்

சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனில் 4350 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

தரமான அம்சங்களுடன் ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!தரமான அம்சங்களுடன் ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

வைஃபை

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜிஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy F52 5G smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X