ரூ.9,999-விலையில் அறிமுகமாகுமா ஜியோபுக் லேப்டாப் மாடல்? முழு விவரம்.!
ஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஜியோபுக் லேப்டாப் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது அந்நிறுவனம்.

அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது
மேலும் trak.in வலைத்தளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த ஜியோபுக் லேப்டாப் மாடல் ரூ.9,999-க்கு அறிமுகம் செய்யப்படவாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கம்மி விலையில் இந்த ஜியோ லேப்டாப் வெளிவரும் என்பதால் கண்டிப்பாகஅதிகமாக விற்பனை செய்யப்படும். மேலும் ஜியோ லேப்டாப் மாடல் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.

ஏற்கனவே ஆன்லைனில் வெளியான ஜியோபுக் லேப்டாப் மாடலின் அம்சங்களை இப்போது பார்ப்போம். புதிய லேப்டாப் சாதனம் JioOS என அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட இயங்குதள கட்டமைப்பைக் கொண்டது என்று கூறப்படுகிறது. ஃபார்ம்வேர் ஜியோ பயன்பாடுகளுடன் வரலாம் என்றும், ஜியோபுக் 4 ஜி எல்டிஇ ஆதரவை ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளூபேங்க் கம்யூனிகேஷன்
குறிப்பாக புதிய ஜியோபுக் லேப்டாப் மாடலை உருவாக்க சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் ஜியோகூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தெரிவித்துள்ளது.

வெளிவந்த தகவலின்படி ஜியோ லேப்டாப் மாடல் 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே வடிமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஜியோ லேப்டாப் மாடல் வெளிவரும்.

ஜியோபுக் லேப்டாப் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த லேப்டாப் 2 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 32 ஜிபி ஈஎம்சி ஸ்டோரேஜ் பின்பு 4 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 64 ஜிபி இஎம்எம்சி 5.1 ஸ்டோரேஜ்என இரண்டு வேரியண்ட்களில் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

மினி எச்.டி.எம்.ஐ போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், குவால்காம் ஆடியோ சிப், JioStore, JioMeet, JioPagesஆப்ஸ் மைக்ரோசாப்ட் டீம்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் மைக்ரோசாப்ஃப்ட் ஆபிஸ் போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த ஜியோபுக் லேப்டாப்.


Click it and Unblock the Notifications