இரண்டு மாதங்களில் 11 ஸ்மார்ட்போன்கள்: பானாசோனிக் அதிரடி திட்டம்

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த இரண்டு மாத காலங்களில் மட்டும் சுமார் 11 ஸ்மார்ட்போன்களை வெளியிட பானாசோனிக் திட்டமிட்டு வருவதாக பானாசோனிக் நிறுவனத்தின் வியாபார பிரிவு தலைவர் பன்கஜ் ரானா தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களில் 11 ஸ்மார்ட்போன்கள்: பானாசோனிக் அதிரடி திட்டம்

ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் மட்டும் 11 ஸ்மார்ட்போன்கள் அதாவது ஆகஸ்டு மாதத்தில் ஐந்து ஸ்மார்ட்போன்களும், செப்டம்பர் மாதத்தில் ஆறு ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக பானாசோனிக் இந்தியா நிறுவனத்தின் வியாபார பிரிவு தலைவர் பன்கஜ் ரானா தெரிவித்துள்ளார்.

உயர் ரக ஸ்மார்ட்போன் வெளியிடுவது பற்றிய கேள்விக்கு ரானா, தீபாவளிக்கு முன் ரூ.20,000 பட்ஜெட்டில் ஒரு ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவில் பானாசோனிக் விநியோகஸ்தர்களை இரண்டாம் கட்ட நகரங்களில் இருந்து மூன்றாம் கட்ட நகரங்களுக்கு நீட்டிக்க இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாசாவின் மூன் லேண்டிங் பொய் என்பதை நிரூபிக்க இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்.?நாசாவின் மூன் லேண்டிங் பொய் என்பதை நிரூபிக்க இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்.?

மேலும் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட இருக்கும் முதலீடு மற்றும் வருவாய் திட்டம் குறித்த கேள்விக்கு ரானா, இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.2,000 கோடி வருவாய் எதிர்பார்க்கிறோம், மேலும் ரூ.150 கோடிகளை முதலீடு செய்ய இருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் மிகப்பெரிய திட்டங்களை மேற்கொள்ள இருக்கும் பானாசோனிக் ஆகஸ்டு 9-ம் தேதி பிதிய பானாசோனிக் எலுகா A3 மற்றும் A3 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. இதுதவிர அந்நிறுவனம் சக்திவாய்ந்த P55 மேக்ஸ் ஸ்மார்ட்போனினையும் சமீபத்தில் வெளியிட்டது.

பானாசோனிக் P55 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, மெட்டல் வடிவமைப்பு, ஆண்ட்ராய்டு நௌக்கட் 7.0, 13 எம்பி பிரைமரி கேமரா, குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க குவாட் எல்இடி பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஒடிஜி சப்போர்ட் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிக்பிளே எனும் அம்சம் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ப்ரோஃபைல்களை சேமித்து கொள்ளும். இந்த அம்சம் உங்களது வீடு, கார், அலுவலகம் மற்றும் நீங்கள் செல்லும் இடங்களுடன் இணைந்திருக்க வழி செய்கிறது.

புத்தம் புதிய P55 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 5 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் சிம் ஸ்லாட், 3ஜி / 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி, டைரக்ட் வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Japanese technology firm Panasonic is planning to launch 11 smartphones in next two months here in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X