Home
News

பிரத்யேக பேட்டி: உங்கள் தேவை எங்களுக்கு தெரியும்., நீங்க ரெடியா- பென்க்யூ இந்திய உற்பத்தி விரைவில்!

மானிட்டர்கள் மற்றும் ப்ரொஜெக்டர் அமைப்பில் முன்னணி பிராண்டான பென்க்யூ, இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு விற்பனையில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது கால்தடத்தை பதித்து சந்தையை விரிவுப்படுத்த திட்டமிட்டிருக்கிறது.

பென்க்யூ இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சிங், நமது கிஸ்பாட் தளத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் சில கேள்விகளுக்கான பதில்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. வரவிருக்கும் நாட்களில் இந்தியாவிற்கான சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் மற்றும் நிறுவனத்தின் திட்டம் குறித்து பார்க்கலாம். பிராண்டு டிடூசி எனப்படும் நேரடி வாடிக்கையாளர் விற்பனை தளத்தை அமைப்பதாகவும், 2022-க்குள் உள்ளூரில் பேனல்களின் உற்பத்தியை நிறுவனம் தொடங்கும் எனவும் உறுதி அளித்துள்ளது.

பிரத்யேக பேட்டி: நீங்க ரெடியா- பென்க்யூ இந்திய உற்பத்தி விரைவில்!

இந்த ஆண்டு விற்பனையின் அடிப்படையில் பென்க்யூ செயல்பாடு எப்படி?

2021 இந்தியாவில் பென்க்யூ-ன் குவாண்டம் வளர்ச்சிக்கான ஆண்டாக இருந்தது. முந்தைய ஆண்டின் ஒட்டுமொத்த வருவாயை விட 44% அதிகரித்தது. குறிப்பாக எல்சிடிஎம் பிரிவில், பென்க்யூ 30% சரிந்த வளர்ச்சியையே கண்டது. பொழுதுபோக்கு, கேமிங், கிராஃபிக் டிசைனிங் மற்றும் புகைப்பட எடிட்டிங் போன்ற பிரிவுகளில் நுகர்வோர்கள் சிறிய திரைக்கு பதிலாக பெரிய திரைகளுக்கு மாற விரும்புவதே இதற்கான காரணம் ஆகும்.

எச்டி மற்றும் 2கே போன்ற காலாவதியான தொழில்நுட்பங்களுக்கு மாறாக ட்ரூ 4கே தொழில்நுட்பத்தின் உடன் கூடிய பெரிய திரைகளுக்கு அதிக தேவை இருக்கிறது. தற்போது நாங்கள் நம்பர்1 27 இன்ச் மானிட்டர் பிராண்டாக இருக்கிறோம். இது மானிட்டர் பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி 2021-ல் பிடூசி (பிஸ்னஸ் டூ கஸ்டமர்) ப்ரொஜெக்டர் வணிகம் 100% அதிகரித்தது. ஹோம் ப்ரொஜெக்டர் பிரிவும் ஆண்டுக்கு 20% என்ற விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹோம் ப்ரொஜெக்டர் பிரிவில் ப்ரொஜெக்டரின் 2 புதிய வடிவங்கள் நுழைந்துள்ளன.

முதலாவதாக 4கே அல்ட்ரா ஷார்ட் த்ரோ லேசர் ப்ரொஜெக்டர், இது உங்கள் வாழ்க்கை அறையில் டிவிக்கு மாற்றாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் போர்ட்டபிள் ப்ரொஜெக்டருக்கான எழுச்சி ஆகும். ட்ரூ 4கே டிஸ்ப்ளே கொண்ட ப்ரொஜெக்டர்கள், வயர்லெஸ் போர்ட்டபிள் ப்ரொஜெக்டர்கள் மற்றும் 4கே லேசர் டிவி ஆகியவை இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. அதேபோல் கல்வி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ப்ரொஜெக்டர்களுக்கான தேவை படிப்படியாக மீண்டும் வரும் அதே வேளையில், வரும் மாதங்களில் இந்த போக்கு அதிகரிக்கப் போகிறது.

தொற்றுநோய்க்கு முன்பு, டிஜிட்டல் வகுப்பறையை வைத்திருப்பது ஒரு தேர்வாக இருந்தது. இருப்பினும், கோவிட் தாக்கத்திற்கு பிறகு ஆன்லைன் கல்வி உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களால் வகுப்பறையில் ப்ரொஜெக்டர்கள் கட்டாயமாகி வருகிறது. இந்த காரணங்களால், இந்த வகை விற்பனை அளவு 200% உயர்வைக் கண்டது.

தற்போதைய தயாரிப்புகளின் சிறந்த வெற்றி மட்டுமின்றி, ஹைப்ரிட் தீர்வுகளின் ஒரு பகுதியா விசி கேமரா போன்ற சில சிறியரக தொழில்நுட்பங்களையும் பென்க்யூ கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. டபிள்யூஐடி லைட்டிங் உடன் கூடிய காட்சி தொழில்நுட்பமானது கண் பராமரிப்பு வசதியை எளிதாக்குகிறது.

பென்க்யூ 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழில்துறையில் இருப்பதால், காட்சி தொழில்நுட்பத்தில் அது கண்ட கடுமையான மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்?

பாரம்பரிய தொலைக்காட்சித் திரை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து காட்சித் திரைகள் தொடர்பான தொழில்நுட்ப பரிணாமம் என்பது புரட்சிகரமாகவும் வேகமாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில், ஒரு சிலரின் வீடுகளில் மட்டுமே டிஸ்ப்ளேக்கள் காணப்பட்டது, இன்று ஒரு நுகர்வோர் தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள் / கடிகாரங்கள் மற்றும் பிறவற்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறைந்தது இரண்டு மூன்று முறை டிஸ்ப்ளேக்களை பார்க்க முடியும்.

தொலைக்காட்சிக்கான காட்சித் தொழில்நுட்பம் காலப்போக்கில் வளர்ச்சியடைந்துள்ளது, அவை முந்தைய பெரிய அளவிலான கேதோட் ரே டியூப்களில் (CRT) இருந்து இன்று அல்ட்ரா-ஸ்லிம் ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு (OLED) டிவிகள் வரை அளவு குறைந்துவிட்டன. டச் பேனல்கள், விஆர், IoT உள்ளிட்ட விருப்பங்கள் போன்ற அம்சங்களுடன் தொழில்நுட்ப ரீதியாக இயக்கப்படுகிறது.

தற்போதைய தயாரிப்புகளின் சிறந்த வெற்றி மட்டுமின்றி, ஹைப்ரிட் தீர்வுகளின் ஒரு பகுதியா விசி கேமரா போன்ற சில சிறியரக தொழில்நுட்பங்களையும் பென்க்யூ கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. ஆரம்பத்தில், ஒரு சிலரின் வீடுகளில் மட்டுமே டிஸ்ப்ளேக்கள் காணப்பட்டது, இன்று ஒரு நுகர்வோர் தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள் / கடிகாரங்கள் மற்றும் பிறவற்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறைந்தது இரண்டு மூன்று முறை டிஸ்ப்ளேக்களை பார்க்க முடியும். சிறிய திரைகளில் இருந்து பெரிய திரைகளுக்கு மாறுதல், அதிக அளவிலான அல்ட்ரா-வைட் டிஸ்ப்ளேக்கள், வளைந்த மானிட்டர்களில் அதிவேக கேமிங் ஆகியவை இதன் தேவைகளில் அடங்கும்.

பல்வேறு ஊடக தளங்கள் ஒவ்வொரு நாளும் புதிய உள்ளடக்கத்தை உருவாக்குவதால் பார்வை அனுபவத்தை சிறந்ததாக்குவதற்கான தேவை அதிகரித்து வருகிறது. சிறிய திரைகளில் இருந்து பெரிய திரைகளுக்கு மாறுதல், அதிக அளவிலான அல்ட்ரா-வைட் டிஸ்ப்ளேக்கள், வளைந்த மானிட்டர்களில் அதிவேக கேமிங் ஆகியவை இதன் தேவைகளில் அடங்கும். தொழில்நுட்ப முன்னேற்றங்களும் வடிவமைப்பும் அதன் பார்வையாளர்களின் பார்க்கும் திறனை அதிகரிக்கிறது.

மானிட்டர் பிரிவின் ஒட்டுமொத்த சந்தை அளவு அப்படியே இருந்தாலும், பெரிய அளவிலான மானிட்டர் திரைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. நுகர்வோரின் மேம்பட்ட டிஜிட்டல் தேவைகளின் நேக்கமே இந்த எழுச்சிக்கு ஒரு காரணமாகும்.
குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில், தொற்றுநோய் மக்கள் ஒரு நல்ல மானிட்டர்/திரையை வாங்குவதற்கான விருப்பத்தை அதிகரித்துள்ளது. திரை அளவு மற்றும் யூஎஸ்பி டைப் சி பவர் உள்ளிட்டவைகளை தவிர வாடிக்கையாளர்கள் தற்போது கண் பாதுகாப்பு தொழில்நுட்பம், கழுத்து அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உயரத்திற்கு ஏற்ப அதை சரிசெய்தல் போன்ற பிற சுகாதார அம்சங்களையும் நுகர்வோர்கள் கருத்தில் கொள்கின்றனர்.

பிரத்யேக பேட்டி: நீங்க ரெடியா- பென்க்யூ இந்திய உற்பத்தி விரைவில்!

டிஎல்பி தொழில்நுட்பம் கொண்ட ப்ரொஜெக்டர்கள் டிஸ்ப்ளே தொழில்நுட்பப் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் தொழில்நுட்பமாக மாறி இருக்கின்றன. ஏனெனில் இது சிறந்த வண்ண வெளிப்பாடு ஆதரவு மற்ரும் தூசி புகாத ஆதரவோடு வருகிறது. பல ஆண்டுகளாக, ப்ரொஜெக்டர்கள் எல்இடி இல் இருந்து 4கே எல்இடி ஆக உருவெடுத்திருக்கிறது.

கூடுதலாக, பெரிய பருமனான டிவி திரைகளை மாற்றும் வகையில் லேசர் ப்ரொஜெக்ஷன் டிவிகள் தொடங்கப்பட்டுள்ளன. லேசர் டிவிகள் இப்போது முழுமையாக உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. இது ஒரு உள்ளமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு அமைப்பாகும், இது வீட்டில் எளிதாகப் பார்க்க உதவுகிறது. பிரபலமடைந்த சிறந்த வடிவம் கொண்ட சாதனங்களில் இதுவும் ஒன்றாகும். இது உட்புற மற்றும் வெளிப்புற பயன்பாட்டிற்கு சிறந்த சாதனமாக இருக்கிறது.

மற்றொன்ரு பிரபலமான போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் ஆகும். இது உட்புற மற்றும் வெளிப்புற பயன்பாட்டிற்கான மிகவும் பல்துறை சாதனமாகும். ஆரம்ப நாட்களில், டிஸ்ப்ளே பேனல்கள் பிரபல தளங்களில் மட்டுமே அடிப்படை திரைகளாக இருந்தன. போர்டுரூம்கள் மற்றும் வகுப்பறைகளில் இவை பல பயன்பாடாகக் கிடைக்கின்றன. எல்சிடி-கள், உள்ளமைக்கப்பட்ட இன்ஃபில்ட் கம்ப்யூட்டிங், ஜீரோ பாண்டிங், ஐஆர் டச், கெபாசிட்டிவ் டச் மூலம் அனுபவமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. காட்சி தொழில்நுட்பத் துறையில் இந்த மாற்றம் பல பகுதிகளில் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுத்தது.

பென்க்யூவின் இந்திய சந்தைக்கான திட்டத்தைப் பற்றி எங்களிடம் கூறுங்கள், இந்தியாவில் R&D வசதிகள் மற்றும் உற்பத்தி வசதிகளை முதலீடு செய்து உற்பத்தி செய்யும் திட்டம் உள்ளதா?

பென்க்யூ இந்தியாவில் செய்யப்போகும் இரண்டு முக்கியமான விஷயங்கள், டிடூசி (டேரக்ட் டூ கஸ்டமர்) அதவாது நேரடி வாடிக்கையாளர்கள் விற்பனை தளத்தைத் தொடங்குவதும், 2022க்குள் பேனல்களின் உள்ளூர் உற்பத்தியைத் தொடங்குவதும் ஆகும். சிறந்த தொழில்நுட்பத்துடன் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க பென்க்யூ உறுதி கொண்டுள்ளது.

காட்சித் துறையில் அடுத்த பெரிய மாற்றம் அல்லது மேம்படுத்தல் என்ன?

வீடு, கல்வி, வேலை மற்றும் ஓய்வு போன்றவற்றிற்கு காட்சி திரையை மக்கள் நம்புவது வரும் ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைகாட்சியானது வரையறுக்கப்பட்ட அம்சங்களை மட்டுமே வழங்குவதால், நுகர்வோர் தொழில்நுட்பம் மட்டுமின்றி பாதுகாப்பான பார்வையையும் செயல்படுத்தும் ஸ்மார்ட் ஸ்கிரீன்களை நோக்கி மக்கள் ஆர்வம் திரும்புகிறது. இவைதான் டிஸ்ப்ளே தொழில்நுட்பத் துறையை பெரிதும் மாற்றப் போகிறது.

மேம்பட்ட எல்இடி தொழில்நுட்பம், ஒளி வடிவமைத்தல் மற்றும் நேர்த்தியான பட செயலாக்கம் ஆகியவற்றுடன் தீவிர வளைந்த எல்இடி பெரிய டிஸ்ப்ளே மானிட்டர்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எச்டிஆருக்கு அப்பால் மெட்டாவேர்களின் உலகத்தை படிப்படியாகத் தழுவுவோம், ஏஆர்/விஆர் உள்ளடக்கம் நம் வாழ்வில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

வளைந்த வடிவமைப்புகளுடன் கூடிய கேமிங் மானிட்டர்களுக்கான விற்பனையும் தேவையும் 2022 ஆம் ஆண்டளவில் அதிகரிக்கும். அதேபோல் எச்டிஆர்ஐ, ஏஎம்டி, Trevolo ஆடியோ, கேமிங் மேம்படுத்தல் முறைகள், ஆர்சிஜி, எஸ்பிஜி, விரைவு ஓஎஸ்டி, டிஸ்ப்ளே மேப்பிங், லைட் டியூன் மற்றும் லைட் டியூன் செய்யப்பட்ட நுண்ணறிவு விளையாட்டு ஆகியவை அதிகரித்து வருகிறது. மினி எல்இடி மற்றும் ஓஎல்இடி என்ற பயன்பாடுகளை விட கூடுதல் அம்சத் தேவை அதிகரித்து வருகிறது.

ஸ்மார்ட் டிவிகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், பென்க்யூ தொலைக்காட்சிகள் எதிர்காலத்தில் தொடங்கப்படுமா?

தொலைக்காட்சிகள் பல ஆண்டுகளாக வீட்டு பொழுதுபோக்கிற்கான 'கோ-டு' வடிவங்களாக இருந்தாலும், ப்ரொஜெக்டர்கள் விரைவில் டிவிகளை மாற்றும் என்பது தற்போதைய நுகர்வோர் போக்குகளிலிருந்து தெளிவாகிறது. ப்ரொஜெக்டர்கள் ஸ்மார்ட் அம்சங்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன. அவை கச்சிதமானவை மற்றும் கூடுதல் அம்சங்களை வழங்குகின்றன. பென்க்யூ-ன் லேசர் டிவி ப்ரொஜெக்டர்களின் அல்ட்ரா-ஷார்ட் த்ரோ பிரிவு பயனர்களை சுவர்களுக்கு எதிராக ப்ரொஜெக்டர்களை வைக்க அனுமதிக்கிறது, இது 120 இன்ச் அளவு வரை வளரக்கூடியது.

மற்ற பிராண்டுகளைப் போலல்லாமல், பென்க்யூ வி7050ஐ லேசர் டிவி ப்ரொஜெக்டர் தொகுப்பு 120-இன்ச் ஏஎல்ஆர் டிஸ்ப்ளே உடன் வருகிறது. அதாவது அறையில் சுற்றுப்புற ஒளியின் பிரதிபலிப்பைக் குறைக்கும் தனித்துவமான ஜிக்ஜாக் வடிவத்துடன் கூடிய பல அடுக்கு திரை வகைகள் இது பிரதானமாகும். இது காட்சி அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் கண் பாதுகாப்பையும் செயல்படுத்துகிறது.

பென்க்யூ அதன் போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்துவதற்கான காரணத்தை எனக்குத் தர முடியுமா?

பென்க்யூ எப்போதும் வாடிக்கையாளர் பிரச்சினைகளை எதிர்பார்ப்பது மற்றும் புரிந்துகொள்வதை நோக்கமாக கொண்டிருக்கிறது. எனவே, மதிப்புமிக்க மற்றும் எதார்த்தமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீர்வுகளை உருவாக்குகிறோம். நிலையான கண்டுபிடிப்புகள் மூலம் சிறந்த தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்குகிறோம். காட்சி உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளும் மற்றும் அனுபவிக்கும் ஆற்றலை நாங்கள் மாற்றுகிறோம். இதன் விளைவாக, பென்க்யூ ஆனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது, வீட்டிலிருந்து கற்றுக்கொள்வது மற்றும் வீட்டின் பொழுதுபோக்கு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Exclusive Interview with Managing Director BenQ india: We will start production in India With in 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X